அனுஷ்கா ரவிசங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனுஷ்கா ரவிசங்கர்
பிறப்புநாசிக், இந்தியா
தொழில்எழுத்தாளர்
தேசியம்இந்தியர்
வகைகுழந்தைகள் கதை

அனுஷ்கா ரவிசங்கர் (Anushka Ravishankar) ஓர் இந்திய எழுத்தாளர் ஆவார். இவர் குழந்தைகள் புத்தகங்களை எழுதியவரும், டக்பில் புக்ஸ் என்ற பதிப்பகத்தின் இணை நிறுவனரும் ஆவார்.

சுயசரிதை[தொகு]

அனுஷ்கா ரவிசங்கர் மகாராட்டிர மாநிலத்தின் நாசிக்கில் பிறந்தார். 1981இல் புனேவின் பெர்குசன் கல்லூரியில் கணிதத்தில் பட்டம் பெற்றார். கல்லூரியில் இருந்தபோது, லூயிஸ் கரோல், எட்வர்ட் லியர் மற்றும் எட்வர்ட் கோரே ஆகியோரின் படைப்புகளால் இவர் ஈர்க்கப்பட்டார். செய்பணி ஆய்வியலில் தனது முதுகலை பட்டப்படிப்பை முடித்த பிறகு, இவர் நாசிக்கில் ஒரு தகவல் தொழில்நுட்பநிறுவனத்தில் சிறிது காலம் பணியாற்றினார். தனது மகள் பிறந்த பிறகு முழு நேர எழுத்தாளரானார்.[1]

குழந்தைகள் இலக்கியம்[தொகு]

அனுஷ்கா ரவிசங்கர் தனது முதல் சில கதைகளை இந்தியாவில் வரைகலைத் தொடர் நூல்களை வெளியிடும் நிறுவனமான அமர் சித்திரக் கதை வெளியிட்ட வரைகலை புத்தகமான 'டிங்கிளு'க்கு அனுப்பினார். இந்த இரண்டு கதைகள் பத்திரிகை ஏற்பாடு செய்த போட்டியில் வென்றபோது, 'டிங்கிளி'ன் வெளியீட்டாளர் இவருக்கு ஒரு வேலையை வழங்கினார். தனது இளம் வயது மகளைப் பராமரிப்பதற்காக வீட்டில் தங்கியிருந்ததால் டிங்களுக்கு மட்டுமே எழுத முடிந்தது.[2] 1996 இல் இவரது குடும்பம் சென்னைக்கு சென்றபோது, நகரத்தில் உள்ள குழந்தைகள் வெளியீட்டு நிறுவனமான தாரா புக்ஸ் நிறுவனத்தில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அங்கு இவர் டைகர் ஆன் எ ட்ரீ என்ற புத்தகத்தை எழுதினார். இது சப்பானிய, கொரிய மற்றும் பிரெஞ்சு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட முட்டாள்தனமான வசனங்களின் புத்தகம். இந்த புத்தகம் இந்தியாவில் சுமார் 2500 பிரதிகள் மட்டுமே விற்ற நிலையில், அமெரிக்காவில் 10000 பிரதிகளும், பிரான்சில் 7000 க்கும் மேற்பட்ட பிரதிகளும் விற்றது.[2] இவர் 'ஸ்காலஸ்டிக் இந்தியா' என்ற பதிப்பகத்தில் பதிப்பக இயக்குனராகவும் பணியாற்றினார். [3]

இவர் 2012 இல் சயோனி பாசுவுடன் டக்பில் பப்ளிஷிங் ஹவுஸ் என்ற பதிப்பகத்தை நிறுவினார். 2019இல் பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா இவரது நிறுவனத்தின் அனைத்து புத்தக வெளியீட்டு சொத்துக்களையும் வாங்கியது. [4] [5]

இவர் சில சமயங்களில் இந்தியாவின்சியூஸ் (ஒரு அமெரிக்க குழந்தைகள் எழுத்தாளர்) என்று அழைக்கப்படுகிறார்.[6]

எழுத்து நடை[தொகு]

அனுஷ்கா ரவிசங்கர் பட புத்தகங்கள் மற்றும் அத்தியாயப் புத்தகங்கள் இரண்டையும் எழுதும் அதே வேளையில், குழந்தைகளுக்கான முட்டாள்தனமான வசனங்களை எழுதுவதிலும் தனது சிறப்பை வெளிபடுத்துகிறார்: "என்னுடைய பணியில் சில முட்டாள்தனமான கூறுகள் இருந்தாலும், அது எப்போதும் சுத்த முட்டாள்தனம் அல்ல. அது 'உணர்வுபூர்வமானது', ஆனால் வசனம் மிகவும் அர்த்தமற்றது. நான் ஒலியை அதிகம் நம்பியிருக்கிறேன். சில நேரங்களில் ஒலி உங்களை அர்த்தத்திலிருந்து விலக்குகிறது. பிறகு, என்னுடைய சில புத்தகங்கள் உண்மையில் முட்டாள்தனமானவை. "மன்னிக்கவும், இது இந்தியாவா?" என்பது கரோலியன் அர்த்தத்தில் முட்டாள்தனம்".[7] கேட்ச் தட் குரக்கோடைல்!, எலிபென்ட்ஸ் நெவர் பர்கெட் மற்றும் புலி ஆன் அ ட்ரீ, போன்ற இவருடைய சில புத்தகங்கள் நிஜ வாழ்க்கை நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்டது.

இவர் தனது வசனங்களை சில சமயங்களில், எடுத்துக்காட்டுகள் முடிந்தபின் மீண்டும் எழுதத் தெரிந்தவர். இவர் தென்னாப்பிரிக்கா, சுவிட்சர்லாந்து, இத்தாலி மற்றும் இந்தியாவின் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார். இவருடைய சில புத்தகங்கள் இந்திய சுவை கொண்டவை என்றாலும், பெரும்பாலானவை கலாச்சாரத்திற்கு அப்பாற்பட்டவை.

மேற்கோள்கள்[தொகு]

  1. Bailay, Rasul. "Anushka Ravishankar - She writes stories that children can read for pure fun". http://www.livemint.com/Companies/aAD6UnGMBWtodwpfOf8GqN/Anushka-Ravishankar-She-writes-stories-that-children-can-r.html. 
  2. 2.0 2.1 "Anushka Ravishankar - She writes stories that children can read for pure fun". http://www.livemint.com/Companies/aAD6UnGMBWtodwpfOf8GqN/Anushka-Ravishankar-She-writes-stories-that-children-can-r.html. Bailay, Rasul. "Anushka Ravishankar - She writes stories that children can read for pure fun".
  3. "Duckbill Books" இம் மூலத்தில் இருந்து 2017-10-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171001164138/http://www.duckbill.in/platypus.php. 
  4. "Penguin acquires book publishing assets of Duckbill". 2019-12-01 இம் மூலத்தில் இருந்து 2021-09-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210925153849/http://arrackistan.com/2019/12/01/penguin-acquires-book-publishing-assets-of-duckbill/. 
  5. "Penguin Random House India acquires Duckbill Books children's publishing division". 2019-11-29. https://www.businessinsider.in/business/news/penguin-random-house-india-acquires-duckbill-books-childrens-publishing-division/articleshow/72292963.cms. 
  6. "Anushka Ravishankar: India's Dr.Seuss". http://www.booktrust.org.uk/books/children/authors/131. 
  7. "Anushka Ravishankar: India's Dr.Seuss". http://www.booktrust.org.uk/books/children/authors/131. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுஷ்கா_ரவிசங்கர்&oldid=3592471" இருந்து மீள்விக்கப்பட்டது