உள்ளடக்கத்துக்குச் செல்

அனைத்திந்திய கணதந்த்ரா பரிசத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனைத்திந்திய கணதந்த்ரா பரிசத்
சுருக்கக்குறிAIGP
தலைவர்இராஜேந்திர நாராயண் சிங் தியோ
தொடக்கம்அக்டோபர் 1950; 75 ஆண்டுகளுக்கு முன்னர் (1950-10)
கலைப்பு1962; 64 ஆண்டுகளுக்கு முன்னர் (1962)
இணைந்ததுசுதந்திராக் கட்சி
நிறங்கள்    
இ.தே.ஆ நிலைசெயலிழந்த கட்சி
தேர்தல் சின்னம்
இந்தியா அரசியல்

கணதந்த்ரா பரிசத் (All India Ganatantra Parishad) அல்லது அனைத்திந்திய கணதந்த்ரா பரிசத் என்பது 1950 முதல் 1962 வரை கிழக்கு இந்திய ஒரிசா மாநிலத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு பிராந்திய அரசியல் கட்சியாகும். இந்த அரசியல் கட்சி முந்தைய சமசுதானங்களின் முன்னாள் ஆட்சியாளர்களாலும் பெரிய நிலப்பிரபுக்களாலும் உருவாக்கப்பட்டது.[1] இது 1950இல் நிறுவப்பட்டது. இராஜேந்திர நாராயண் சிங் தியோ இதன் தலைவராக ஆனார். 1962இல் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, இந்த அரசியல் கட்சி சுதந்திராக் கட்சி ஒரிசா பிரிவுடன் இணைக்கப்பட்டது.[2]

பின்னணி

[தொகு]

இந்தக் கட்சியின் ஆரம்பம் அக்டோபர் 1948இல் சம்பல்பூரில் தலைமையகத்துடன் நிறுவப்பட்ட கோசல் உத்கல் பிரஜா பரிசத்தில் தொடங்குகிறது.[3] பிரஜா பரிசத்தின் முதல் கூட்டம் 1948 அக்டோபர் 8, 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் சம்பல்பூரில் உள்ள பாலிபந்தாவில் நடைபெற்றது. 1950 அக்டோபரில் போலங்கீரில் நடைபெற்ற பிரஜா பரிசத்தின் வருடாந்திர கூட்டத்தில் இது கணாதந்திர பரிசத் என்ற முழு அளவிலான அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது.[4]

தேர்தல்களில் வெற்றி

[தொகு]

1951ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில், மொத்த வாக்குகளில் 0.91% மற்றும் மக்களவையில் 6 இடங்களை இக்கட்சி வென்றது.[5] 1952ஆம் ஆண்டில் ஒடிசா சட்டமன்றத்திற்கான முதல் பொதுத் தேர்தலில், க. ப. மொத்த வாக்குகளில் 20.5% மற்றும் சட்டமன்றத்தில் 31 இடங்களைப் பெற்றது. இதன் தலைவர் சரத்தாகர் சுபாகர் எதிர்க்கட்சித் தலைவராக ஆனார்.[6][7] 1957ஆம் ஆண்டில் ஒடிசா சட்டமன்றத்திற்கான இரண்டாவது பொதுத் தேர்தலில், க. ப. மொத்த வாக்குகளில் 28.74% மற்றும் சட்டமன்றத்தில் 51 இடங்களைப் பெற்றது.[8] இதன் தலைவர் இராஜேந்திர நாராயண் சிங் தியோ எதிர்க்கட்சித் தலைவராக ஆனார். சிறுபான்மை இந்திய தேசிய காங்கிரசு அரசு வீழ்ச்சியடைந்த பிறகு, 1959 மே 22 அன்று காங்கிரசுடன் இணைந்து க. ப. கூட்டணி அரசை அமைத்தது. இராஜேந்திர நாராயண் சிங் தியோ இதன் நிதியமைச்சரானார். கூட்டணி அரசாங்கம் 21 பிப்ரவரி 1961 அன்று கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.[7] 1961ஆம் ஆண்டில் ஒடிசா சட்டமன்றத்திற்கான மூன்றாவது பொதுத் தேர்தலில், க. ப. கட்சி மொத்த வாக்குகளில் 22.34%ம் சட்டமன்றத்தில் 37 இடங்களையும் பெற்றது. தியோ மீண்டும் எதிர்க்கட்சித் தலைவராக ஆனார்.[7][9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Chandra, Bipan and others (2000). India after Independence: 1947-2000, New Delhi, Penguin Books, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-027825-7, pp.135,216
  2. "Patna (Princely State)". Archived from the original on 22 May 2009. Retrieved 20 May 2010.
  3. Sethy, Rabindra Kumar (2003). Political Crisis and President's Rule in An Indian State. New Delhi: A.P.H. Publishing Corporation. p. 118. ISBN 81-7648-463-6.
  4. Sharma, Sadhna (1995). State Politics in India. New Delhi: Mittal Publications. pp. 276–7. ISBN 81-7099-619-8.
  5. "Statistical Report on General Elections, 1951 to the First Lok Sabha, Volume I" (PDF). Election Commission of India website. p. 50. Archived from the original (PDF) on 8 October 2014. Retrieved 21 May 2010.
  6. "Statistical Report on General Election, 1951 to the Legislative Assembly of Orissa" (PDF). Election Commission of India website. p. 8. Retrieved 21 May 2010.
  7. 1 2 3 "Brief History of Orissa Legislative Assembly Since 1937". Orissa Legislative Assembly website. Archived from the original on 9 January 2007. Retrieved 21 May 2010.
  8. "Statistical Report on General Election, 1957 to the Legislative Assembly of Orissa" (PDF). Election Commission of India website. p. 8. Retrieved 21 May 2010.
  9. "Statistical Report on General Election, 1961 to the Legislative Assembly of Orissa" (PDF). Election Commission of India website. p. 8. Retrieved 21 May 2010.