அனுராதா லோகியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனுராதா லோகியா
Anuradha Lohia
3ஆவது துணை வேந்தர், மாநிலப் பல்கலைக்கழகம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2 மே 2014
அதிபர்மேற்கு வங்காள ஆளுநர்களின் பட்டியல்
ஆளுநர்எம். கே. நாராயணன்
கேசரிநாத் திரிபாதி
இயக்தீப் தாங்கார்
முன்னையவர்மாளபிகா சர்கார்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
வாழிடம்
முன்னாள் கல்லூரி

அனுராதா லோகியா ( Anuradha Lohia ) இந்திய மூலக்கூறு ஒட்டுண்ணியலாளர் ஆவார். தொற்று நோய்கள் துறையில் இவர் பணிபுரிகிறார்.[1][2] தற்போது மாநிலப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ளார்.[3][4][5][6] முன்னதாக இவர் கொல்கத்தாவில் உள்ள போசு நிறுவனத்தில் உயிர் வேதியியல் துறையின் தலைவராக இருந்தார். இந்தோ-பிரிட்டிசு வெல்கம் அறக்கட்டளை, இந்தியாவில் மருத்துவ ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் டிபிடி இந்தியா அலையன்சு என்ற அமைப்புகளின் தலைவராகவும் அனுராதா இருந்துள்ளார்.[7]

கல்வி மற்றும் தொழில்[தொகு]

கொல்கத்தாவில் உள்ள பெண்களுக்கான மாடர்ன் உயர்நிலைப் பள்ளி மாணவியாக இவர் கல்வி கற்றார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் உள்ள மாநிலக் கல்லூரியில் படித்து உடலியல் அறிவியலில் இளநிலை பட்டமும், கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் ராசாபசார் அறிவியல் கல்லூரியில் படித்து முதுநிலை உடலியல் பட்டமும் பெற்றார். பின்னர் இந்திய வேதியியல் உயிரியல் நிறுவனத்தில் விப்ரியோ காலரா எனப்படும் பாக்டீரியா குறித்த ஆய்வை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார்.[8] அனுராதா உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் வருகை தரும் விஞ்ஞானியாக இருந்தார். நியூயார்க் பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் முதுகலை ஆராய்ச்சி செய்தார். இந்திய அறிவியல் அகாடமியின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் . சிறீ சக்தி விருதும், யுனெசுகோவின் மூலக்கூறு மற்றும் செல் உயிரியல் வலையமைப்பு மானியமும் வழங்கப்பட்டன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Anuradha Lohia Vice Chancellor". Presidency University, Kolkata. பார்க்கப்பட்ட நாள் 13 July 2016.
  2. "Anuradha Lohia". Bose Institute. Archived from the original on 22 July 2016. பார்க்கப்பட்ட நாள் 13 July 2016.
  3. "Lohia selected as Presidency VC". The Telegraph (Calcutta). 27 April 2014. பார்க்கப்பட்ட நாள் 13 July 2016.
  4. "Presidency University VC Anuradha Lohia under gherao since last evening". தி எகனாமிக் டைம்ஸ். 22 August 2015. பார்க்கப்பட்ட நாள் 13 July 2016.
  5. "Presidency University stalemate: Students vacate V-C Anuradha Lohia's chambers, panel set up to hear them out". Indian Express. 26 August 2015. பார்க்கப்பட்ட நாள் 13 July 2016.
  6. "Happy to feature on Presidency University's vice chancellor probable list: Lohia". Jhimli Mukherjee Pandey. Times of India. 25 April 2014. பார்க்கப்பட்ட நாள் 13 July 2016.
  7. "Ten women, ten questions: Anuradha Lohia". indiabioscience.org. 17 July 2015. Archived from the original on 20 December 2016. பார்க்கப்பட்ட நாள் 13 July 2016.
  8. "Anuradha Lohia". StreeShakti. Archived from the original on 7 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 13 July 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுராதா_லோகியா&oldid=3926808" இலிருந்து மீள்விக்கப்பட்டது