உள்ளடக்கத்துக்குச் செல்

அனு மேத்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனு மேத்தா
பிறந்தது
அனுராதா மேத்தா
தொழில்(கள்) நடிகை, மாடல்
ஆண்டுகள் செயலில் 2003–2008

அனுராதா மேத்தா (Anu Mehta) என்பவர் மேனாள் இந்திய நடிகை மற்றும் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் தோன்றிய நடிகை ஆவார்.

தொழில்[தொகு]

அனுராதா ஆர்யா என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதன் மூலம் இவர் தனது நடிப்பிற்காகப் புகழ் மற்றும் பாராட்டுதலைப் பெற்றார்.[1][2][3]

ஆர்யாவின் வெற்றிக்குப் பிறகு 2005ஆம் ஆண்டு இ. வீ. வெ. சத்யநாராயணா எழுதித் தயாரித்து இயக்கிய தெலுங்கு காதல் திரைப்படத்தில் நடித்தார். இவர் ஆர்யன் ராஜேஷ், அல்லரி நரேஷ், ரமா பிரபா மற்றும் சுமன் ஆகியோருடன் நடித்தார். சூலை 2005-ல், சத்யநாராயணனின் மகன்கள் ராஜேஷ் மற்றும் நரேஷ் ஆகியோர் சேர்த்து, படம் தயாரித்ததாக அறிவிக்கப்பட்டது.

இவர் 2006ஆம் ஆண்டு கன்னட மொழி அதிரடித் திரைப்படமான அஜய் மூலம் கன்னடத்தில் அறிமுகமானார். இவர் புனீத் ராச்குமாருக்கு இணையாக நடித்தார்.[4] இப்படம் தெலுங்கு திரைப்படமான ஒக்கடு திரைப்படத்தின் கன்னட பதிப்பாகும்.

2008ஆம் ஆண்டு வெளியான கன்னடத் திரைப்படமான ஹொங்கனாசு இவரது தொழில் வாழ்க்கையின் கடைசிப் படமாகும்.

திரைப்படவியல்[தொகு]

ஆண்டு படம் கதாபாத்திரம் மொழி குறிப்புகள்
2004 ஆர்யா கீதா தெலுங்கு
2006 அஜய் பத்மா கன்னடம்
2005 நுவ்வந்தே நாகிஷ்டம் ராதா தெலுங்கு
2007 மகாராஜாஸ்ரீ அனு தெலுங்கு
2007 வேடுகா அம்மு தெலுங்கு
2008 ஹொங்கனாசு சௌம்யா கன்னடம்

மேற்கோள்கள்[தொகு]

  1. సినిమా వెనుక స్టోరీ: ఫీల్ మై లవ్.
  2. "One-film wonders". Deccan Chronicle. 10 January 2017.
  3. "Anu Mehta on a comeback trail - Times of India". The Times of India.
  4. "Kannada Cinema News | Kannada Movie Reviews | Kannada Movie Trailers - IndiaGlitz Kannada". Archived from the original on 2006-05-09. பார்க்கப்பட்ட நாள் 2023-02-18.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனு_மேத்தா&oldid=3899330" இலிருந்து மீள்விக்கப்பட்டது