அந்தீமசுக்கு

ஆள்கூறுகள்: 32°27′36″N 48°21′33″E / 32.46000°N 48.35917°E / 32.46000; 48.35917
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அன்டிமெசுக்கு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Andimeshk
اندیمشک
City
andimeshk
andimeshk
Andimeshk is located in ஈரான்
Andimeshk
Andimeshk
ஆள்கூறுகள்: 32°27′36″N 48°21′33″E / 32.46000°N 48.35917°E / 32.46000; 48.35917
Country ஈரான்
ProvinceKhuzestan
CountyAndimeshk
BakhshCentral
ஏற்றம்176 m (577 ft)
மக்கள்தொகை (2016 Census)
 • நகர்ப்புறம்135,116 [1]
நேர வலயம்IRST (ஒசநே+3:30)
 • கோடை (பசேநே)IRDT (ஒசநே+4:30)
இணையதளம்www.andimeshk.ir
டெஸ் அணை ஏரி
seyhe
கார்க்கே அணை
chamsabz Dez நதி)

அன்டிமெசுக்கு (Andimeshk, பாரசீக மொழி: اندیمشک‎, also Romanized as Āndīmeshḵ) என்ற இந்த நகரம், ஈரானின் கூசத்தான் மாகாணத்தின் அன்டிமெசுக்குக் கவுன்டியின் தலைநகரம் ஆகும். அன்டிமெசுக்கு நகரமானது, சூசு (Shush) நகருக்கு வடக்கே, சுமார் 34 கிலோமீட்டர்கள் (21 mi) தொலைவில் அமைந்துள்ளது. தெகுரானுக்கும் அகுவாசுக்கும் இடையிலான தொடருந்து பாதைக்கருகில் அமைந்துள்ளது. இந்த பெயரானது, பொத்தேமியாவிலிருந்து உர் III காலத்திலிருந்து, கி.மு. 21 முதல் 20 ஆம் நூற்றாண்டு வரையில், "ஆடம்ஷாக்" (Adamshakh) வடிவத்தில், "முதலை நகரம்" என்று பொருள்படும் பெயரில் அழைக்கப்பட்டது. பின்னர், "ஏராளமான வெண்ணெய்"(Andamaska" அல்லது Andimaska) என்ற பொருள்படும் சொல்லில் அழைக்கப்பட்டது. அதன் பிறகு, உள்ளூர் கிராமங்களான கெய்ல்-ஏபி, லூர் (Gheel-AB, Lour), இரண்டு கோட்டைகள் ஆகியன, இந்நகருடன் இணைக்கப் பட்டன.[2] 1956 ஆம் ஆண்டு இந்த நகராட்சி என்ற நகராண்மைக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது.

வரலாறு[தொகு]

பகலவி வம்ச காலத்தில், அன்டிமெசு நகரமானது, அதன் இருப்பிட அமைவாலும், இயற்கை வளங்களின் காரணமாகவும்,புதிய மேம்பாட்டுத் திட்டங்களைப் பெற்று வளர்ந்தது. ஒரு இராணுவ தொடருந்துக் கிடங்கும் (Dokoohe), ஒரு அலுமினிய தொழிற்சாலையும், வேறு பல தொழிற்சாலைகளும் தொடங்ப்பட்டன. 1929 ஆம் ஆண்டில், இரண்டாம் உலகப் போரின் போது, நெடும் எண்ணெய் குழாய்கள், உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு இடமான அபாடான், ஈரான் நகரலிருந்து, இந்நகருக்குப் போடப்பட்டது. பிறகு, இந்நகரிலிருந்து எரிபொருட்கள் சரக்குந்துகளில் ஏற்றப்பட்டு, சோவியத் யூனியனுக்கு கொண்டு செல்லப்பட்டது. 1955 ஆம் ஆண்டில் இந்த குழாய் நுட்பமானது, தெகுரான் நகர் வரை நீட்டிக்கப்பட்டது.[3] இந்த நகரத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் குசி (Khuzi) வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.

தொல்பொருளியல்[தொகு]

உலகின் மிகப் பழமையான நாகரிகங்களில் சில வட கூசித்தான் மாகாணம் இருந்து வந்துள்ளது. சோகாமிஷ் மலைகள் வெவ்வேறு காலகட்டங்களில் இருந்து 8,000 ஆண்டுகளுக்கும் மேலான, வரலாற்றுச் சுவடுகளைக் கொண்டுள்ளன. மேலும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், இந்த விடியல் நகரத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.[3] சூசாவின் ஜான்பில் கோயில் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் வாழ்ந்த மக்களின் அறிவை எடுத்துக் காட்டுகிறது. சுசட்டர் நீர்வீழ்ச்சிகள் ஈரானிய பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தின் சின்னமாகும். டெசுபுல்லின் பழைய பாலம் பாரசீக அதிகாரத்தின் சின்னமாகக் கருதப்படுகிறது. [ யார்?

கார்கே அணை[தொகு]

இந்த அணையானது, அமெரிக்க பன்னாட்டு நிறுவனத்தால் கட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த அணையானது, வனவிலங்குகளின் வாழ்க்கை வட்டங்களைச் சேதப்படுத்தியது.   இந்த அணை வடமேற்கு மாகாணமான, கூசித்தான் மாகாணத்தின் உள்ள கார்கே (Karkheh) ஆற்றில் உள்ளது. இது 127 மீட்டர் உயரமும், 5.9 பில்லியன் கன மீட்டர் நீர்த்தேக்கத் திறனும் கொண்டது. 320,000 எக்டேர் நிலத்திற்கு நீர்ப்பாசனம் செய்வதற்கும், 520 மெகாவாட் நீர் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கும், கீழ்நிலை வெள்ளத்தைத் தடுப்பதற்கும் கார்கே அணை வடிவமைக்கப்பட்டுள்ளது. 1956 ஆம் ஆண்டில், டி.வி.ஏ-வின் முன்னாள் தலைவரான டேவிட் ஈ (David E. Lilienthal) இந்த அணைக்கட்டுவது குறித்து கணிப்புகள் நடந்தன. பின்னர், 1990 ஆம் ஆண்டில், இறுதி ஆய்வுகள் இசுலாமிய புரட்சிக் காவற்படையினரால் (Islamic Revolutionary Guards Corps (IRGC)) செய்யப்பட்டன. 1992 ஆம் ஆண்டு கார்கே அணையில் கட்டுமானப் பணிகளை, மகாப் கோட்ஸ் (Mahab Ghods) ஆலோசனைப் பொறியாளர்களால் தொடங்கப்பட்டது. அணை 2001 இல், கட்டுமானப் பணி நிறைவடைந்தது. கட்டுமானத்தின் போது, 120 ஒப்பந்தங்கள், எட்டுக்கும் மேற்பட்ட ஆலோசனை நிறுவனங்களும், இந்த அணையில் வேலை செய்தன. 5,000 தொழிலாளர்கள் அணை கட்டிய போது, அதில் 40 பேர் இறந்தும் உள்ளனர்.[4] மலைகளில் அணையின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மின்நிலையத்தினையும் (powerhouse) பார்வையிட முடியும். இந்நிலையத்தில், எட்டு செங்குத்து பிரான்சிசு விசையாழிகள் (Francis turbine) உள்ளன. அணையின் தற்போதைய சிக்கல் யாதெனில், நீர்உள்வரவுப் பகுதிகளில் மண் அரிப்பு காரணமாக, இந்த அணையின் நீர்த்தேக்க திறனானது, ஆண்டு தோறும் குறைந்து வருவதே ஆகும்.

காலநிலை[தொகு]

அன்டிமெசுக்கு நகரானது, கோப்பன் காலநிலை வகைப்பாட்டின் படி, வெப்பமான அரை வறண்ட காலநிலையைக் கொண்டுள்ளது. (BSh) மிகவும் வெப்பமான கோடைக்காலமும், லேசான குளிர்காலமும் கொண்ட வானிலையைப் பெற்றுள்ளது. தெற்கு ஈரானின் பெரும்பாலான பகுதிகளை விட, இந்நகரில் மழைப்பொழிவு அதிகமாக உள்ளது. ஆனால் இது நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதியில் மட்டுமே நிகழ்கிறது. இருப்பினும் சில நேரங்களில் இது 250 மில்லிமீட்டர்கள் (9.8 அங்) மழைப் பொழிகிறது.

தட்பவெப்ப நிலைத் தகவல், Andimeshk
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 28.0
(82.4)
29.0
(84.2)
36.0
(96.8)
40.5
(104.9)
46.5
(115.7)
50.0
(122)
53.6
(128.5)
52.0
(125.6)
48.0
(118.4)
43.0
(109.4)
35.0
(95)
29.0
(84.2)
53.6
(128.5)
உயர் சராசரி °C (°F) 17.2
(63)
19.6
(67.3)
24.1
(75.4)
30.0
(86)
37.5
(99.5)
43.7
(110.7)
46.0
(114.8)
44.9
(112.8)
41.7
(107.1)
34.8
(94.6)
26.2
(79.2)
19.3
(66.7)
32.08
(89.75)
தினசரி சராசரி °C (°F) 10.8
(51.4)
13.2
(55.8)
17.3
(63.1)
22.8
(73)
29.9
(85.8)
35.1
(95.2)
37.0
(98.6)
35.8
(96.4)
32.0
(89.6)
25.6
(78.1)
17.9
(64.2)
12.5
(54.5)
24.16
(75.49)
தாழ் சராசரி °C (°F) 5.3
(41.5)
6.8
(44.2)
10.0
(50)
14.7
(58.5)
20.5
(68.9)
23.8
(74.8)
26.2
(79.2)
25.5
(77.9)
21.1
(70)
16.2
(61.2)
10.8
(51.4)
6.8
(44.2)
15.64
(60.16)
பதியப்பட்ட தாழ் °C (°F) −9.0
(16)
-4.0
(24.8)
−2.0
(28)
3.0
(37.4)
10.0
(50)
16.0
(60.8)
19.0
(66.2)
16.5
(61.7)
10.0
(50)
6.0
(42.8)
1.0
(33.8)
−2.0
(28)
−9
(16)
மழைப்பொழிவுmm (inches) 100.6
(3.961)
60.0
(2.362)
50.2
(1.976)
34.5
(1.358)
9.2
(0.362)
0.0
(0)
0.2
(0.008)
0.0
(0)
0.0
(0)
7.4
(0.291)
39.1
(1.539)
83.2
(3.276)
384.4
(15.134)
ஈரப்பதம் 75 68 59 49 32 22 24 28 29 40 59 73 46.5
சராசரி மழை நாட்கள் 9.9 8.1 8.1 6.5 3.0 0.0 0.1 0.0 0.0 2.1 6.2 8.0 52
சூரியஒளி நேரம் 131.6 158.4 192.3 217.7 272.5 325.6 322.7 317.0 291.3 234.8 158.2 121.9 2,744
ஆதாரம்: NOAA (1961-1990)[5]

குறிப்பிடத்தக்கன[தொகு]

  • Qadam Kheyr Qalâvand இன்,[6][7] Lurish பெண் வீராங்கனை
  • சையத் அப்தேவலி, தேசிய மல்யுத்த விளையாட்டு வீரர்
  • ஹபிபுல்லா அக்லகி, தேசிய மல்யுத்த விளையாட்டு வீரர்
  • பாரசீக அகராதி ஏ.ஏ. தேஹ்கோடா.
  • [1] பரணிடப்பட்டது 2013-04-15 at Archive.today   [ <span title="Dead link since October 2016">நிரந்தர இறந்த இணைப்பு</span> ][ <span title="Dead link since October 2016">நிரந்தர இறந்த இணைப்பு</span> ]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.amar.org.ir/english
  2. Iranica
  3. 3.0 3.1 Encyclopaedia Iranica
  4. http://www.industcards.com/hydro-iran.htm பரணிடப்பட்டது 2012-09-08 at Archive.today Hydroelectric Power Plants in Iran
  5. "Andimeshk Climate Normals 1961-1990". National Oceanic and Atmospheric Administration. பார்க்கப்பட்ட நாள் December 28, 2012.
  6. تاریخ جغرافیایی و اجتماعی لرستان، حمید ایزدپناه،۱۳۷۶، تهران، انجمن آثار و مفاخر فرهنگی
  7. موسیقی در فرهنگ لرستان، اسکندرامان الهی بهاروند، ۱۳۸۴، نشر افکار
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தீமசுக்கு&oldid=3792754" இலிருந்து மீள்விக்கப்பட்டது