அன்னபூரணி சுப்ரமணியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அன்னபூரணி சுப்ரமணியம்
பிறப்புபாலக்காடு
வாழிடம்இந்தியா
தேசியம்இந்தியர்
துறைவானியற்பியல்
பணியிடங்கள்இந்திய வானியற்பியல் நிறுவனம்
கல்வி கற்ற இடங்கள்பாலக்காடு அரசு விக்டோரியா கல்லூரி
ஆய்வு நெறியாளர்பேரா. இராம்சாகர்
பிள்ளைகள்2

அன்னபூரணி சுப்ரமணியம் , (Annapurni Subramaniam) பெங்களூரு இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் பணிபுரியும் அறிவியலாளர் ஆவார். இவர் விண்மீன் கொத்துகள், விண்மீன் படிமலர்ச்சி, பால்வெளி விண்மீன்தொகை, மெகல்லான் முகில்கள் பற்றி ஆய்வு செய்துவருகின்றார்.[1][2]

கல்வி[தொகு]

அன்னபூரணி பாலக்காடு விக்டோரியா கல்லூரியில் அறிவியலில் பள்ளிக்கல்வியை முடித்தார்.[1] இவர் தன் முனைவர் பட்டத்தினை 1996 ஆம் ஆண்டில் இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் விண்மீன் கொத்துகள் ஆய்விலும், விண்மீன் உருவாகும் விதம் பற்றிய ஆய்விலும் பெற்றுள்ளார்.[2][3]

வாழ்க்கைப் பணி[தொகு]

இவர் 1990-96 கால இடைவெளியில் இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் ஆய்வாளராக இருந்தார்.பிறகு 1998இல் அந்நிறுவனத்திலேயே முதுமுனைவர் பட்ட ஆய்வாளரானார். இப்போது இவர் அங்கு அறிவியலாளராகப் பணிபுரிகிறார்.[2] இவர் பன்னாட்டு வானியல் ஒன்றியத்தில் முனைவாகச் செயல்படும் உறுப்பினராக உள்ளார். [4]

ஆய்வுப் புலங்கள்[தொகு]

அன்னபூரணியின் ஆய்வுப் புலங்களாவன:

 • விண்மீன் கொத்துகள் (திறந்தநிலை, விண்கோளக வகைகள்)
 • விண்மீன் உருவாக்கமும் முந்து-MS விண்மீன்களும்
 • செவ்வியல் Beவகை & ஃஎர்பிக் Ae/Beவகை விண்மீன்கள்
 • நட்சத்திர மண்டலங்களின் கட்டமைப்பு
 • மெகல்லான் முகில்கள்
 • விண்மீன் தொகை [2]

இவரது வெளியீடுகள் விண்வெளியியல் தரவுத்தளம் எனும் இணையத்தளத்தில் உள்ளன.

நடப்புத் திட்டங்கள்[தொகு]

இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் பின்வரும் நடப்புத் திட்டங்களில் ஈடுபட்டுள்ளார்.

 • விண்மீன்கொத்துகளில் உள்ள விண்மீன்களின் உமிழ்வரிகள்
 • இளம் விண்மீன்கொத்துகளின் உருவாக்க வரலாறு
 • முந்து திறந்தநிலைக் கொத்துவகைகள் -முந்து விண்பொருள் வட்டுகளின் ஆழ்நிலை ஆய்வு
 • ஆய்வு செய்யப்படாத திறந்தநிலைக் கொத்துகளின் துல்லியமான ஒளிர்வளவியல்
 • சிறிய மெகல்லான் முகிலின் ஒளிர்வட்டம் (Halo)
 • பெரிய மெகல்லான் முகிலின் விண்மீன்தொகை
 • புறவரம்பு அளக்கை: மெகல்லான் முகில்கள் [2]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "Women in Science - Annapurni S". பார்த்த நாள் March 22, 2014.
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Profile - IIA Annapurni S". பார்த்த நாள் March 22, 2014.
 3. "Annapurni Subramaniam". Sheisanastronomer.org. பார்த்த நாள் 2014-03-24.
 4. "Annapurni Subramaniam". IAU (2013-01-07). பார்த்த நாள் 2014-03-24.