அன்னா ராஜம் மல்ஹோத்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்னா ராஜம் ஜார்ஜ் (மல்ஹோத்ரா) (Anna Rajam George (Malhotra), (சூலை 17, 1927 - செப்டம்பர் 17, 2018)[1] இந்தியாவின் முதல் பெண் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி ஆவார். இவர் 1951 ஆண்டைய பயிற்சிக் குழுவைச் சேர்ந்தவர். பின்னர் தன் சக ஆட்சிப்பணி அதிகாரியான ஆர். என். மல்ஹோத்ராவை மணந்தார்.[2][3]

இவர் கேரளத்தின், ஆலப்புழா மாவட்டம், நிராணம் என்ற ஊரில் ஒட்டவேலை ஓ. ஏ. ஜார்ஜ் மற்றும் அன்னா பால் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவர் மலையாள எழுத்தாளரான பைலோ பாலின் பேத்தி ஆவார். கோழிக்கோட்டில் வளர்ந்த அவர் புரொவிடன்ஸ் மகளிர் கல்லூரி மற்றும் கோழிக்கோட்டிலுள்ள மலபார் கிரிஸ்துவர் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். 1949 இல் அவர் சென்னை பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் தனது முதுநிலைப் படிப்பை முடித்தார். 1950 இல் இந்திய ஆட்சிப்பணி தேர்வில் வெற்றிபெற்று பயிற்சியை நிறைவு செய்தார். அவர் முதலில் பணிபுரிந்த மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் ராஜாஜி முதல்வராக இருந்தபோது, தமிழக ஐ.ஏ.எஸ், பிரிவுக்கு அவர் அனுப்பப்பட்டார். அவருக்குத் துணை ஆட்சியர் பதவி அளிப்பதற்குப் பதிலாக, தலைமைச் செயலகத்தில் பதவியளிக்க ராஜாஜி முன்வந்தார். அதை அன்னா ராஜம் நிராகரிக்கவே, அன்றைய திருப்பத்தூர் மாவட்ட துணை ஆட்சியராகப் பொறுப்பேற்றார். 1989 ஆம் ஆண்டில் அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.thehindu.com/news/cities/mumbai/indias-first-woman-ias-officer-dead/article24971462.ece?homepage=true
  2. Priyadershini S. (2012-03-11). "Grit meets grace". Thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 2015-05-14.
  3. "अन्ना राजम थीं देश की पहली महिला IAS, 67 साल पहले हुआ था सिलेक्शन". www.bhaskar.com. பார்க்கப்பட்ட நாள் 2015-08-24.
  4. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on நவம்பர் 15, 2014. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015. {{cite web}}: Unknown parameter |= ignored (help); Unknown parameter |https://www.webcitation.org/6U68ulwpb?url= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னா_ராஜம்_மல்ஹோத்ரா&oldid=3542122" இலிருந்து மீள்விக்கப்பட்டது