அன்சஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐக்கிய அமெரிக்கா பாதுகாப்பு உடன்பாடு
Australia, New Zealand, United States Security Treaty (ANZUS)
உருவாக்கம்செப்டம்பர் 1, 1951
வகைபன்னாட்டு அமைப்பு
உறுப்பினர்கள்
3 உறுப்பு நாடுகள் (ஐக்கிய அமெரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா)
ஆட்சி மொழி
ஆங்கிலம்

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐக்கிய அமெரிக்கா பாதுகாப்பு உடன்பாடு (Australia, New Zealand, United States Security Treaty, ANZUS அல்லது அன்சஸ் உடன்பாடு) என்பது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகியவற்றிற்கிடையேயும், ஆஸ்திரேலியாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கு இடையேயும் ஏற்படுத்தப்பட்ட இராணுவ உடன்பாட்டைக் குறிக்கும். இது பசிபிக் பெருங்கடல் பகுதியின் பாதுகாப்பு உடன்பாடு எனினும் , இன்று இது பரந்த அளவில் எப்பகுதியிலும் இந்நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதாக நம்பப்படுகிறது.

இந்த உடன்பாடு ஆரம்பத்தில் மூன்று நாடுகளுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்டிருந்தது. 1984 ஆம் ஆண்டில் நியூசிலாந்து கடல் எல்லையில் அமெரிக்காவின் அணுவாற்றல் கப்பல்களின் நடமாட்டத்தை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட பிணக்கை அடுத்து நியூசிலாந்து அமெரிக்காவுடனான உடன்படிக்கையில் இருந்து விலகிக்கொண்டது. ஆனாலும் அது ஆஸ்திரேலியாவுடனிருந்த பாதுகாப்பு உடன்படிக்கையில் இருந்து விலகவில்லை.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்சஸ்&oldid=3270518" இருந்து மீள்விக்கப்பட்டது