அன்னா பாவ்லோவா
அன்னா பாவ்லோவா | |
---|---|
![]() அன்னா பாவ்லோவா, அண். 1905 | |
பிறப்பு | அன்னா மேத்வியேவ்னா பாவ்லோவா 12 பெப்ரவரி 1881 சென் பீட்டர்சுபெர்கு, உருசியப் பேரரசு |
இறப்பு | 23 சனவரி 1931 டென் ஹாக், நெதர்லாந்து | (அகவை 49)
பணி | பாலே நடனம் |
செயற்பாட்டுக் காலம் | 1899–1931 |
பெற்றோர்கள் |
|
வாழ்க்கைத் துணை | விக்டர் தான்ட்ரே (தி. 1914) [1] |
அன்னா பாவ்லோவ்னா பவ்லோவா (Anna Pavlovna Pavlova, உருசியம்: А́нна Па́вловна Па́влова 12 பெப்ரவரி [யூ.நா. 31 சனவரி] 1881 – 23 சனவரி 1931) உருசியாவின் முன்னணி நடனக் கலைஞர் ஆவார். இவர் இம்பீரியல் உருசிய பாலே மற்றும் செர்ஜி டியாகிலேவின் பாலேஸ் ரஸஸின் முக்கியக் கலைஞராக இருந்தார். ஆனால் தி டையிங் ஸ்வான் என்ற நடன பாத்திரத்தை உருவாக்கியதற்காக மிகவும் அங்கீகரிக்கப்பட்டார். இவர் இந்த நடனத்தை சுமார் 4,000 முறை நிகழ்த்தினார். இந்த குறுகிய பாலே (நான்கு நிமிடங்கள்) ஒரு அன்னத்தின் வாழ்க்கையின் கடைசி தருணங்களைக் கூறுகிறது. மேலும் தனது சொந்த நிறுவனத்துடன், தென் அமெரிக்கா, இந்தியா, மெக்சிகோ மற்றும் ஆத்திரேலியா உட்பட உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்த முதல் நடனக் கலைஞராக இருந்தார்.[2]
இளமை வாழ்க்கை.
[தொகு]
அன்னா மேத்வியேவ்னா பாவ்லோவா சென் பீட்டர்சுபெர்குவிலுள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்தார். அங்கு இவரது தந்தை மேத்வி பாவ்லோவிச் பாவ்லோவ் பணியாற்றினார்.[3] வேளாண்மையைப் பின்னணியாகக் கொண்ட இவரது தாயார், இலியுபோவ் பியோடோரோவ்னா பாவ்லோவா, உருசிய-யூத வங்கியாளரான இலாசர் பாலியாகோவின் வீட்டில் சலவைத் தொழிலாளியாக சிறிது காலம் பணியாற்றினார். அன்னா புகழ் பெற்றபோது, பாலியாகோவின் மகன் விளாடிமிர் இவரை தனது தந்தையின் சட்டவிரோத மகள் என்று கூறினார். ஆனால் இதற்கு ஆதரம் ஏதுமில்லை.[4] பின்னர் அன்னா மேடையேறி நிகழ்ச்சிகளைத் தொடங்கியபோது தனது தந்தைவழிப் பெயரை பாவ்லோவ்னா என்று மாற்றினார்.
பாவ்லோவா, குறைப்பிரசவத்தில் பிறந்த ஒரு குழந்தையாவார். இதன் காரணமாக தொடர்ந்து நோய்வாய்ப்பட்டு வந்தார். கிராமத்திலுள்ள தனது பாட்டி வீட்டில் வளர்ந்தார்.[5] 1890 ஆம் ஆண்டில் இம்பீரியல் மேரின்ஸ்கி நாடக நிறுவனத்தின் மாரியஸ் பெடிபாவின் அசல் தயாரிப்பான தி ஸ்லீப்பிங் பியூட்டி என்ற நிகழ்ச்சிக்கு இவரது தாயார் அழைத்துச் சென்றபோது பாலே கலை மீதான பாவ்லோவாவின் ஆர்வம் தொடங்கியது. இந்த ஆடம்பரமான காட்சி பாவ்லோவாவை ஈர்த்தது. இவரது ஒன்பது வயதில், இவரது தாயார் இவரை இம்பீரியல் பாலே பள்ளியின் தேர்விற்கு அழைத்துச் சென்றார். இவரது இளமை மற்றும் நோயுற்ற தோற்றம் காரணமாக, இவர் நிராகரிக்கப்பட்டார். ஆனால், இவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு 10 வயதில், 1891 இல், முதல் முறையாக மேடையில் தோன்றினார் பெடிபாவின் ஒரு தேவதையின் கதை என்ற தலைப்பில் பாலே பள்ளி மாணவர்களுக்காக அரங்கேற்றினார்.[6]
இம்பீரியல் பாலே பள்ளி
[தொகு]இளம் பாவ்லோவாவின் பாரம்பரிய பாலே பயிற்சி ஆண்டுகள் கடினமாக இருந்தன. நோயால் பாதிக்கப்பட்டிருந்த வளைந்த கால்கள், மெல்லிய கணுக்கால் மற்றும் நீண்ட கைகால்கள் அக்காலத்தின் நடனக் கலைஞருக்கு பிடித்த சிறிய, கச்சிதமான உடலுடன் பொருந்தின. இவரது சக மாணவர்கள் இவரை பலப் புனைப்பெயர்களால் கேலி செய்தனர். ஆனாலும் இதையெல்லாம் பொருட்படுத்தாது, தனது நுட்பத்தை மேம்படுத்த பயிற்சி பெற்றார். அக்காலத்தின் புகழ்பெற்ற ஆசிரியர்களான கிறிஸ்டியன் ஜோஹன்சன், பாவெல் கெர்ட், நிகோலாய் லெகாட் மற்றும் பாலே கலைஞராகவும், செச்செட்டி முறை நிறுவனராகவும் கருதப்படும் என்ரிகோ செச்செட்டி போன்றோருடன் கூடுதல் பயிற்சியைக் கற்றுக்கொண்டார்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lifar, Serge (1959). "The Three Graces: Anna Pavlova, Tamara Karsavina, Olga Spessivtzeva: The Legends and the Truth". Books.google.com.
- ↑ Anna Pavlova's tours of Australia 1926 and 1929, Nla.gov.au
- ↑ Vera Krasovskaya (1972). Russian Ballet Theatre at the Beginning of the XX Century. Dancers // A. P. Pavlova, birth certificate. – Leningrad: Iskusstvo, p. 229
- ↑ Oleg Kerensky quotes Vladmir Polyakov—the son of Lazar Polyakov who claims that Anna was an illegitimate daughter of his father (Oleg Kerensky. Anna Pavlova. N-Y., Dutton Publ., 1973. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-525-17658-6)
- ↑ Victor Dandré (2016). My Wife – Anna Pavlova. – Moscow: Algorithm, pp. 5, 36 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-5-906880-01-7.
- ↑ Andreeva 2019.
- ↑ McDonough, Yona Zeldis (3 November 2016). "Yes, These Famous Ballerinas Are Jewish". Lilith. Retrieved 12 November 2019.
வெளி இணைப்புகள்
[தொகு]காப்பக சேகரிப்புகள்
[தொகு]- Guide to the Collection on Anna Pavlova. Special Collections and Archives, The UC Irvine Libraries, Irvine, California.
பிற இணைப்புகள்
[தொகு]- Anna Pavlova in Australia – 1926, 1929 Tours பரணிடப்பட்டது 5 சூன் 2011 at the வந்தவழி இயந்திரம் – programs and ephemera held by the ஆஸ்திரேலிய தேசிய நூலகம்
- Film of Anna Pavlova
- &btnG=Search+Images Pictures of Anna Pavlova – digitised and held by the ஆஸ்திரேலிய தேசிய நூலகம்
- Creative Quotations from Anna Pavlova
- Andros on Ballet
- Heroine Worship: Anna Pavlova, The Swan
- Anna Pavlova on Encyclopædia Britannica
- Anna Pavlova
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் அன்னா பாவ்லோவா