உள்ளடக்கத்துக்குச் செல்

அனௌஷ்கா சப்னிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனௌஷ்கா சப்னிஸ் (Anoushka Sabnis பிறப்பு ஜனவரி 27, 2007) ஓர் இந்திய எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார். ஒன்ஸ் அபான் எ வெர்ஸ் - பிகாஸ் போயம்ஸ் டெல் ஸ்டோரிஸ் எனும் 52 கவிதை தொகுப்புகளின் ஆசிரியர் ஆவார். இவர் தனது முதல் புத்தகத்தை 10-ஆம் வயதில் வெளியிட்டார். 2018 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் நடந்த ராயல் காமன்வெல்த் கட்டுரை போட்டியில் தங்க விருதைப் பெற்றவர் ஆவார். இவர் ஒரு உலகளாவிய நல்லெண்ண தூதருமாவார். [1] தற்போது இவர் இந்தியாவின் புது தில்லியில் வசிக்கிறார். [2]

கவிதை புத்தகத்தை சர்வதேச அளவில் வெளியிட்ட இளைய கவிஞர் (பெண்) என்ற உலக சாதனையினைப் படைத்தார். [3]

இவர் தனது ஐந்தாம் வயதில் கதைகளை உருவாக்கத் தொடங்கினார். மேலும், இவரது தாயார் இவருக்காக உருவாக்கிய வலைப்பதிவில் இவற்றை வெளியிட்டார்.

இவர் இந்திய பொதுநல விளையாட்டு மாணவர் நலக் குழுவின் உறுப்பினராக உள்ளார். ஜெய்ப்பூர் இலக்கிய விழா உள்ளிட்ட பல்வேறு தளங்களில் பேசியுள்ளார். ஜெய்ப்பூர் இலக்கிய விழா 2019 இல் இளைய பேச்சாளராக இவர் இருந்தார். [4]

குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே வாசிப்பு, எழுதுதல் மற்றும் பேசுவதை ஊக்குவிப்பதற்காக இவர் பிப்லியோவர்ஸ் என்ற புத்தக சங்கத்தினை நடத்தி வருகிறார்.

மேலும் காண்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]

 

  1. "Global Goodwill Ambassadors". Global Goodwill Ambassadors.
  2. "Anoushka Sabnis". Jaipur Literature Festival. பார்க்கப்பட்ட நாள் January 18, 2019.
  3. "World Record". World Records India. 12 September 2019.
  4. Kachhava, Priyanka (2019-01-24). "ZEE JLF 2019: First sell your story idea in market, then start writing, says Sanjoy Roy". DNA India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-26.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனௌஷ்கா_சப்னிஸ்&oldid=3137379" இலிருந்து மீள்விக்கப்பட்டது