உள்ளடக்கத்துக்குச் செல்

அனு மேனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனு மேனன்
படித்த கல்வி நிறுவனங்கள்
செயற்பாட்டுக்
காலம்
2012 முதல் தற்போது வரை

அனு மேனன் (Anu Menon) ஒரு இந்தியத் திரைப்பட இயக்குநரும் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். இவர் லண்டன், பாரிஸ், நியூயார்க் (2012), வெயிட்டிங் (2016) போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும், சுஹாசினி மணிரத்னம் மற்றும் கல்கி கோய்ச்லின் போன்ற திரையுலகில் அதிகம் அறியப்படாத நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார். மேனன் இலண்டன் திரைப்படப் பள்ளியில் பட்டம் பெற்றவர்.

வாழ்க்கை வரலாறு

[தொகு]

அனு தில்லியில் வளர்ந்தார். கே.வி. ஆண்ட்ரூஸ் கஞ்சில் படித்தார். இவர் பிட்ஸ் பிலானியில் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்று விளம்பரத் துறையில் பணியாற்றினார். இவர் என்ஒய்எஃப்ஏ-வில் ஒரு பயிலரங்கில் கலந்துகொண்டார். பின்னர் இலண்டன் திரைப்படப் பள்ளியில் திரைப்படத் தயாரிப்புப் படிப்பில் சேர்ந்தார். [1][2]

இவரது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில், இவர் ரவி கோஸ் டு ஸ்கூல் என்ற குறும்படத்தையும், அதிகம் விற்பனையாகும் புத்தகத்தை எழுதிய ஒரு பெங்காலி வீட்டுப் பணிப்பெண்ணைப் பற்றிய ஆவணப்படமான பேபி யையும் உருவாக்கினார்.[3] இவரது முதல் திரைப்படம், அலி ஜாஃபர் மற்றும் அதிதி ராவ் ஹைதரி நடித்த லண்டன், பாரிஸ், நியூயார்க் (2012) என்ற காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். இவரது இரண்டாவது திரைப்படமான வெயிட்டிங் (2016) இல் கல்கி கோய்ச்லின் மற்றும் நசிருதீன் ஷா நடித்திருந்தனர். இது இஷ்கா ஃபிலிம்ஸ் மற்றும் த்ரிஷ்யம் ஃபிலிம்ஸ் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டது. [1][4][5] மேனன், X: பாஸ்ட் இஸ் பிரசண்ட் என்ற கூட்டுத் திட்டத்தில் பணியாற்றிய இயக்குநர்கள் குழுவிலும் ஒரு பகுதியாக இருந்தார். அதில் இவர் 'ஆயிஸ்டர்ஸ்' என்ற பகுதியை இயக்கினார்.[6][7]

அனுபமா மேனன் (திருமணத்திற்கு முன்: பாலகிருஷ்ணன்) திருமணமானவர். இவரது கணவர் கேரளாவைச் சேர்ந்தவர். இவர்களுக்கு ரியா மேனன் என்ற மகள் உள்ளார். [8]

திரைப்படவியல்

[தொகு]

குறும்படம்

ஆண்டு தலைப்பு இயக்குநர் எழுத்தாளர் குறிப்புகள்
2007 ரவி கோஸ் டு ஸ்கூல் ஆம் ஆம்
2015 Oysters ஆம் ஆம் X: பாஸ்ட் இஸ் பிரசண்ட் திரைப்படத்தின் ஒரு பகுதி

முழுநீளத் திரைப்படம்

ஆண்டு தலைப்பு இயக்குநர் எழுத்தாளர்
2012 லண்டன், பாரிஸ், நியூயார்க் ஆம் கதை
2016 வெயிட்டிங் ஆம் ஆம்
2020 சகுந்தலா தேவி (திரைப்படம்) ஆம் ஆம்
2023 நீயட் ஆம் ஆம்

தொலைக்காட்சி

ஆண்டு தலைப்பு குறிப்புகள்
2019 ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ்! பருவம் 1
2022 கில்லிங் ஈவ் 2 அத்தியாயங்கள்
2023 தி வின்ட்டர் கிங் 2 அத்தியாயங்கள்
2024 தி டே ஆஃப் தி ஜக்கால் 2 அத்தியாயங்கள்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 ""'Waiting' Is A Universal Story That Anyone Would Relate To"- Anu Menon On Her Upcoming Film! - Jamuura Blog" (in en-US). Jamuura Blog. 2016-05-19 இம் மூலத்தில் இருந்து 27 November 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171127154041/http://www.jamuura.com/blog/waiting-is-a-universal-film-anyone-would-relate-to-anu-menon-on-waiting/.
  2. ↑ "When Women Call The Shots: Anu Menon" (in en-US). Verve Magazine. 2017-05-30. http://www.vervemagazine.in/people/when-women-call-the-shots-anu-menon.
  3. ↑ "Director Anu Menon busy making films before Bwood debut London, Paris, New York". https://www.indiatoday.in/magazine/eyecatchers/story/20120319-anu-menon-bollywood-london-paris-new-york-757685-2012-03-09.
  4. ↑ "Anu Menon bags Best Director award for 'Waiting' at LAFF - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Anu-Menon-bags-Best-Director-award-for-Waiting-at-LAFF/articleshow/51427402.cms.
  5. ↑ "'Mainstream cinema needs a female voice': Anu Menon, director of 'Waiting'" (in en-US). Firstpost. http://www.firstpost.com/entertainment/mainstream-cinema-needs-a-female-voice-anu-menon-director-of-waiting-2808916.html.
  6. ↑ Dundoo, Sangeetha Devi (2015-10-31). "11 filmmakers, one story" (in en-IN). The Hindu. http://www.thehindu.com/features/metroplus/11-filmmakers-one-story/article7826671.ece.
  7. ↑ Pandolin (2015-11-20). "Bringing together diverse talent: X - Past is Present | Pandolin" (in en-US). Pandolin இம் மூலத்தில் இருந்து 25 November 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151125173340/http://pandolin.com/bringing-together-diverse-talent-x-past-is-present/.
  8. ↑ BollywoodLife. "LONDON PARIS NEW YORK director Anu Menon: Ali Zafar is a spontaneous actor!" (in en-US). http://www.bollywoodlife.com/news-gossip/london-paris-new-york-director-anu-menon-ali-zafar-is-a-spontaneous-actor/.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனு_மேனன்&oldid=4537690" இலிருந்து மீள்விக்கப்பட்டது