உள்ளடக்கத்துக்குச் செல்

அன்டர் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்டர் கோட்டை
கன்னட் தாலுகா, அவுரங்காபாத் மாவட்டம், மகாராட்டிரம்
ஆள்கூறுகள் 20°16′N 75°08′E / 20.27°N 75.13°E / 20.27; 75.13
இடத் தகவல்
உரிமையாளர் இந்தியா இந்திய அரசு

அன்டர் கோட்டை (Antur Fort) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் அவுரங்காபாத் மாவட்டத்தில் கன்னட் தாலுகாவில் சிம்னபூர் கிராமத்திற்கருகில் உள்ள ஒரு கோட்டை ஆகும். [1] இந்த நினைவுச்சின்னம் மகாராஷ்டிரா மாநில, தொல்பொருள் துறையால் பாதுகாக்கப்படுகிறது. [2] [3]

வரலாறு[தொகு]

இந்த கோட்டை 15 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஒரு மராட்டியத் தலைவரால் கட்டப்பட்டு பின்னர் அவரது பெயர் கொண்டு அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது சிம்னாபூர் கிராமத்தில் வசிக்கும் டோன் சமூகத்தால் உருவாக்கப்பட்ட கோட்டை என்றும் கூறப்படுகிறது. இக்கோட்டையின் அமைவிடத்திற்கு கிழக்கில் நாகபூர் மற்றும் ஜல்னா, மேற்கில் மெகவர் மற்றும் சாலிசுகான், வடக்கே அன்டூர் மற்றும் புர்ஹான்பூர் மற்றும் தெற்கில் தெளலதாபாத் மற்றும் அகமத்நகர் ஆகியவை அமைந்துள்ளன. இந்த இடங்களின் திசையைக் குறிக்கும் ஒரு கல்வெட்டு உள்ளது. இந்தக் கல்வெட்டானது கோட்டை முர்தாசா நிஜாம் சாவின் ஆட்சியில் கட்டப்பட்டதாகக் கூறுகிறது. கோட்டைக்குள் ஒரு சிறிய மசூதியில் பாரசீக கல்வெட்டு ஒன்று உள்ளது. இந்தக் கல்வெட்டானது இக்கோட்டை் இசுமாயில் உசைனால் கட்டப்பட்டது என்று குறிப்பிடுகிறது.

அமைப்பு[தொகு]

கோட்டை அமைந்திருக்கும் மலையானது கிட்டத்தட்ட சதுர வடிவத்திலும், ஒரு மைல் சுற்றளவிலும் உள்ளது. இது 700 அடி உயரத்தில் இயற்கையான மேலடுக்கைக் கொண்டுள்ளது மூன்று பக்கங்களில் உயரமான மறைவையும், தெற்கில் செயற்கையாக வடிவமைக்கப்பட்ட மதிலையும் கொண்டுள்ளது. இரண்டு சுவர்கள் இடையே கோட்டைகளுடன், ஒன்றுக்கொன்று குறுகிய தூரத்தில் மலையின் நெற்றிப்பகுதியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளன. மேலும், நுழைவாயிலானது வலுவான தேக்கு மர வாயில்களால் பாதுகாக்கப்பட்டுள்ளது.[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Antur Fort". official government website of Maharashtra. பார்க்கப்பட்ட நாள் 19 July 2015.
  2. "Protected Monuments in Maharashtra". official website of இந்தியத் தொல்லியல் ஆய்வகம். பார்க்கப்பட்ட நாள் 19 July 2015.
  3. "Antur Fort". India9. பார்க்கப்பட்ட நாள் 19 July 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்டர்_கோட்டை&oldid=3101856" இலிருந்து மீள்விக்கப்பட்டது