அன்னகாரன் குப்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்னகாரன் குப்பம்
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கடலூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

அன்னகாரன் குப்பம் (Annakarankuppam) என்பது தமிழ்நாட்டின், கடலூர் மாவட்டத்தில் பண்ணுருட்டி வட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இந்த கிராமம் மாவட்டத் தலைநகரான கடலூரில் இருந்து 35 கி.மீ. தொலைவும், பண்ணுருட்டியில் இருந்து 9 கி.மீ. தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 203 கி.மீ. தொலைவிலும் உள்ளது.[4] இந்த கிராமத்தில் உள்ள இரண்டு தெருக்களில் வாழும் குறிப்பிட்ட வகையறா மக்களின் வீடுகளில் கதவு வைக்கப்படுவதில்லை. கதவுக்கு பதில் மரத்தால் செய்த படல் கொண்டோ அல்லது துணிகொண்டோ வாசலை அடைத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

வரலாறு[தொகு]

இந்த மக்களின் முன்னோர்கள் காலத்தில் எல்லா வீட்டுக்கும் கதவு இருந்துள்ளது. ஒரு காலத்தில் இவர்களின் குடும்பக் கன்னிப் பொண் ஒருவரை ஏதோ ஒரு காரணத்தால் கதவில் வைத்து நெறித்துக் கொன்றுவிட்டனர். அதன்பிறகு ஊரில் அந்நக் கன்னிப்பெண்ணின் ஆவியால் வேண்டாத நிகழ்வுகள் ஏற்பட்டதாக மக்கள் நினைத்தனர்.

இதற்குப் பரிகாரம் கேட்டபொழுது, ‘எனக்கு ஏற்பட்ட கதி இன்னொரு பொண்ணுக்கு ஏற்படக் கூடாது. அதனால், நீங்கள் யாரும் கதவு வெத்து வீடு கட்டக்கூடாது. நானே கதவாக இருந்து காவல் காப்பேன்' என்று அந்தப் பொண்னின் ஆவி கூற, அன்றிலிருந்து வீடுகளுக்கு கதவுகள் அமைப்பதில்லை. அந்தப் பொண்ண பூவாடைக்காரி என்ற பெயரால் வணங்கிவருகின்றனர்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "Annakarankuppam". http://www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 7 சூலை 2017. {{cite web}}: External link in |publisher= (help)
  5. கரு.முத்து (6 சூலை 2017). "'கதவு வெச்சு வீடு கட்டாதே..!'- கண்டிஷன் போட்ட கன்னி தெய்வம்". செய்திக் கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 7 சூலை 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னகாரன்_குப்பம்&oldid=3588913" இலிருந்து மீள்விக்கப்பட்டது