அனைத்து மலேசிய இந்தியர் முற்போக்கு முன்னணி
| அனைத்து மலேசிய இந்தியர் முற்போக்கு முன்னனி All Malaysian Indian Progressive Front Barisan Kemajuan India Se-Malaysia | |
|---|---|
| சுருக்கக்குறி | AMIPF / IPF |
| தலைவர் | 1. ஜெயஸ்ரீ பண்டிதன் |
| தலைவர் | 2. டத்தோ எம். சம்பந்தன் |
| நிறுவனர் | எம். ஜி. பண்டிதன் |
| தொடக்கம் | 1990 |
| பிரிவு | |
| தலைமையகம் | 53, 1/9, 43300 செரி கெம்பாங்கான், சிலாங்கூர்[1] |
| கொள்கை | திராவிடம் |
| அரசியல் நிலைப்பாடு | வலது சாரி |
| நிறங்கள் | சிவப்பு, கருப்பு, பச்சை |
| மலேசிய மேலவை: | 0 / 70
|
| மலேசிய மக்களவை: | 0 / 222
|
| சட்டமன்றங்கள்: | 0 / 607
|
| இணையதளம் | |
| www | |
முகநூலில் அனைத்து மலேசிய இந்தியர் முற்போக்கு முன்னணி | |
ஐபிஎப் எனும் அனைத்து மலேசிய இந்தியர் முற்போக்கு முன்னனி (ஆங்கிலம்: IPF எனும் All Malaysia Indian Progressive Front (AMIPF/IPF); மலாய்: Barisan Kemajuan India Se-Malaysia (PKISM) என்பது மலேசியாவில் 1990-ஆம் ஆண்டில் மலேசிய இந்தியர் காங்கிரசு கட்சியில் இருந்து உருவாக்கப்பட்ட ஓர் அரசியல் கட்சியாகும். மலேசியாவில் வாழும் இந்தியர் சமூகத்தின் உரிமைகளுக்காகவும், அவர்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காகவும் இந்தக் கட்சி உருவாக்கப்பட்டது.
இருப்பினும் மஇகா கட்சியின் மீது ஏற்பட்ட மனநிறைவு குன்றிய நிலைப்பாட்டின் காரணமாக எம். ஜி. பண்டிதன் அவர்களால் இந்தக் கட்சி உருவாக்கப்பட்டது என்பதே அப்போதைக்கு முதன்மை காரணமாக அமைந்தது. 1988-ஆம் ஆண்டில் மஇகா தலைவர் துன் ச. சாமிவேலு, மற்றும் எம். ஜி. பண்டிதன் ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.
தற்போது ஐபிஎப் கட்சி மலேசியாவின் ஆளும் ஒற்றுமை அரசாங்கத்திற்கும் (MADANI Government); மற்றும் பாரிசான் நேசனல் கூட்டணிக்கும் ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
பொது
[தொகு]ஐபிஎப் கட்சி 1990 முதல் 1996 வரை, தற்போது செயலிழந்த எதிர்க்கட்சிக் கூட்டணியான காகாசான் ராக்யாட் (Gagasan Rakyat) கூட்டணியின் ஓர் உறுப்புக் கட்சியாக இருந்தது. ஆனால் தற்போது பாரிசான் நேசனல் (BN) கூட்டணியின் ஓர் உறுப்புக் கட்சியாக இல்லாவிட்டாலும், அந்தக் கூட்டணியை ஆதரித்து வருகிறது.[2]
2017-ஆம் ஆண்டில் பாரிசான் நேசனல் கூட்டணியில் இணைவதற்கு ஐபிஎப் கட்சி விருப்பம் தெரிவித்தது. எனினும் மஇகா அதற்கு மறுப்பு தெரிவித்தது. அதனால் பாரிசான் நேசனல் கூட்டணியில் இணைவதற்கான ஐபிஎப் கட்சியின் விண்ணப்பம் தோல்வியடைந்தது.[3] இருப்பினும் ஐபிஎப் கட்சி, பாரிசான் நேசனல் கூட்டணியின் தோழமை கட்சியாக மட்டுமே கருதப்படுகிறது.[4][5][6][7] இந்திய சமூகத்தினரிடையே, பாரிசான் நேசனலின் தோற்றத்தை மேம்படுத்துவதில் ஐபிஎப் கட்சி குறிப்பிடத்தக்க வகையில் ஒரு நேர்மறையான பங்கை ஆற்றியுள்ளது என்று பிரதமர் மகாதீர் முகமது அவர்களும் புகழ்ந்து கூறியுள்ளார்.[8]
ஐபிஎப் கட்சியின் தலைவரும் நிறுவனருமான டான் ஸ்ரீ டத்தோ எம். ஜி. பண்டிதன் 29 மே 2008 அன்று காலமானார். அதன் பின்னர் அக்கட்சியின் இரண்டாவது தலைவராக எம். ஜி. பண்டிதன் அவர்களின் மனைவியான புவான் செரி ஜெயஸ்ரீ பண்டிதன் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.[9]
பொதுத் தேர்தல் முடிவுகள்
[தொகு]| தேர்தல் | வென்ற இடங்கள் | போட்டியிட்ட இடங்கள் | மொத்த வாக்குகள் | % | தேர்தல் முடிவு | தேர்தல் தலைவர் |
|---|---|---|---|---|---|---|
| 2018 | 0 / 177 |
3 | 32,895 | 0.59 | நாடாளுமன்றத்தில் உறுப்பியம் இல்லை (காகாசான் ராக்யாட்) |
எம். ஜி. பண்டிதன் |
| 2022 | 0 / 222 |
1 | 7,387 | 0.05 | நாடாளுமன்றத்தில் உறுப்பியம் இல்லை (பாரிசான் நேசனல் தோழமை) |
லோகநாதன் துரைசாமி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Barisan Kemajuan India Se-Malaysia, Yellow Pages
- ↑ "IPF Still Hopeful Of Joining BN". Bernama. 30 July 2010.
- ↑ Ida Lim (8 October 2017). "IPF seeks to join BN, moots two-day break for Deepavali". Malay Mail. https://www.malaymail.com/news/malaysia/2017/10/08/ipf-seeks-to-join-bn-moots-two-day-break-for-deepavali/1482607.
- ↑ "Zahid: Three small Indian parties - Kimma, IPF and Makkal Sakti - may join Barisan". The Star. 27 October 2018. https://www.thestar.com.my/news/nation/2018/10/27/zahid-three-indian-parties-may-join-barisan. பார்த்த நாள்: 7 June 2021.
- ↑ "Perjumpaan Bersama Parti Friends of BN" (in ms). UMNO ONLINE. 13 March 2020. https://facebook.com/mediaumnomalaysia/photos/a.4225231564169226/4225234747502241/?type=3. பார்த்த நாள்: 7 June 2021.
- ↑ "Bersama Parti Friends of BN" (in ms). UMNO ONLINE. 13 March 2020. https://umno-online.my/2020/03/13/bersama-parti-friends-of-bn/. பார்த்த நாள்: 7 June 2021.
- ↑ "Selesai dahulu masalah permohonan parti politik lain: Penganalisis" (in ms). Sinar Harian. 29 December 2020. https://www.sinarharian.com.my/article/116662/BERITA/Politik/Selesai-dahulu-masalah-permohonan-parti-politik-lain-Penganalisis. பார்த்த நாள்: 7 June 2021.
- ↑ "IPF played vital role, says PM". New Straits Times. 2001-02-10.
- ↑ "Malaysian Indian politician Pandithan dead, April 30th, 2008, Thaindian News". Archived from the original on 2010-06-23. Retrieved 2026-05-18.
மேலும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]