அன்னா சாண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அன்னா சாண்டி
Anna chandy judge.jpg
நீதிபதி அன்னா சாண்டி
பிறப்புஅன்னா
மே 4, 1905(1905-05-04)
திருவனந்தபுரம், திருவாங்கூர்
இறப்பு20 சூலை 1996(1996-07-20) (அகவை 91)
கேரளா, இந்தியா
தேசியம்இந்தியன்
பணிநீதிபதி
பணியகம்கேரள உயர்நீதிமன்றம்
அறியப்படுவதுஇந்தியாவின் முதல் பெண் நீதிபதி
பதவிக்காலம்9 பிப்ரவரி 1959 - 5 ஏப்ரல் 1967
சமயம்புனித தோமைய கிறித்தவர்

அன்னா சாண்டி (Anna Chandy, 1905-1996) கேரளத்தின் முதல் பெண் வக்கீல் என்ற பெயர் பெற்றவர். இந்தியாவின் முதல் பெண் நீதிபதியாகவும், இந்தியாவின் உயர் நீதிமன்ற முதல் பெண் நீதிபதி ஆகவும் நியமனம் பெற்றவர்.

இளமைப் பருவம்[தொகு]

அன்னா சாண்டி 1905 ல் திருவனந்தபுரத்தில் பிறந்தார். அவர் ஒரு சிரியக் கிறித்தவ குடும்பத்தைச் சார்ந்தவர். 1926 ஆம் ஆண்டில் முதுகலைப் பட்டம் பெற்ற பின்னர், கேரள மாநிலத்தில் சட்டத்தில் பட்டம் பெற்ற முதல் பெண் ஆனார். 1929 ஆம் ஆண்டில் வழக்கறிஞராகப் பதிவு செய்து பணியாற்றித் துவங்கினார். அதே நேரத்தில் ஸ்ரீமதி என்ற இதழைத் தொடங்கி பெண்கள் உரிமைகளுக்காக பாடுபட்டார்.[1]

முதல் தலைமுறை பெண்ணியவாதி[தொகு]

இவர் "முதல் தலைமுறை பெண்ணியவாதி" என்று விவரிக்கப்பட்டார்.[1][2] அன்னா சாண்டி 1931 ஆம் ஆண்டில் ஸ்ரீமுலாம் மக்கள் கூட்டமைப்பிற்கான தேர்தலுக்கு பிரச்சாரம் செய்தார். அவர் போட்டியிலும் செய்தித்தாள்கள் மூலமும் விரோதத்தை சந்தித்தார்.[3] ஆனால் 1932 -34 ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நீதிபதி பதவி[தொகு]

1937 ஆம் ஆண்டில் திருவாங்கூர் சமஸ்தானத்தில் திவானாக பதவி வகித்த சர். சி. பி. ராமசாமி ஐயரால் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இது இந்தியாவில் முதல் பெண் நீதிபதியாகவும், 1948 ஆம் ஆண்டில் செசன்ஸ் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.[1][4] 1959, பெப்ரவரி 9, அன்று அவர் கேரள உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டபோது இந்திய உயர் நீதிமன்றத்தில் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையைப் பெற்றார். அந்தப் பதவியில் 1967, ஏப்ரல் 5 வரை அவர் இருந்தார்.[5]

இறுதி வாழ்க்கை[தொகு]

தனது பணி ஓய்வுக்குப் பின், அன்னா சாண்டி இந்திய சட்ட ஆணையத்தில் பணியாற்றினார். மேலும் ஆத்மகதா (1973) என்ற தலைப்பில் சுயசரிதையை எழுதினார். 1996 இல் அவர் இறந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Devika J. (2005). Herself. Popular Prakashan. பக். xxiv. https://books.google.com/books?id=Xyr6gXmva-gC. 
  2. Raman, K. Ravi, தொகுப்பாசிரியர் (2010). Development, Democracy and the State: Critiquing the Kerala Model of Development. Routledge. பக். 179. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781135150068. https://books.google.com/books?id=IGiMAgAAQBAJ&pg=PA179. 
  3. Mukhopadhyay, Swapna, தொகுப்பாசிரியர் (2007). The Enigma of the Kerala Woman: A Failed Promise of Literacy. Berghahn Books. பக். 113. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788187358268. https://books.google.com/books?id=OZglbETspkcC&pg=PA113. 
  4. "First to appoint a lady advocate – Mrs. Anna Chandy — as District Judge.". மூல முகவரியிலிருந்து 5 July 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-05-27.
  5. "Former Judges of High Court of Kerala". பார்த்த நாள் 2008-05-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னா_சாண்டி&oldid=3285752" இருந்து மீள்விக்கப்பட்டது