அன்டோனியோ டமாசியோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அன்டோனியோ டமாசியோ

அன்டோனியோ டமாசியோ (Antonio Damasio) போர்த்துக்கல்லில் பிறந்த அமெரிக்க நரம்பியல் அறிஞர் ஆவார். தென் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார்.[1]

பிறப்பும் கல்வியும்[தொகு]

போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பனில் பிறந்த அன்டோனியோ டமாசியோ, லிஸ்பன் பல்கலைக்கழகத்தில் மருத்துவப்பள்ளியில் மருத்துவம் பயின்று, நரம்பியலில் ஆய்வுப் பட்டம் பெற்றார். பாஸ்டனில் அப்பாசியா ஆய்வு நடுவத்தில் நார்மன் கெஸ்ச்விந்த் மேற்பார்வையில் நடத்தை தொடர்பான நரம்பியலை முனைந்து ஏடுபட்டு ஆராய்ச்சி செய்தார்.

நரம்பியல் ஆராய்ச்சி[தொகு]

மூளைப் பாதிப்பு ஏற்பட்ட நோயாளிகளை ஆராய்ச்சி செய்து நூல்கள் எழுதி வெளியிட்டார். மூளைக்கும் விழிப்பு நிலைக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய்ந்தார். சமூகப் புரிதல், தீர்மானித்தல் போன்றவை உணர்வுகளால் உண்டாகின்றன என்பதை நரம்பியல் அறிவியலைக் கற்று ஆய்ந்து தெளிந்தார். உடல், உணர்வு, மூளை ஆகியன ஒன்றுக்கொன்று தொடர்பும் இயைவும் உடையவை என்ற அடிப்படையில் ஆய்வு செய்து நூல்கள் எழுதினார். இவருடைய நூல்கள் 30 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

சான்றாவணம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்டோனியோ_டமாசியோ&oldid=2748777" இருந்து மீள்விக்கப்பட்டது