அன்னா விக்கர்சு
தோற்றம்
| அன்னா விக்கர்சு | |
|---|---|
| பிறப்பு | சூன் 28, 1852 பொர்தோ |
| இறப்பு | ஆகத்து 1, 1906 (அகவை 54) ரோசுகாஃப் |
| துறை | பாசியியல் |
| அறியப்படுவது | அண்டிலிசின் அல்காவும், கேனரி தீவுகள் |

அன்னா விக்கர்சு (Anna Vickers) (28 சூன் 1852 – 1 ஆகத்து 1906) என்ற பெண் தாவரவியலாளர் பிரான்சு நாட்டின் கடல் பாசி ஆய்வாளராகவும், தாவர சேகரிப்பாளராகவும் திகழ்கிறார்.
பணிகள்
[தொகு]- விக்கர்ஸ், ரொசுகோஃப், நேபிள்சு (இத்தாலி), ஆன்டிப்சு (பிரான்சு), கேனரி தீவுகள், ஆண்டிலீசு ஆகிய இடங்களைச் சுற்றியுள்ள கடல் தாவரங்கள் குறித்து ஆராய்ச்சி செய்தார்.[1] அவர் பிரெஞ்சு இதழ்களில் முக்கிய கட்டுரைகளை வெளியிட்டார்.
- அண்டிலிசு மற்றும் கேனரி தீவுகள் ஆகிய பகுதிகளின் முக்கிய ஆய்வுப் பணிகளுக்காக அறியப்படுகிறார்.
- விக்கேரெசியா (Vickersia) சிவப்பு பாசியின் பேரினப் பெயர், இவர் நினைவாக உருவாக்கப்பட்டுள்ளது.[2][3]
- 54 வயதில் இவர் இறக்கும் போது, பார்பேடியன் (Barbadian) பாசி வகைகளைப் பற்றிய அவரது திட்டமிட்ட புத்தகம் முழுமையடையாமல் விடப்பட்டது.[1] இவருடன் பணியாற்றிய மேரி சாவ் இதை நிறைவு செய்து, 1908 இல் வெளியிட்டார். அவ்வெளியீட்டில், 93 உடற்கூறியல் வரைபடங்கள் தட்டுகளாக, 'ஃபைக்கோலோஜியா பார்பாடென்சிஸ்' (Phycologia Barbadensis) என்ற பெயரில் இவரது மரணத்திற்குப் பிறகு வெளியிடப்பட்டது, மேலும், நிறங்களிட்ட விளக்கப்படங்களை, மெலே ட்ரொட்டெட் (Mlle Trottet) என்பவர் வெளியிட்டார்.
பன்னாட்டு பெயர்சுருக்கத் தரக்குறியீடு
[தொகு]- Monospora herpestica Vickers,(1905) என்ற தாவரத்தில் இவரது பெயர்சுருக்கம் நிறுவப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 Creese, Mary R.S. (2000). Ladies in the Laboratory? American and British Women in Science, 1800-1900: A Survey of Their Contributions to Research. Scarecrow Press. p. 47.
- ↑ "Vickers, Anna (1852-1906) பரணிடப்பட்டது 28 மார்ச் 2016 at the வந்தவழி இயந்திரம். Global Plants website. Accessed March 18, 2016.
- ↑ "Vickersia Karsakoff, 1896" பரணிடப்பட்டது 26 ஏப்ரல் 2020 at the வந்தவழி இயந்திரம். Algaebase website. Accessed March 18, 2016.
- ↑ பன்னாட்டுத் தாவரப் பெயர்கள் குறிப்பேடு. Vickers.