உள்ளடக்கத்துக்குச் செல்

அனைத்து வங்காள மகளிர் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனைத்து வங்காள மகளிர் சங்கம்

அனைத்து வங்காள மகளிர் சங்கம் (All Bengal Women's Union) என்பது மேற்கு வங்காளத்தில் உள்ள பெண்கள் குழு ஆதரவற்ற, சுரண்டப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட சக பெண்களுக்கு உதவ ஒத்த எண்ணங்கள் கொண்ட பெண்களின் குழுவை உருவாக்கவேண்டும் என்ற சிந்தனையின் அடிப்படையில் ​​1932 ஆம் ஆண்டு அனைத்து வங்காள பெண்கள் சங்கம் தொடங்கப்பட்டது.[1]

அனைத்து வங்காள பெண்கள் சங்கம், குழந்தைகள் நிதியை சேமித்தல் போன்ற பல அரசு சாரா நிறுவனங்களால் அவர்களின் பணிகளில் உதவுகிறது.[2]

வரலாறு

[தொகு]

அனைத்து வங்காள மகளிர் சங்கம் தோற்றம்

[தொகு]

இந்த அரசு சாரா நிறுவனம் மேற்கு வங்கம் மற்றும் கொல்கத்தா பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் முன் இல்லாத அளவுக்கு அதிகளவில் நிகழ்கின்றது என்ற காரண்த்தினால் , இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முயற்சியாகவும் , முடிவாகவும் அமைந்தது.[3][4]

இரண்டு உலகப் போர்களுக்கு இடையில், மாலுமிகள் மற்றும் போா் வீரர்களின் எண்ணிக்கை கணிசமாக உயா்ந்தது. மேலும் பரத்தமை தொழில் கொல்கத்தாவில் விரிவடைந்து கொட்டிருந்தது.பரத்தமை விடுதிகளிலிருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளை மீட்க காவல்துறையினருக்கு உதவும் வகையில் கொல்கத்தாவில் ஒழுக்கக்கேடான கடத்தல் தடுப்புச் சட்டம் மற்றும் குழந்தைகள் சட்டம் ஆகியவை நிறைவேற்றப்பட்டன.[5] 1932 ஆம் ஆண்டு பிரபல வழக்கறிஞரும் சமூக சேவகருமான திரு. சே. என். பாசு அவர்களால் வங்காள சட்டமன்றத்தில் வங்காள ஒழுக்கக்கேடான கடத்தல் தடுப்பு சட்ட முன் வரைவு [6] புதியதாக சமர்ப்பிக்கப்பட்டது. வங்காள மாகாண பெண்கள் சங்கம் மற்றும் அனைத்து வங்காள பெண்கள் மாநாடு ஆகியவை வங்காளத்தில் ஒழுக்கக்கேடான கடத்தலை ஒடுக்குவதற்கான ஒரு தனிப்பட்ட அமைப்பை உருவாக்க முடிவு செய்தன. இந்த சங்கம் அனைத்து வங்காள மகளிர் சங்கம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டு 1860 ஆம் ஆண்டின் 21 ஆம் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. அனைத்து வங்காள மகளிர் சங்கம் செனீவாவில் உள்ள சர்வதேச ஒழிப்பு கூட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.[1] ஏப்ரல் 1, 1933 அன்று, இந்த சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டது. நிறுவனர் உறுப்பினரான ரோமோலா சின்கா, மேற்கு வங்கத்தில் மத்திய சமூக நல வாரியத்தின் முதல் தலைவராக இருந்தார்.

திருமதி மானெக் மோடி, திருமதி சீலா தாவர் மற்றும் திருமதி பேலா சென் ஆகியோர் நிறுவனத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்த பெண்களில் அடங்குவர். இளவரசி அன்னே (சனவரி 2007 இல்) [7] வருகை நிறுவனத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாகும். திருமதி சின்காவின் மரணத்திற்குப் பிறகு திருமதி தாவர் சங்கத்தின் தலைவரானார். லவ்லாக் பிளேசில் அமைந்துள்ள பச்டி நல சங்கத்தையும் அவர் நிறுவினார். திருமதி பேலா சென் நீண்ட காலமாக உற்பத்தித் துறையின் தலைவராக இருந்தார்.

திட்டங்கள்

[தொகு]

இந்த அமைப்பின் முக்கிய திட்டங்கள்:

[தொகு]
  • வயதான பெண்களுக்கான வீடுகளை உருவாக்குதல்
  • குழந்தைகள் நல இல்லங்களை உருவாக்குதல் (ஆரம்பப் பள்ளிகள்)
  • தொழில் பயிற்சி வழங்குதல்.
  • மறுவாழ்வு மையங்களை உருவாக்குதல்.
  • கற்றல் குறைபாடுகள் உள்ளவர்களுக்கான மறு நிரப்பல் திட்டம்.
  • புனர்வாழ்வளிக்கப்பட்ட பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் பேக்கரி திட்டம்.
  • குழந்தைகள் மற்றும் பெண்களின் பாலியல் வர்த்தகம் குறித்த ஆராய்ச்சி மற்றும் ஆவணங்கள்.
  • மன ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ஆலோசனை சேவைகள். (கோப் கொல்கத்தா அறக்கட்டளையால் நிதியளிக்கப்படுகிறது)
  • சுகாதாரம் மற்றும் கல்வித் தேவைகளுக்கான நிதியுதவி திட்டங்கள் .(ஆசா மற்றும் குழந்தைகளை பாதுகாக்கும் அமைப்பு உடன் இணைந்து)
  • வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் பெண்களுக்கு எந்த நோக்கத்திற்காகவும் தேவைப்படுபவர்களுக்கு இலவச சட்ட உதவி

பல்வேறு அட்டூழியங்கள் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட சிறுமிகளை ஆயத்துகளாகவும் செவிலியர் உதவியாளர்களாகவும் பயிற்றுவிக்கும் சfhயிகா திட்டம்.

  • உலகிலுள்ள குழந்ததைகளின் உாிமைகள் ,சுகாதாரம் ,கல்வி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் அமைப்பு(யுனிசெஃப்) ஆதரவுடன் சிசாலய பிரகல்போ திட்டம், பள்ளியை விட்டு வெளியேறியவர்களுக்கு தொடக்கப் பள்ளிக் கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சிவப்பு விளக்கு மாவட்டத்தைச் சேர்ந்த 25 சிறுமிகளுடன் இணைந்து பணியாற்ற நோக்கம் கொண்ட ஸ்வதார் திட்டம் அதன் தோற்றத்தில் உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "Social welfare organization working for women empowerment and rehabilitation". All Bengal Women's Union. Archived from the original on 29 January 2018. Retrieved 28 January 2018.
  2. ↑ "Sponsorship for health and education of the poor children". All Bengal Women's Union. 24 July 2011. Archived from the original on 24 July 2011. Retrieved 28 January 2018.
  3. ↑ "All Bengal Women's Union". End Slavery Now. Retrieved 28 January 2018.
  4. ↑ "All Bengal Womens Union". Grassroots Volunteering. Retrieved 28 January 2018.
  5. ↑ Sen, Samita (11 January 2007). "75 Years IN The Shadow Of Sita". The Telegraph. Archived from the original on 29 January 2018. Retrieved 28 January 2018.
  6. ↑ The Bengal Suppression of Immoral Traffic Act, 1933 (in English). Retrieved 28 January 2018 – via Internet Archive.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  7. ↑ "Where Charity begins". The Telegraph. 11 January 2011. Archived from the original on 4 March 2016. Retrieved 28 January 2018.

வெளி இணைப்புகள்

[தொகு]