அன்சூல் காம்போஜ்
| தனிப்பட்ட தகவல்கள் | |
|---|---|
| பிறப்பு | 6 திசம்பர் 2000 கர்னால், அரியானா, இந்தியா |
| மட்டையாட்ட நடை | வலதுகை |
| பந்துவீச்சு நடை | வலதுகை விரைவு வீச்சு |
| பங்கு | பன்முக வீரர் |
| உள்ளூர் அணித் தரவுகள் | |
| ஆண்டுகள் | அணி |
| 2021/22–முதல் | அரியானா தூடுப்பாட்ட அணி |
| 2024 | மும்பை இந்தியன்ஸ் |
| 2025–முதல் | சென்னை சூப்பர் கிங்ஸ் |
மூலம்: ESPNcricinfo, 20 அக்டோபர் 2024 | |
அன்சூல் காம்போஜ் (Anshul Kamboj, பிறப்பு 6 திசம்பர் 2000) ஓர் இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் உள்நாட்டுத் துடுப்பாட்டத்தில் அரியானா அணிக்காக விளையாடுகிறார். 2024-இல் நடந்த இந்தியன் பிரீமியர் லீக் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இவரை 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. அக்டோபர் 2024-இல், இவர் 2024 ஏ.சி.சி வளர்ந்து வரும் அணிகள் ஆசியக் கிண்ணத்திற்கான இந்தியா ஏ அணியில் இடம்பெற்றிருந்தார். இவர் 22 அக்டோபர் 2022 அன்று, 2022-23 சையத் முஷ்டாக் அலி கோப்பையில் அரியானாவுக்காக தனது இருபது20 போட்டியில் அறிமுகமானார். இவர் 15 நவம்பர் 2022 அன்று, 2022-23 விஜய் அசாரே கோப்பையில் அரியானாவுக்காக துடுப்பாட்ட ஏ பிரிவில் அறிமுகமானார். 2025 ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3.4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.[1]
உள்ளூர்ப் போட்டிகள்
[தொகு]கம்போஜ், பிப்ரவரி 2022-இல் ரஞ்சிக் கோப்பையில் திரிபுராவுக்கு எதிராக அரியானா அணிக்காக அறிமுகமானார். 2022-23 சையத் முஷ்டாக் அலி கோப்பையில் 7 போட்டிகளில் 7 இலக்குகளையும், 2023-24 விஜய் அசாரே கோப்பையில் அரியானாவுக்காக 10 போட்டிகளில் 17 இலக்குகளையும் வீழ்த்தினார். இந்தியன் பிரீமியர் லீக்கில் 6 மே 2024 அன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக அறிமுகமானார்.[2] துலீப் கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டு இந்தியா சி அணியில் இடம்பெற்றார். இதில் 3 போட்டிகளில் 17.12 சராசரியாக 16 இலக்குகளை வீழ்த்தி, போட்டியின் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.[3] நவம்பர் 2024-இல், ரஞ்சிக் கோப்பையில் ஒரே ஆட்டப்பகுதியில் அனைத்து இலக்குகளையும் வீழ்த்திய மூன்றாவது பந்து வீச்சாளர் என்ற பெருமையை காம்போஜ் பெற்றார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://www.indiatoday.in/sports/story/cricket-anshul-kamboj-ipl-2025-mega-auction-chennai-super-kings-ranji-trophy-10-wicket-haul-2639825-2024-11-25
- ↑ https://indianexpress.com/article/sports/ipl/anshul-kamboj-mumbai-indians-debut-mi-vs-srh-9311961/ 2024-25
- ↑ https://www.espncricinfo.com/series/duleep-trophy-2024-25-1445823/india-b-vs-india-c-4th-match-1445835/match-report-day-4
- ↑ https://indianexpress.com/article/sports/cricket/anshul-kamboj-haryana-history-10-wickets-in-innings-9671944/