அனைத்து திரிபுரா சதுரங்க சங்கம்
சுருக்கம் | அனைத்து திரிபுரா சதுரங்க சங்கம் |
---|---|
உருவாக்கம் | 1975 |
வகை | திரிபுராவில் உள்ள சதுரங்க நிர்வாகக் குழு |
சட்ட நிலை | சங்கம் |
நோக்கம் | சதுரங்கம் |
சேவை பகுதி | திரிபுரா |
உறுப்பினர்கள் | இணைக்கப்பட்ட அலகுகள் |
ஆட்சி மொழி | ஆங்கிலம் |
சார்புகள் | அனைத்திந்திய சதுரங்கக் கூட்டமைப்பு |
அனைத்து திரிபுரா சதுரங்க சங்கம் (All Tripura Chess Association) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் அமைந்துள்ள சதுரங்க விளையாட்டின் உச்ச அமைப்பாகும். 1974 ஆம் ஆண்டில் இச்சங்கம் உருவாக்கப்பட்டது. அகில இந்திய சதுரங்கக் கூட்டமைப்புடன் இச்சங்கம் இணைக்கப்பட்டுள்ளது. [1]
வரலாறு
[தொகு]அனைத்து திரிபுரா சதுரங்க சங்கம் 1974 ஆம் ஆண்டில் திரிபுராவில் உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் பின்வரும் நபர்கள் இச்சங்கத்தின் நிர்வாகப் பிரதிநிதிகளாக இருந்தனர் : பிரணாப் குமார் கோசு (தலைவர்), காந்தி குமார் சக்ரவர்த்தி (செயலாளர்), சுதிர் தாசுகுப்தா (பொருளாளர்).[1] என்ற பொறுப்புகளை வகித்தனர்.
திரிபுரா சதுரங்க சங்கம் தேசிய மற்றும் மண்டல அளவிலான சதுரங்கப் போட்டிகளை நடத்துகிறது. 1982 ஆம் ஆண்டில் தேசிய பி வகை வெற்றியாளர் போட்டிகள் 1983 ஆம் ஆண்டில் தேசிய ஏ வகை வெற்றியாளர் போட்டிகள் மற்றும் 1986 ஆம் ஆண்டில் 5 ஆவது வடகிழக்கு சதுரங்க வெற்றியாளர் போட்டிகள் ஆகியவற்றை நடத்த இச்சங்கம் ஏற்பாடு செய்தது [1]
2017 ஆம் ஆண்டில் திரிபுராவின் சதுரங்க வீரர்களால் மாநிலம் முழுவதும் சதுரங்க விளையாட்டை வளர்க்க திரிபுரா சதுரங்க மன்றங்கள் உருவாக்கப்பட்டன. [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Tripura Chess History". Official Website of ATCA. Archived from the original on 19 பிப்ரவரி 2012. Retrieved 22 November 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ TRIPURA CHESS CLUB constituted on Tuesday, held press meet with monthly competition along with 11 activities, Tripuraindia.in, 24 October 2017
புற இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம் (காப்பகப்படுத்தப்பட்டது)