அனைத்துவகை இனத்துவ பாகுபாட்டையும் ஒழிப்பதற்கான அனைத்துலக உடன்படிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனைத்துவகை இனத்துவ பாகுபாட்டையும் ஒழிப்பதற்கான அனைத்துலக உடன்படிக்கை (The International Convention on the Elimination of All Forms of Racial Discrimination (ICERD)) என்பது இனத்தின் அடிப்படையில் கல்வி, தொழில்வாய்ப்பு, அரசு போன்ற அனைத்து துறைகளிலும் பாகுபாட்டை ஒழிப்பதை நோக்கக் கொண்ட ஓர் ஐக்கிய நாடுகள் உடன்படிக்கை ஆகும். இதன் உறுப்பு நாடுகள் பாகுப்பாட்டை ஒழிப்பதற்கும், இனங்களுக்கிடையே புரிதலை ஏற்படுத்துவதற்கும் உறுதிதர வேண்டும். மேலும், வெறுப்புப் பேச்சைத் தடை செய்ய வேண்டும், இனவாத அமைப்புகளில் உறுப்பினராக இருப்பதை குற்றச்செயலாக்க வேண்டும். இந்தக் கடைசி நிபந்தனைகள் கடும் விவாதத்துக்கு உள்ளானவை.[1]

மேற்கோள்கள்[தொகு]