அன்னதானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்ன தானம் (About this soundஒலிப்பு ) (Soup kitchen) என்றால் உணவைப் பசியுற்றோருக்கு உவந்து வழங்குவதைக் குறிக்கும். மேலும் பசியுற்றோருக்கு உணவளிப்பது சிறந்த மனிதப் பண்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலைநாடுகளில் உணவு வங்கிகள் மூலமும் உறையுள்கள் மூலமும் உணவற்றோர்க்கு உணவு வழங்கப்படுகிறது.

சொற்பிறப்பியல்[தொகு]

அன்னம் என்றால் சோறு ஆகும்.[1] தானம் என்றால் கொடை என்று பொருள்படும். தானம் என்பது தா எனும் வினையின் தொழிற்பெயர் வடிவமாகும் என்பது தேவநேயப் பாவாணரின் கூற்று ஆகும்.

கோவில்களில் அன்னதான திட்டம்[தொகு]

2011 ஆம் ஆண்டு தமிழக அரசு கோவில்களில் அன்னதானத் திட்டம் என்பதை அறிமுகம் செய்தது. இதன் மூலம் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் வருகின்ற கோவில்களில் மதிய வேளையில் அன்னதானம் தர வழி வகுக்கப்பட்டது. [2] இதன் அடிப்படையில் குறைந்தது 25 நபர்களுக்கும் அதிகபட்சம் 200 நபர்களுக்குமாக அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.


மேற்கோள்கள்[தொகு]

  1. விக்சனரி, தானம்
  2. [தினமலர் ஜூலை 07,2013 இதழ் கோவில்களில் அன்னதானத் திட்டம் செயல்படுத்துவதில் தடுமாற்றம்]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னதானம்&oldid=3524065" இருந்து மீள்விக்கப்பட்டது