அனூப்பூர்
அனூப்பூர் | |
|---|---|
நகரம் | |
அனூப்பூர் நகரம் | |
| ஆள்கூறுகள்: 23°06′N 81°41′E / 23.1°N 81.68°E | |
| நாடு | |
| மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
| மாவட்டம் | அனூப்பூர் மாவட்டம் |
| அரசு | |
| • வகை | நகராட்சி |
| ஏற்றம் | 505 m (1,657 ft) |
| மக்கள்தொகை (2020) | |
| • மொத்தம் | 26,397 |
| மொழிகள் | |
| • அலுவல் | இந்தி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்தி) |
| அஞ்சல் சுட்டு எண் | 484224 |
| தொலைபேசி குறியீடு | 07659 |
| வாகனப் பதிவு | MP-49 |
| இணையதளம் | https://anuppur.nic.in/en/ |
அனூப்பூர் (Anuppur), இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் வடகிழக்கில் அமைந்த அனூப்பூர் மாவட்டம் மற்றும் அனூப்பூர் வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். அனூப்பூர், மாநிலத் தலைநகரான போபாலுக்கு கிழக்கே 559 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]201-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 15 வார்டுகளும் 4,331 குடியிருப்புகளும் கொண்ட அனூப்பூர் நகரத்தின் மக்கள் தொகை 19,899 ஆகும். அதில் 10,412 ஆண்கள் மற்றும் 9,487 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11.86% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 911 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 84.58% வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 16.19% மற்றும் 8.43% வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 88.98%, இசுலாமியர் 9.56%, கிறித்தவர்கள் 0.87%, சீக்கியர்கள் 0.31% மற்றும் பிற சமயத்தினர் 0.27% வீதம் உள்ளனர்.[1]
போக்குவரத்து
[தொகு]அனுப்பூர் தொடருந்து சந்திப்பு நிலையம், கட்னி-பிலாஸ்பூர் செல்லும் இருப்புப்பாதையில் அமைந்துள்ளது. இது ஜபல்பூர், போபால், இந்தூர், கட்னி, பிலாஸ்பூர், ராய்ப்பூர் போன்ற நகரங்களுடன் இணைக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Anuppur Municipality City Population Census 2011-2025 | Madhya Pradesh". www.census2011.co.in. Retrieved 2025-04-22.