அன்டோனிசு சமராசு
அன்டோனிசு சமராசு Αντώνης Σαμαράς நாடாளுமன்ற உறுப்பினர் | |
---|---|
![]() | |
185வது கிரீசின் பிரதமர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 20 சூன் 2012 | |
குடியரசுத் தலைவர் | கரோலோசு பபோலியசு |
முன்னவர் | பனகியோடிசு பிக்ரம்மெனோசு |
புதிய சனநாயகம் கட்சித் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 30 நவம்பர் 2009 | |
முன்னவர் | கோஸ்டாஸ் கரமான்லிஸ் |
எதிர்க்கட்சித் தலைவர் | |
பதவியில் 30 நவம்பர் 2009 – 19 சூன் 2012 | |
பிரதமர் | ஜார்ஜ் பாபன்ட்ரோ |
முன்னவர் | ஜார்ஜ் பாபன்ட்ரோ |
பின்வந்தவர் | அலெக்சிஸ் சிப்ராசு |
வெளியுறவுத் துறை அமைச்சர் | |
பதவியில் 11 ஏப்ரல் 1990 – 13 ஏப்ரல் 1992 | |
பிரதமர் | கோன்ஸ்டான்டினோசு மிட்சோடாகிசு |
முன்னவர் | ஜார்ஜியோசு பாபோலியசு |
பின்வந்தவர் | கோன்ஸ்டான்டினோசு மிட்சோடாகிசு |
பதவியில் 23 நவம்பர் 1989 – 16 பெப்ரவரி 1990 | |
பிரதமர் | செனபோன் சோலோடாசு |
முன்னவர் | ஜார்ஜியோசு பாபோலியசு |
பின்வந்தவர் | ஜார்ஜியோசு பாபோலியசு |
நிதி அமைச்சர் | |
பதவியில் 2 சூலை 1989 – 12 அக்டோபர் 1989 | |
பிரதமர் | சான்னிசு சான்னெடாகிசு |
முன்னவர் | திமித்ரிசு சோவோலாசு |
பின்வந்தவர் | ஜியார்ஜியோசு அகபிடோசு |
மெசேனியா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 17 மே 2012 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 23 மே 1951 ஏதென்ஸ், கிரீசு |
அரசியல் கட்சி | புதிய சனநாயகம் |
வாழ்க்கை துணைவர்(கள்) | ஜார்ஜியா கிரெடிகோசு |
பிள்ளைகள் | லெனா கோசுடாசு |
படித்த கல்வி நிறுவனங்கள் | அம்ஹெர்ஸ்ட் கல்லூரி ஹார்வர்டு பல்கலைக்கழகம் |
சமயம் | கிரேக்க வழமைவாதம் |
இணையம் | அலுவல்முறை வலைத்தளம் |
அன்டோனிசு சமராசு Antonis Samaras (Antonis Samaras, கிரேக்க மொழி: Αντώνης Σαμαράς, பிறப்பு 23 மே 1951) ஓர் கிரேக்க பொருளியலாளரும் அரசியல்வாதியும் ஆவார். கிரீசின் முக்கிய பழமைவாதக் கட்சியான புதிய சனநாயகக் கட்சியின் தலைவராக 2009ஆம் ஆண்டு முதல் உள்ளார். சூன் 20, 2012 அன்று கிரீசின் 185வது பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.[1] 1989ஆம் ஆண்டில் நிதி அமைச்சராகவும் பின்னர் 1989 முதல் 1990 வரையும் 1990 முதல் 1992 வரையும் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். 2009ஆம் ஆண்டில் பண்பாட்டு அமைச்சராகப் பணியாற்றினார்.
1993ஆம் ஆண்டில் அவர் ஏற்படுத்திய பிரச்சினையால் தாம் அமைச்சராகப் பணியாற்றிய புதிய சனநாயகக் கட்சியின் அரசு கவிழக் காரணமாக இருந்தார். இருப்பினும் 2004ஆம் ஆண்டில் அக்கட்சியில் மீண்டும் இணைந்து 2009ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அக்கட்சியின் உட்கட்சித் தேர்தலில் கடுமையான போட்டிக்கிடையில் தேர்ந்தெடுக்கப்பட்டு தலைவராக பொறுப்பேற்றார்.[2] 1974ஆம் ஆண்டில் உருவான இக்கட்சியின் ஏழாவது தலைவராவார்.
வாழ்க்கை வரலாறு[தொகு]
ஏதென்சில் பிறந்த சமராசு அங்கு அவரது முப்பாட்டனார் நிறுவிய ஏதென்சு கல்லூரியில் கல்வியைத் துவங்கி 1974இல் அம்ஹெர்ஸ்ட் கல்லூரியில் பொருளியலில் பட்டம் பெற்றார். தொடர்ந்து ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் நிர்வாக மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றார். கிரேக்க நாடாளுமன்றத்தில் மெசேனியா என்றத் தொகுதியின் உறுப்பினராக 1977-1996, 2007 - நடப்பு காலகட்டங்களில் தேர்ந்தெடுகப்பட்டுள்ளார். மேலும் நிதி, வெளியுறவு மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சராக இருந்துள்ளார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Antonis Samaras sworn in as new Greece prime minister". BBC. 20 June 2012. 20 June 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "ND heads for tense election showdown". Kathimerini. 30 November 2009. http://www.ekathimerini.com/4dcgi/_w_articles_politics_100006_28/11/2009_112865. பார்த்த நாள்: 30 November 2009.
வெளி இணைப்புகள்[தொகு]
- Official website of Antonis Samaras (in Greek) பரணிடப்பட்டது 2010-08-11 at the வந்தவழி இயந்திரம்