அனோரினசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனோரினசு
புதர்க் கொண்டை இருவாய்ச்சி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: கோராசீபோர்மெஸ்
குடும்பம்: இருவாய்ச்சி
பேரினம்: அனோரினசு
சிற்றினம்

உரையினைக் காண்க

வேறு பெயர்கள்

திலோலேமசு

அனோரினசு (Anorrhinus) என்பது தென்கிழக்கு ஆசியாவின் காடுகளில் (இந்தியா மற்றும் சீனாவின் அருகிலுள்ள பகுதிகளுக்கு அரிதாகவே நீண்டுள்ளது) காணப்படும் இருவாய்ச்சி (குடும்பம் புசெரோடிடே) பேரினமாகும் . இவை சமூகமாகவும் பொதுவாகக் குழுக்களாகவும் காணப்படுகின்றன. ஆனால் ஆதிக்கம் செலுத்தும் இணை மட்டுமே இனப்பெருக்கம் செய்யும் என்று நம்பப்படுகிறது. பிற குழு உறுப்பினர்கள் உதவியாளர்களாகச் செயல்படுகிறார்கள்.

வகைப்பாட்டியல்[தொகு]

இந்த பேரினமானது சில சமயங்களில் புதர்-முகடு இருவாய்ச்சி சிற்றினத்துடன் மட்டுமே மட்டுப்படுத்தப்படுகிறது. பிற சிற்றினங்கள் இரண்டும் சில சமயங்களில் ஒரே இனமாகக் கருதப்படுகின்றன. இவை திலோலேமசு பேரினத்தில் வைக்கப்படுகின்றன. 2013-ல் வெளியிடப்பட்ட ஒரு மூலக்கூறு தொகுதிப் பிறப்பு ஆய்வில், அனோரினசு, ஆந்தரகோசெரசு மற்றும் ஓசிசெரோசு வகைகளைக் கொண்ட ஒரு தொகுதியின் சகோதர பேரினமாகக் கண்டறியப்பட்டது.[1]

இந்தப் பேரினமானது மூன்று சிற்றினங்களைக் கொண்டுள்ளது:[2]

படம் அறிவியல் பெயர் பொதுப் பெயர் பரவல்
அனோரினசு ஆஸ்டெனி ஆசுடெனின் பழுப்பு இருவாய்ச்சி வடகிழக்கு இந்தியா மற்றும் தெற்கில் வியட்நாம் மற்றும் வடக்கு தாய்லாந்து
அனோரினசு திக்கெல்லி திக்கெல் பழுப்பு இருவாய்ச்சி மியன்மார் மற்றும் அதை ஒட்டிய மேற்கு தாய்லாந்து
அனோரினசு கேலரிடசு புதர்க் கொண்டை இருவாய்ச்சி புரூணை, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர் மற்றும் தாய்லாந்து

மேற்கோள்கள்[தொகு]

  1. Gonzalez, J.-C.T.; Sheldon, B.C.; Collar, N.J.; Tobias, J.A. (2013). "A comprehensive molecular phylogeny for the hornbills (Aves: Bucerotidae)". Molecular Phylogenetics and Evolution 67 (2): 468–483. doi:10.1016/j.ympev.2013.02.012. 
  2. "Mousebirds, Cuckoo Roller, trogons, hoopoes, hornbills". International Ornithologists' Union. 2019. https://www.worldbirdnames.org/bow/mousebirds/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனோரினசு&oldid=3481838" இருந்து மீள்விக்கப்பட்டது