அனு மல்கோத்ரா (நீதிபதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாண்புமிகு நீதியரசர்
அனு மல்கோத்ரா
தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி
பதவியில் உள்ளார்
பதவியில்
8 நவம்பர் 2016
பரிந்துரைப்புடி. எஸ். தாக்கூர்
நியமிப்புபிரணப் முகர்ஜி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு27 நவம்பர் 1960 (1960-11-27) (அகவை 63)
அகமதாபாது, குசராத்து
முன்னாள் கல்லூரிதில்லி பல்கலைக்கழகம்

அனு மல்ஹோத்ரா (Anu Malhotra;பிறப்பு 27 நவம்பர் 1960) தில்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஆவார்.[1] தொழிலதிபரும் யோகா ஆசிரியருமான ராம்தேவ் பற்றிய புத்தகம் வெளியிடுவதற்கு பரவலாகத் தடை விதித்தது உட்பட இந்தியாவில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், கல்வி, நிர்வாகம், குற்றவியல் சட்டம் தொடர்பான பல முக்கிய வழக்குகளை இவர் தீர்த்து வைத்துள்ளார். ராம்தேவ் பற்றிய புத்தகத்தால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேர்தல் பிரச்சாரங்கள், தில்லியில் உள்ள உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகம் தொடர்பாக நகராட்சி நிறுவனங்களுக்கு எதிராக பல பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.[2] [3] [4]

வாழ்க்கை[தொகு]

குசராத்தின் அகமதாபாத்தில் பிறந்த இவர், மும்பையில் உள்ள துருலோ கான்வென்ட்டிலிம், மிதிபாய் கல்லூரியிலும் கல்வி பயின்றார்.[5] இவர் 1980இல், இளம் அறிவியல் பட்டம் பெற்றார். 1983இல் தில்லி பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்திலிருந்து [5] இளங்கலைச் சட்டப் பட்டம் பெற்றார்.

தொழில்[தொகு]

அனு மல்கோத்ரா 1985இல் தில்லி நீதித்துறை சேவையில் சேர்ந்தார். மேலும் 2000ஆம் ஆண்டில் தில்லி உயர் நீதித்துறை சேவையின் ஒரு பகுதியாக ஆனார். இவர் கூடுதலாக ஒரு மத்தியஸ்தராக பயிற்சி பெற்றார். மேலும் 2009க்கும் 2011க்கும் இடையில் தில்லி நீதித்துறை கழகத்தின் இயக்குநராக இருந்தார். 2016ஆம் ஆண்டு வரை தில்லி மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக பணியாற்றினார். பின்னர் தில்லி உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[5] [6] [7]

தீர்ப்புகள்[தொகு]

உயர்நீதிமன்றத்தில் அமர்வுகளின்போது, மல்ஹோத்ரா இந்தியாவில் கல்வியை நிர்வகிக்கும் சட்டம் தொடர்பான பல முக்கிய வழக்குகளை முடிவு செய்துள்ளார். 2017ஆம் ஆண்டில், இவரும், மற்றொரு நீதிபதியான கீதா மிட்டல் என்பவரும், பொது நல மனுவை அனுமதித்து, டெல்லியில் உள்ள நகராட்சி நிறுவனங்களுக்கு அரசு பள்ளிகளில் சேர்க்கை செயல்முறைகளை எளிதாக்க பள்ளி காலியிடங்களை இணைய தளத்தில் வெளியிட உத்தரவிட்டனர்.[8] [9] 2019ஆம் ஆண்டில், இவரும் மற்றொரு நீதிபதியும் தில்லி பல்கலைக்கழகமும் பல்கலைக்கழக மானியக் குழுவும் எடுத்த முடிவை வணிகம் மற்றும் பொருளாதார பட்டங்களுக்கான சேர்க்கையை நிர்ணயிப்பதில் கணிதத்தை கட்டாயக் கூறுகளாக்கி, தேவைகளில் ஏற்பட்ட மாற்றத்தை முன்கூட்டியே தெரிவிக்கத் தவறிவிட்டதாகக் கூறி ரத்து செய்தனர்.[10] [11] ஜூலை 2019இல், தில்லியில் புனித இசுடீபன் கல்லூரியில் கிறிஸ்தவ மாணவர்களுக்கான சேர்க்கை செயல்முறையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை இவர் தள்ளுபடி செய்தார்.[12] [13]

பாபா ராம்தேவ் பற்றிய புத்தக வழக்கு[தொகு]

இந்தியாவில் கருத்து சுதந்திரம் தொடர்பான பல முக்கிய வழக்குகளையும் முடிவு செய்துள்ளார். 2018இல், இவர், தொழிலதிபரும் யோகா ஆசிரியருமான ராம்தேவ் பற்றிய புத்தகம் வெளியிடுவதைத் தடுக்கக் கோரிய ஒரு வழக்கை விசாரித்தார்.[4] இவர் புத்தகத்தை வெளியிடுவதை தடை செய்து ராம்தேவின் புகழுக்கான உரிமையை நிலைநாட்டினார். மேலும் அவதூறான பத்திகளின் பகுதிகளை நீகவும் தனது தீர்ப்பில் உள்ளடக்கியிருந்தார்.[14] [15] [16] இந்த தீர்ப்பை எதிர்த்து புத்தகத்தின் வெளியீட்டாளர்கள் இந்திய உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.[17] [18]

2017 ஆம் ஆண்டில், இந்தியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் பதவியில் இருக்கும்போது தங்கள் கட்சிகளுக்கான தேர்தல் பிரச்சாரங்களில் பங்கேற்க தடை விதிக்கும் ஒரு உத்தரவை வழங்க மறுத்தார்.[3]

இவர் இந்தியாவில் குற்றவியல் குற்றங்கள் தொடர்பான பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளார். 2017ஆம் ஆண்டில், இவரும் மற்றொரு நீதிபதியும் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 25 வயது நபருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை அவருக்கு மனைவியும் குழந்தைகளும் இருந்தனர் என்ற அடிப்படையில், ஆறு ஆண்டுகளாகக் குறைத்தனர்.[19][20]

மேற்கோள்கள்[தொகு]

  1. "CJ and Sitting Judges: Anu Malhotra". Delhi High Court.
  2. "Illegal construction, poor sewage responsible for dengue: HC". DNA India (in ஆங்கிலம்). 2017-05-12. பார்க்கப்பட்ட நாள் 2020-10-25.
  3. 3.0 3.1 "Can't pass blanket order on plea to restrain MPs, MLAs: HC". DNA India (in ஆங்கிலம்). 2017-05-02. பார்க்கப்பட்ட நாள் 2020-10-25.
  4. 4.0 4.1 "Book Maligns My Image, Baba Ramdev Tells Delhi High Court". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2020-10-25.
  5. 5.0 5.1 5.2 "CJ and Sitting Judges: Anu Malhotra". Delhi High Court."CJ and Sitting Judges: Anu Malhotra". Delhi High Court.
  6. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  7. "Delhi High Court gets five new judges". The Indian Express (in ஆங்கிலம்). 2016-11-08. பார்க்கப்பட்ட நாள் 2020-10-25.
  8. "Put Details Of Vacant Seats In MCD Schools Online: Delhi High Court". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-25.
  9. "HC asks AAP govt to display vacancies in schools on website". DNA India (in ஆங்கிலம்). 2017-05-12. பார்க்கப்பட்ட நாள் 2020-10-25.
  10. "Delhi High Court Quashes Delhi University Admission Criteria; Application Date Extended To June 22". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-25.
  11. "Delhi University's new admission norms to UG courses could have been announced earlier: HC". DNA India (in ஆங்கிலம்). 2019-06-14. பார்க்கப்பட்ட நாள் 2020-10-25.
  12. "Delhi High Court dismisses petition seeking stay on St Stephen's College admission interviews for Christian students - India News, Firstpost". Firstpost. 2019-07-11. பார்க்கப்பட்ட நாள் 2020-10-25.
  13. "Delhi HC dismisses plea seeking stay on St Stephen's College admission interviews". The Indian Express (in ஆங்கிலம்). 2019-07-11. பார்க்கப்பட்ட நாள் 2020-10-25.
  14. "Baba Ramdev book ban: Through her judgment, Delhi HC judge Anu Malhotra has let everyone read the juicy bits for free - India News, Firstpost". Firstpost. 2018-10-04. பார்க்கப்பட்ட நாள் 2020-10-25.
  15. "Delhi High Court restrains sale of book on Ramdev". The Indian Express (in ஆங்கிலம்). 2018-10-01. பார்க்கப்பட்ட நாள் 2020-10-25.
  16. Scroll Staff. "Delhi High Court restrains publication of book on Ramdev until 'defamatory' parts are removed". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-25.
  17. Quint, The (2018-10-04). "Publishers Refuse to Edit Book Critical of Ramdev, to Move SC". TheQuint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-25.
  18. Scroll Staff. "Ramdev book ban: Supreme Court issues notice to yoga guru on plea against Delhi HC order". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-25.
  19. "Delhi High Court Grants Murder Convict Chance To Reform, Reduces Sentence". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2020-10-25.
  20. "HC gives murder convict a chance to reform, reduces jail term". DNA India (in ஆங்கிலம்). 2017-06-21. பார்க்கப்பட்ட நாள் 2020-10-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனு_மல்கோத்ரா_(நீதிபதி)&oldid=3285753" இலிருந்து மீள்விக்கப்பட்டது