அன்யோலைட்டு

அன்யோலைட்டு (Anyolite) என்பது ஒன்றோடொன்று சேர்ந்து வளர்ந்த பச்சை நிற சோய்சைட்டு கனிமம், கருப்பு/அடர் பச்சை பர்காசைட்டு கனிமம் மற்றும் சிவப்புக் கல் ஆகியவற்றால் ஆன ஓர் உருமாற்றப் பாறையாகும்.[1] தான்சானியாவின் அருசா பகுதியிலும் ஆத்திரியாவிலும் இப்பாறை வகை காணப்படுகிறது. சில நேரங்களில் சோய்சைட்டு என்ற கனிமத்தின் வகையாக தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. அன்யோலைட்டு என்ற சொல் உருமாற்றப் பாறைக்கு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சொல் அல்ல.[2] இதன் பெயர் "பச்சை" என்று பொருள்படும் மாசாய் மொழி சொல்லில் இருந்து அன்யோலைட்டு பெறப்பட்டது. சோய்சைட்டில் அன்யோலைட்டு ரூபி, சிவப்புக்கல் சோய்சைட்டு, தாங்கன்யிகா ஆர்ட்சுடோன் என்ற பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறது.
மாறுபட்ட நிறங்கள் அன்யோலைட்டு கனிமத்தை சிற்பங்கள் மற்றும் பிற அலங்காரப் பொருட்களுக்கு உதவும் பிரபலமான பொருளாக ஆக்குகின்றன. அன்யோலைட்டு முதன்முதலில் 1954 ஆம் ஆண்டு தான்சானியாவின் இலாங்கிடோ மாவட்டத்திற்கு அருகிலுள்ள முண்டராரா சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
2010 ஆம் ஆண்டில், செயலிழந்த நிறுவனமான ரெக்கின் நிறுவனத்திற்குச் சொந்தமான 2 கிலோகிராம் எடையுள்ள தான்சானியாவின் இரத்தினம் என்று அழைக்கப்படும் ஒரு கல், மோசடியாக £11 மில்லியன் என மதிப்பிடப்பட்டது, உண்மையில் இது சுமார் £100 மதிப்புள்ள அன்யோலைட்டின் ஒரு கட்டி என்று கூறப்பட்டது.[3] இறுதியில் £8000 விலைக்கு விற்கப்பட்டது.[4] இந்தக் கல் முதலில் தான்சானியாவின் அருசா நகரத்திற்கு அருகிலுள்ள ஒரு சுரங்கத்திலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.mindat.org/min-27151.html Mindat
- ↑ Metamorphic rocks, A classification and glossary of terms, D. Fettes and J. Desmons ed., Cambridge University Press
- ↑ Jonathan Guthrie (October 1, 2009). "Now £11m Gem of Tanzania hits rock bottom". Financial Times இம் மூலத்தில் இருந்து 2022-12-10 அன்று. பரணிடப்பட்டது.. https://ghostarchive.org/archive/20221210/http://www.ft.com/cms/s/0/f8f46cfe-ae22-11de-87e7-00144feabdc0.html.
- ↑ "Wrekin's '£11m' Gem of Tanzania ruby sold for £8k". BBC News. 16 February 2010.
- ↑ Guthrie, Jonathan; Pearson, Samantha (27 March 2019). "The strange journey of the 'jinxed' jewel". Financial Times இம் மூலத்தில் இருந்து 2022-12-10 அன்று. பரணிடப்பட்டது.. https://ghostarchive.org/archive/20221210/https://www.ft.com/content/74f14930-1b07-11de-8aa3-0000779fd2ac.
வெளி இணைப்புகள்
[தொகு]- Jonathan Guthrie (December 17, 2009). "Ruby rises from rock bottom". Financial Times இம் மூலத்தில் இருந்து January 28, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100128071444/http://www.ft.com/cms/s/0/da6a2ce0-eb46-11de-bc99-00144feab49a.html. பார்த்த நாள்: 2010-01-17.
