அனைதா சராப் அதஜானியா
அனைதா சராப் அதஜானியா | |
---|---|
![]() 2024 இல் ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் அனைதா | |
பிறப்பு | 1972/1973 (அகவை 52–53)[1] மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1995–தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | ஹோமி அதஜானியா]] (தி. 2002) |
உறவினர்கள் | வைபவ் தல்வார்(மைத்துனர்) ஆஸ்பி அதஜானியா (மாமனார்) |
அனைதா சராப் அதஜானியா (Anaita Shroff Adajania) ஓர் இந்தியப் பெண் அலங்கார வடிவமைப்பாளரும், ஆடை வடிவமைப்பாளரும் மற்றும் நடிகையும் ஆவார். இவர் வோக் இந்தியா பத்திரிகையின் ஆடை வடிவமைப்புப் பிரிவின் இயக்குநராக இருந்தார்.[2]
இளமை வாழ்க்கை.
[தொகு]அதஜானியா மும்பையில் ஒரு பார்சி குடும்பத்தில் பிறந்தார்.[3][4] மும்பையின் சர்வதேச பள்ளி மற்றும் செயின்ட் சேவியர் கல்லூரியில் பயின்றார்.[4]
தொழில் வாழ்க்கை
[தொகு]1996 ஆம் ஆண்டில் இது அலங்காரம் மற்றும் அழகு உள்ளடக்கம், சமூகம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றின் கலவையை வழங்கும் இந்தியாவில் தொடங்கப்பட்ட எல்லே இதழில் உதவி ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[5] பின்னர், வோக் இந்தியா என்ற இதழின் ஆடை வடிவமைப்புப் பிரிவின் இயக்குநராக ஆவதற்கு முன்பு, பாரிசிலிருந்து வரும் எல் 'அஃபிசியல் இந்தியா என்ற பிரான்சிய மொழி யில் வெளியாகும் இதழுடன் பணியாற்றினார்.[1][6]
அதஜானியா, ஸ்டைல் செல் என்ற நிறுவனத்தின் உரிமையாளராகவும் உள்ளார்.
தூம் 2, பீயிங் சைரஸ், எவ்ரீடீ சேஸ் ஐ ஆம் ஃபைன், லவ் ஆஜ் கல் மற்றும் காக்டெய்ல்[7] உள்ளிட்ட பல பாலிவுட் படங்களில் தனது வடிவமைப்பு பணிகளுக்காக அறியப்படுகிறார்.தூம் தொடரின் மூன்று படங்களுக்கும் இவர் குறிப்பிடத்தக்க வகையில் ஆடை வடிவமைப்பினை செய்துள்ளார், தூம் (2004) இல் தொடங்கி ஜான் ஆபிரகாம் மற்றும் ஈஷா தியோலின் தோற்றத்திற்காகப் பணிபுரிந்தார்.அதைத் தொடர்ந்து தூம் 2 (2006) படத்தில் ஐஸ்வர்யா ராய், கிருத்திக் ரோஷன் மற்றும் பிபாசா பாசு ஆகியோருடன் பணியாற்றினார். மேலும் தொடர்ச்சியான தூம் 3 படத்தில், இவர் கத்ரீனா கைஃப்புக்கு ஆடை வடிவமைப்பில் உதவினார்.[8]
இவரது வடிவமைப்புகள் வோக், 'எல் 'அபிசியல், எல்லே மற்றும் ரோலிங் ஸ்டோன் உள்ளிட்ட பத்திரிகைகளிலும் இடம்பெற்றுள்ளன.[9] செராப் தற்போது நடிகை தீபிகா படுகோனேவிற்கு அவரது அனைத்து நிகழ்வுகளுக்கும் பிரத்தியேகமாக வடிவமைக்கிறார்.[10]
நடிப்பு
[தொகு]இது தவிர, தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே (1995) போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். அதில் இவர் இலண்டனில் சிம்ரனின் (கஜோல்) தோழி சீனாவாக நடித்திருந்தார். கல் ஹோ நா ஹோ (2003) படத்தில் ரோகித்தின் (சைஃப் அலி கான்) நண்பரான கீதாவாக நடித்தார்.[11]
சொந்த வாழ்க்கை
[தொகு]பீயிங் சைரஸ் (2006) மற்றும் காக்டெய்ல் (2012) ஆகிய திரைப்படங்களை இயக்கிய இந்தியத் திரைப்பட இயக்குனரும் திரைக்கதை ஆசிரியருமான ஹோமி அதஜானியாவை 2002 இல் மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் செரேசட் செராப்பின் சகோதரி ஆவார்.[12]
இவரது சகோதரி செரேசட் செராப் ஒரு யூடியூப் நடத்தி வருகிறார். அவர் 2016 இல் நடிகர் வைபவ் தல்வாரை மணந்தார்.[13]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Q&A With Vogue Fashion Director Anaita Shroff Adajania". Mumbai Boss. 6 January 2013. Archived from the original on 24 December 2013. Retrieved 23 December 2013.
- ↑ "HT Brunch Cover Story: Some good-natured bawi banter!". Hindustan Times (in ஆங்கிலம்). 29 March 2020. Retrieved 9 June 2020.
- ↑ "Making Hrithik, Ash look super hot". Rediff.com, movies. 28 November 2006.
- ↑ 4.0 4.1 ""It's a myth that fashionable clothes work only on skinny people," celebrity stylist Anaita Shroff Adajania shoots straight". Hindustan Times (in ஆங்கிலம்). 29 July 2017. Retrieved 9 June 2020.
- ↑ "5 steps to being a stylist: Anaita Shroff". Hindustan Times. 17 July 2010. Archived from the original on 18 July 2010. Retrieved 23 December 2013.
- ↑ "Fashion Director Anaita Shroff Adajania". www.vogue.in. 12 August 2010. Archived from the original on 19 October 2013. Retrieved 23 December 2013.
- ↑ "Anaita Shroff - The stylist for Dhoom 2". OneIndia. 1 January 2007. Archived from the original on 15 July 2012. Retrieved 29 September 2023.
- ↑ "Dhoom 3: Body of work". Livemint. 20 December 2013. Retrieved 23 December 2013.
- ↑ "Making Hrithik, Ash look super hot". Rediff.com, movies. 28 November 2006."Making Hrithik, Ash look super hot". Rediff.com, movies. 28 November 2006.
- ↑ "Hrithik and Deepika have Anaita to thank". Emirates247.com. 18 February 2013. Retrieved 24 April 2022.
- ↑ "Anaita Shroff Adajania on playing Kajol's friend Sheena in DDLJ: 'I did it for a laugh and a paid holiday to Europe'" (in en). Hindustan Times. 20 October 2020. https://www.hindustantimes.com/bollywood/anaita-shroff-adajania-on-playing-kajol-s-friend-sheena-in-ddlj-i-did-it-for-a-laugh-and-a-paid-holiday-to-europe/story-uTCp0mRacCon0bCUv4lBMO.html.
- ↑ "Ten things you should know about Cocktail's director, Homi Adajania". Firstpost. 11 July 2012. Retrieved 23 December 2013.
- ↑ "Inside Scherezade Shroff's wedding with Vaibhav Talwar's wedding". Vogue India (in Indian English). Retrieved 23 April 2022.