அன்சைலைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்சைலைட்டு
Ancylite
பக்கவாட்டில் அன்சிலைட்டு படிகங்களுடன் நெனத்கேவிகைட்டு
பொதுவானாவை
வகைகார்பனேட்டு கனிமம்
வேதி வாய்பாடுSr(Ce,La)(CO3)2(OH)·H2O
இனங்காணல்
நிறம்வெளிர் மஞ்சள், ஆரஞ்சு-மஞ்சள், மஞ்சள்-பழுப்பு, சாம்பல்
படிக அமைப்புசெஞ்சாய்சதுரப் படிகம்
பிளப்புஇல்லை
முறிவுபிளவு கொண்டது
விகுவுத் தன்மைஉடையக்கூடியது
மோவின் அளவுகோல் வலிமை4–4.5
மிளிர்வுமங்கலானதுl
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
அடர்த்தி3.95 g/cm3

அன்சைலைட்டு (Ancylite) என்பது Sr(Ce,La)(CO3)2(OH)·H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். சீரியம், இலந்தனம் மற்றும் சிறிய அளவில் மற்ற அருமண் தனிமங்கள் இதில் கலந்துள்ளன. நீரிய இசுட்ரோன்சியம் கர்பனேட்டு கனிமங்கள் கலந்துள்ள ஒரு குழுவாக இக்கனிமம் அறியப்படுகிறது.[1][2]

மேற்கு கிரீன்லாந்தில் உள்ள நர்சர்சுக் அனற் பாறைகளில் 1899 ஆம் ஆண்டில் அன்சைலைட்டு முதன்முதலில் கண்டறியப்பட்டது. பண்டைய கிரேக்க மொழியில் வளைவான அல்லது சிதைந்த படிக வடிவத்தைக் குறிக்கும் வகையில் பெயரிடப்பட்டது.[1][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்சைலைட்டு&oldid=3607759" இலிருந்து மீள்விக்கப்பட்டது