அனைத்துலக அரிசி ஆண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

2004 ஆம் ஆண்டை அனைத்துலக அரிசி ஆண்டு என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. இதற்கான தீர்மானம் (57/162) 2002 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முழுநிறைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முன்னர் உணவு வேளாண்மை அமைப்பினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றை அடியொற்றியே பொதுச்சபை இத் தீர்மானத்தை நிறைவேற்றியது.

நாடுகளின் அரசுகள், ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம், அனைத்துலக வேளாண்மை ஆய்வு தொடர்பான ஆலோசனைக் குழு, ஐக்கிய நாடுகள் அவை சார்ந்த பிற அமைப்புக்கள், அரசு சார்பற்ற அமைப்புக்கள் ஆகியவற்றுடன் சேர்ந்து அனைத்துலக அரிசி ஆண்டுச் செயற்பாடுகளை முன்னெடுக்க உதவுமாறு உணவு வேளாண்மை அமைப்பை இத் தீர்மானம் கேட்டுக்கொண்டது.

பின்னணி[தொகு]

அரிசிக்கான அனைத்துலக ஆண்டு ஒன்றை அறிவிப்பது தொடர்பான முன்முயற்சி 1999 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது. அரிசிப் பயிர்ச் செய்கையை மேம்படுத்துவதில் எதிர்ப்பட்ட பிரச்சினைகளையொட்டி, உறுப்பினர்களது கவலை தொடர்பாக நடவடிக்கை எடுக்க விரும்பிய அனைத்துலக அரிசி ஆராய்ச்சி நிறுவனம், அரிசிக்கான அனைத்துலக ஆண்டொன்றை அறிவிக்க உதவுமாறு, உணவு வேளாண்மை அமைப்பைக் கேட்டுக்கொண்டது. இதைத் தொடர்ந்து, 2001 ஆம் ஆண்டில் நடைபெற்ற உணவு வேளாண்மை அமைப்பின் 31 ஆவது மாநாட்டில், அனைத்துலக அரிசி ஆண்டு ஒன்றை அறிவிக்கும்படி, ஐக்கிய நாடுகள் அவையைக் கேட்டுக்கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2002 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 57 ஆவது அமர்வில், 43 நாடுகளின் துணையுடன், பிலிப்பைன்சு இதற்கான முன்மொழிவை முன்வைத்தது.

குறிப்புக்கள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]