உள்ளடக்கத்துக்குச் செல்

அன்சூமன் சிங் பாட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்சூமன் சிங் பாட்டி
Anshuman Singh Bhati
உறுப்பினர், இராசத்தான் சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
திசம்பர் 2023
முன்னையவர்பான்வர் சிங் பாட்டி
தொகுதிகோலாயத்து
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பணிஅரசியல்வாதி

அன்சூமன் சிங் பாட்டி (Anshuman Singh Bhati) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பதினாறாவது இராசத்தான் சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். கோலாயத் சட்டமன்றத் தொகுதியில் பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்..[1][2]

2023 இராசத்தான் சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, இவர் கோலாயத் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] இத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளர் பான்வர் சிங் பாட்டியை 32,933 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[4] 2023 இராசத்தான் சட்டமன்றத் தேர்தலில் இரவீந்திர சிங் பாட்டியுடன் இணைந்து இளைய சட்டமன்ற உறுப்பினர் என்ற பெருமையைப் பெற்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kolayat Assembly Election Results 2023 Highlights: BJP's Anshuman Singh Bhati with 101093 defeats INC's Bhanwar Singh Bhati". indiatoday.in. 3 December 2023. Retrieved 2023-12-04.
  2. "Kolayat Election Result 2023 Live Updates: BJP's Anshuman Singh Bhati Won By 32,933 Votes". ndtv. com. Retrieved 2023-12-04.
  3. "General Elections to Assembly Constituencies:Trends & Results Dec-2023". results.eci.gov.in. Retrieved 2023-12-04.
  4. "Kolayat, Rajasthan Assembly Election Results 2023 Highlights: Anshuman Singh Bhati defeated Bhanwar Singh Bhati on Kolayat seat". Aaj Tak. Retrieved 2023-12-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்சூமன்_சிங்_பாட்டி&oldid=4385955" இலிருந்து மீள்விக்கப்பட்டது