அன்னை பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அன்னை பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (Annai College of Engineering and Technology) என்பது தமிழ்நாட்டின், கும்பகோணத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். இது 1995 ஆம் ஆண்டு கே. கே. ஓ முகமது இப்ராகிம் கல்வி அறக்கட்டளையால் நிறுவப்பட்டது. இது 2000 ஆம் ஆண்டு அறக்கட்டளையாக பதிவு செய்யப்பட்டது. இதுவே கும்பகேணத்தின் முதல் சேவை சார்ந்த பொறியியல் கல்லூரி ஆகும்.

இது சென்னை அண்ணா பல்கலைக்கழக- திருச்சிராப்பள்ளி சென்னை - பிராந்திய அலுவலகத்துடன் இணைக்கப்பட்ட ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். இந்த கல்லூரி வளாகமானது 60 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. அன்னை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பாடத் திட்டங்களை இளநிலையில் ஐந்து பாடங்களை வழங்குகியது. இந்த கல்லூரி தற்போது ஆறு இளநிலை பாடங்களை வழங்குகிறது. இந்தப் பாடங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் போன்றவை ஒப்புதல் அளித்துள்ளன.

குறிப்புகள்[தொகு]