அனுரூபா ராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனுரூபா ராய்
பிறப்பு10 மார்ச்சு 1977 (1977-03-10) (அகவை 47)
புதுதில்லி, இந்தியா
தேசியம் இந்தியா
பணிவிரிவுறையாளர், பொம்மலாட்டக் கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
2004–தற்போது வரை

அனுரூபா ராய் (Anurupa Roy) ஒரு பொம்மலாட்டக் கலைஞரும், பொம்மை வடிவமைப்பாளரும் மற்றும் பொம்மலாட்ட நாடகங்களின் இயக்குனரும் ஆவார்.[1] [2] [3] இவரது பொம்மலாட்டத்தில் [4] பொம்மைகள் "சரங்களால் கையாளப்படுவதில்லை". ஆனால் பிளாஸ்டிக் மற்றும் நிகழ்த்தும் கலைகளின் கலவையாகும். இங்கு சிற்பங்கள், முகமூடிகள், உருவங்கள், பொருட்கள், கண்டுபிடிக்கப்பட்ட பொருள்கள் மற்றும் கதைகள் இசை, இயக்கம், உடல் மற்றும் நாடகங்களை உருவாக்குகின்றன. இங்கே மனிதர்களும் கைப்பாவைகளும்தான் இணை நடிகர்கள்.[5] இவர் கட்கதா குழுவில் 1998 இல் தனது பணிகளைத் தொடங்கினார். இது கட்கதா பொம்மை கலை அறக்கட்டளை 2006 என பதிவு செய்யப்பட்டது. [6] இராமாயணம் மற்றும் மகாபாரதம் முதல் சேக்சுபியரின் நகைச்சுவை வரை உமாயூன் -நாமா வரை குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்காக 15க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை இவர் இயக்கியுள்ளார். குழுவால் பயன்படுத்தப்படும் பொம்மைகள் 3 அங்குலம் முதல் நாற்பது அடி வரை இருக்கும். நிகழ்ச்சிகள் ஐரோப்பா, சப்பான் மற்றும் தெற்காசியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்துள்ளன.[7] [8] காஷ்மீர், இலங்கை மற்றும் மணிப்பூர் போன்ற சிறுவர்களை குற்றவாளிகளாக்கும் மோதல் நிறைந்த பகுதிகளில் உளவியல் சமூக தலையீடுகளுக்கு கைப்பாவைகளைப் பயன்படுத்துவது இவரது பணியின் முக்கிய அம்சமாகும். எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் பாலின பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இவர் நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்களுடன் பொம்மலாட்டங்களைப் பயன்படுத்தி பணியாற்றியுள்ளார். இவர் பொம்மலாட்டத்துக்காக உஸ்தாத் பிசுமில்லா கான் யுவ புரஸ்கார் கௌரவத்தைப் பெற்றவர் (2006). இவர் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தில் புரோ ஹெல்வெட்டியா சுவிஸ் கலை மன்றத்தின் வசிப்பிடக் கலைஞராக இருந்தார். [9] [2] [4]

விருதுகளும், அங்கீகாரமும்[தொகு]

உஸ்தாத் பிசுமில்லா கான் யுவ புரஸ்கார் 2007 - பொம்மலாட்ட நாடகத்திற்கான பங்களிப்புக்கான தேசிய விருது. இந்தியாவின் கலாச்சார அமைச்சகத்தால் நிதியளிக்கப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பான சங்கீத நாடக அகாதடமியால் வழங்கப்பட்டது.

நாடக அரங்கங்களை அடிப்படையாகக் கொண்ட பிற செயல்பாடுகள்[தொகு]

புதுதில்லி சங்கீத நாடக அகாதமி ஏற்பாடு செய்த புதுல் யாத்ரா மும்பை -2005 தேசிய பொம்மலாட்ட நாடக விழாவுக்கான விழா ஒருங்கிணைப்பாளராக இருந்துள்ளார். இது அரசு அமைப்பான சங்கீத நாடக அகாடமியின் உலக பொம்மலாட்ட தினத்தை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு தேசிய விழாவாகும். சிலோவாக்கியாகுடியரசின் தலைநகரான பிராடிசிலாவாவில் நடந்த சர்வதேச இளைஞர் மற்றும் குழந்தைகள் திரைப்பட விழாவில் இவர் ஒரு நடுவராக இருந்தார். இயங்குபடம், ஆவணப்படம், புனைகதை மற்றும் பத்திரிகை ஆகிய பிரிவுகளில், 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 80 படங்கள் இடம்பெறும் ஏழு நாள் நிகழ்வாகும்.

நடத்தப்பட்ட பட்டறைகள்[தொகு]

2013– மோதல் மண்டலமான மணிப்பூரின் சுராசந்த்பூரில் இளைஞர்களுடன் பட்டறை- (அமைதி நடவடிக்கைகளை உருவாக்குவாக்குவதற்கு அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து) சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பழங்குடியின இளைஞர்களுடன் பொம்மலாட்ட பட்டறை, பழங்குடி மக்களிடையே உரையாடல் மற்றும் புரிதலை உருவாக்குதல் போன்றவை. 22 வருடங்களாக மணிப்பூரில் ஒருவருக்கொருவர் மோதலில் ஈடுபட்டுள்ள பேத்தாய், நாகா மற்றும் குகி பின்னணியைச் சேர்ந்த இளைஞர்களுடன் இணைந்து இந்த பட்டறை நடைபெற்றது. மாவட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட பட்டறையின் முடிவில் இளைஞர்கள் ஒரு பெரிய பொம்மலாட்ட நிகழ்ச்சியை உருவாக்கினர். இலங்கை -அமைதி மேம்பாட்டு நிறுவனத்துடன் இலங்கை தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள இளைஞர் தலைவர்களுடன் கலை மற்றும் அமைதி கட்டமைப்பு பற்றிய கருத்துக்களை ஆய்வு செய்யவும் இந்த பட்டறைகள் ஈடுபட்டன. ஆறு நாள் பட்டறை இந்த இளைஞர் தலைவர்களுக்கு அவர்களின் சொந்த சமூகத்தில் பொம்மலாட்ட அடிப்படையிலான பயிற்சியளிப்பதன் மூலம் தங்கள் சொந்த சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவும் பயிற்சி அளித்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-09-21. பார்க்கப்பட்ட நாள் 2021-09-21.
  2. 2.0 2.1 https://scroll.in/magazine/890667/an-indian-puppeteer-is-trying-to-firmly-knot-fringe-narratives-to-mainstream-audiences
  3. Pragati K.B. "Magic in the mundane". The Hindu.
  4. 4.0 4.1 https://www.thehindu.com/entertainment/theatre/puppets-come-to-life-in-anurupa-roys-masterly-hands/article22331695.ece
  5. "A lifetime of puppetry". Deccan Herald.
  6. "Archived copy". Archived from the original on 19 January 2014. பார்க்கப்பட்ட நாள் 2015-03-10.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-04-28. பார்க்கப்பட்ட நாள் 2021-09-21.
  8. "Anurupa Roy". indiaifa.org. Archived from the original on 2023-03-16. பார்க்கப்பட்ட நாள் 2021-09-21.
  9. https://www.mumbaitheatreguide.com/dramas/interviews/anurupa-roy-interview.asp#

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுரூபா_ராய்&oldid=3721437" இலிருந்து மீள்விக்கப்பட்டது