அனுஷ்கா சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனுஷ்கா சர்மா
ப்லேண்டேர்ஸ் பிரைட் ஃபேஷன் டூரில் அனுஷ்கா சர்மா
பிறப்பு1 மே 1988 (1988-05-01) (அகவை 35)[1]
அயோத்தி, உத்திர பிரதேசம், இந்தியா
தேசியம்இந்தியா
பணிநடிகை, தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2008–நிகழ்காலம்
வாழ்க்கைத்
துணை
விராட் கோலி

அனுஷ்கா சர்மா (பிறப்பு: 1 மே 1988) இந்தித் திரைப்பட, விளம்பர நடிகை ஆவார். இவர் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ரப் நே பனா தி ஜோடி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

ஆரம்ப வாழ்க்கை

அனுஷ்காவும் விராட் கோலியும் 2015-இல்

அனுஷ்காவின் தந்தை கலோனல் அஜய் ஒரு இராணுவ அதிகாரி மற்றும் அவரது தாய் ஆஷமா இல்லதரசி ஆவார். ஆரம்ப கல்வியை இராணுவ பாடசாலையில் பயின்ற ஷர்மா பெங்களூரில் உள்ள மவிண்ட் கார்மல் கல்லூரியில் கலைத்துறையில் பட்டத்தினை பெற்றார். பின்னர் வடிவழகு துறையில் ஈடுபட மும்பைக்கு சென்றார்.

அனுஷ்கா இந்தியத் துடுப்பாட்ட வீரர் விராட் கோலியை 2017 திசம்பர் 11 இல் இத்தாலியில் திருமணம் புரிந்து கொண்டார்.[2][3][4]

திரைப்பட வரலாறு

ஆண்டு படம் கதா பாத்திரத்தின் பெயர் குறிப்புகள்
2008 ரப் நே பனா தி ஜோடி (Rab Ne Bana Di Jodi) டணி சஹானி பரிந்துரைக்கப்பட்டார்—பிலிம்பேர் விருது சிறந்த நடிகை
2010 பத்மாஷ் கம்பெனி (Badmaash Company) புல்புல் சிங்
2010 பேண்ட் பாஜா பாராத் (Band Baaja Baaraat) ஸ்ருதி கக்கார் பரிந்துரைக்கப்பட்டார்—பிலிம்பேர் விருது சிறந்த நடிகை
2011 பாட்டியாலா ஹவுஸ் (Patiala House) சிம்ரன்
2011 லோடிஸ் வேஸ் ரிக்கி பாகல் (Ladies vs Ricky Bahl) இஷிகா தேசாய்
2012 ஜப் தக் ஹை ஜான் (Jab Tak Hai Jaan) அகிரா ராய் பிலிம்பேர் விருது சிறந்த துணை நடிகை
2013 மற்று கி பிச்லீ கா மன்டோல (Matru Ki Bijlee Ka Mandola) பிச்லீ மன்டோல
2014 பி.கே (P.K) ஜகட் ஜனனி @ ஜக்கு
2014 பாம்பே வெல்வெட் (Bombay Velvet) பின் தயாரிப்பு[5]

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுஷ்கா_சர்மா&oldid=3934108" இலிருந்து மீள்விக்கப்பட்டது