அன்னாசாகேப் சகசுரபுத்தே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்னாசாகேப் சகசுரபுத்தே
பிறப்புஇந்தியா
பணிஇந்திய சுதந்திர ஆர்வலர்
காந்தியவாதி
சமூக சேவகர்
அறியப்படுவதுநிலக்கொடை இயக்கம்
விருதுகள்பத்ம பூசண்

அன்னாசாகேப் சகசுரபுத்தே (Annasaheb Sahasrabuddhe) இவர் ஓர் இந்திய சுதந்திர ஆர்வலரும், காந்தியவாதியும், சமூக சேவகரும் மற்றும் வினோபா பாவே அவர்களால் தொடங்கப்பட்ட நிலக்கொடை இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். வர்தாவில் சேவா கிராமம் அறக்கட்டளையின் செயலாளராக இருந்த இவர், 1960 ல் இந்திய திட்டக் குழு தலைமையில் இந்திய அரசு அமைத்த ஊரக தொழில்துறை நிலைக்குழுவுக்குத் தலைமை தாங்கினார்.[1]

நிலக்கொடை இயக்கத்தின் ஒரு பகுதியாக வினோபா பாவே கிராமதானத் திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது, ஒடிசாவின் கோராபுட் மாவட்டத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த சகசுரபுத்தேவிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இவர் இந்த திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.[2]

இவர் புகழ்பெற்ற சமூக ஆர்வலரான பாபா ஆம்தேவின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தார்.[3] சமுதாயத்திற்கு இவர் செய்த பங்களிப்பிற்காக இந்திய அரசு 1970 ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமை கௌரவமான பத்ம பூசண் விருது இவருக்கு வழங்கியது .[4]

இவரது வாழ்க்கை கதை மாஜி ஜாதன் (என் வளர்ப்பு) என்ற பெயரில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய கரிம வேளாண்மைச் சங்கம் இவரது நினைவாக ஆண்டுதோறும் அன்னாசாகேப் சசுரபுத்தே விருதை வழங்கி வருகிறது.[5]

குறிப்புகள்[தொகு]

  1. "Earlier in history". Anand Wan. 2016. Archived from the original on 21 August 2016. பார்க்கப்பட்ட நாள் 14 July 2016.
  2. M. L. Dantwala (January 1957). "Dawn at Koraput" (PDF). Economic Weekly. பார்க்கப்பட்ட நாள் 14 July 2016.
  3. "In Gratitude". Fearless Mind. 2016. பார்க்கப்பட்ட நாள் 14 July 2016.
  4. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016. {{cite web}}: Unknown parameter |= ignored (help); Unknown parameter |https://www.webcitation.org/6U68ulwpb?url= ignored (help)
  5. "M. Balasubramanian, coordinator, OFAI's State Secretariat, Tamil Nadu honoured with Annasaheb Sahasrabuddhe Award for 2012". Organic Farming Association of India. 2016. Archived from the original on 27 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 14 July 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)