அனைத்திந்திய சார்க்கண்டு கட்சி
| அனைத்திந்திய சார்க்கண்டு கட்சி | |
|---|---|
| தலைவர் | பாகுன் சும்ப்ராய் |
| நிறுவனர் | டேவிட் முன்சுனி |
| தொடக்கம் | 19 மே 1968 |
| முன்னர் | சார்க்கண்டு கட்சி |
| கொள்கை | மண்டல வளர்சி |
| ECI status | அங்கிகரிக்கப்படாத கட்சி |
அனைத்திந்திய சார்க்கண்டு கட்சி (All India Jharkhand Party) என்பது இந்தியாவில் செயல்படும் ஒரு மாநில அரசியல் கட்சிஆகும்.[1] 1963ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசுடன் சார்க்கண்டு கட்சி இணைக்கப்பட்ட பின்னர் 1968 மே 19 அன்று டேவிட் முன்சுனியால் இந்தக் கட்சி நிறுவப்பட்டது.[2] பாகுன் சும்ப்ராய் தலைவராகவும், நிரால் எனிம் கரோ பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[3]
இந்தக் கட்சி 1971 மற்றும் 1972ஆம் ஆண்டுகளில் இரண்டு மக்களவைத் தேர்தல்களிலும், 1972 மற்றும் 1977ஆம் ஆண்டுகளில் இரண்டு பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் மற்றும் 1971,1974 மற்றும் 1977ஆம் ஆண்டில் ஒடிசாவில் சார்க்கண்டு கட்சியுடன் இணைந்து மூன்று தேர்தல்களிலும் பங்கேற்றது. உறுப்பினர்கள் பெரும்பாலும் கிறித்தவர்களாக இருந்தனர், ஆனால் கிறித்துவரல்லாதவர்களின் ஒரு பெரிய குழுவும் இருந்தது. பின்னர் இனம் சார்ந்த பிளவுகள் காரணமாக இந்தக் கட்சி முடக்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "All India Jharkhand Party: Latest News, Videos, Quotes, Gallery, Photos, Images, Topics on All India Jharkhand Party". Firstpost. Retrieved 2021-09-20.
- ↑ "IndiaVotes PC: Party performance over elections - All India Jharkhand Party All States". IndiaVotes. Retrieved 2021-09-20.
- ↑ "Bagun Sumbrai Latest News: Current News and Updates on Bagun Sumbrai at News18". News18 (in ஆங்கிலம்). Retrieved 2021-09-20.