அனு கார்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனு கார்க்

அனு கார்க் (Anu Garg 1967 ஏப்பிரல் 5) அமெரிக்க நூலாசிரியர் மற்றும் பேச்சாளர் ஆவார். வர்ட்ஸ்மித் டாட் ஆர்க் என்னும் இணையத் தளத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். மொழி தொடர்பான நூல்கள் எழுதியுள்ளார்.[1] செய்தித் தாள்கள் இதழ்கள் முதலியவற்றில் எழுதுகிறார். எம்எஸ்என் என்கர்டா, ககானி போன்ற இதழ்களில் எழுதி வருகிறார்.

வாழ்க்கைக்குறிப்புகள்[தொகு]

இந்தியாவில் ஒரு சிற்றூரில் அனு கார்க் பிறந்தார். கிராமச் சூழ்நிலையில் கல்வி கற்றார். தொடக்கத்தில் இந்தி மட்டுமே அவர் அறிவார். 1988 இல் கணினிக் கல்வியில் பட்டம் பெற்றார். அமெரிக்காவில் சியாட்டிலில் வாழ்ந்து வரும் அணு கார்க் 1988 இல் அமெரிக்கக் குடிமகன் ஆனார்.[2]

ஒகியோவில் உள்ள கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகத்தில் கணினியில் முதுகலைப் பட்டம் பெற்றார், ஏடி அண்டு டி போன்ற பெரிய குழுமங்களில் பணிசெய்தார். பல்கலைக்கழகத்தில் பயிலும்போதே வர்ட்ஸ்மித் டாட் ஆர்க் இணையத் தளத்தை தொடங்கினார். இத்தளத்தின் வாசகர்கள் தொகை ஒரு மில்லியனைத் தாண்டிவிட்டது.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனு_கார்க்&oldid=2714986" இலிருந்து மீள்விக்கப்பட்டது