உள்ளடக்கத்துக்குச் செல்

அனுராதா பால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனுராதா பால்
பின்னணித் தகவல்கள்
பிறப்பிடம்மும்பை, மகாராட்டிரம், இந்தியா
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை, உலக இசை, தாள இசைக்கருவி
தொழில்(கள்)இசையமைப்பாளர், இசை இயக்குநர், கைம்முரசு இணை நிபுணர்
இசைக்கருவி(கள்)கைம்முரசு இணை, பல தாள இசைக்கருவி
வெளியீட்டு நிறுவனங்கள்Sur aaur Saaz
இணையதளம்www.anuradhapal.com

அனுராதா பால் (Anuradha Pal) ஒரு கைம்முரசு இணை கலைஞரும், பல தாளவாதியும், இசையமைப்பாளரும் ஆவார். இவர் பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம், லிம்கா சாதனைகள் புத்தகம் ஆகியவற்றால் உலகின் முதல் தொழில்முறை பெண் தபலா வாசிப்பாளராகப் போற்றப்படுகிறார்.[1][2]

தனது சொந்த போராட்டங்களால் தூண்டப்பட்ட இவர், முதன்முதலில் அனைத்து பெண் இந்திய பாரம்பரிய இசை இசைக்குழுவான, ஸ்த்ரீ சக்தியை நிறுவினார்.[3]

இவரது பங்களிப்புகளுக்காக, இவர் பிரதமர் நரேந்திர மோடியால் 2017இல் பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டார்.[4]

இவர் 2006 இல் பெண் அதிகாரம், கல்வி மற்றும் சேர்க்கைக்கான யுனிசெஃப் விளம்பரத் தூதராகவும் இருந்தார்.

அனைத்திந்திய வானொலியின் உயர்தர விதுஷி, கலாச்சார அமைச்சகம் மற்றும் கலாச்சார உறவுகளுக்கான இந்திய மன்றம் ஆகியவற்றில் சிறந்த தரவரிசை இசைக்கலைஞராக இவர் பட்டியலிடப்பட்டார்.[5] 20 ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையான பயிற்சியில் நிறுவப்பட்ட இவரது சிறந்த குரலின் தரம், இசைத்திறன் மற்றும் துல்லியமான தாள கலைத்திறனுக்காக உலகளவில் மதிக்கப்படுகிறது.[6] இந்துஸ்தானி இசை , கருநாடக இசை, உலக இசை, நடனம், கவிதை, ஓவியம் போன்றவற்றுடன் சர்வதேச ஒத்துழைப்புடன்[7] முன்னணி நிபுணர்களுடன் இவருடைய உணர்திறன் மற்றும் சிந்தனைமிக்க துணை போன்றவை.[8]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

அனுராதா பால் மும்பையில் முக்கிய மருந்து வியாபாரியான, தேவிந்தர் பால்-ஓவியர்- எழுத்தாளர் இலா பால் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார்.[9] பனாரசு கரானாவின் ஸ்ரீ மாணிக்ராவ் போபட்கர் மற்றும் மதன் மிசுரா ஆகியோரின் கீழ் தனது தபலா பயிற்சியைத் தொடங்கினார். இறுதியாக உஸ்தாத் அல்லா ரக்கா மற்றும் பஞ்சாப் கரானாவின் சாகீர் உசேன் [10] ஆகியோரின் கீழ் நன்கு பயிற்சி பெற்ற நிபுணரானார்.

ஒரு குழந்தை அதிசயமாக, இவர் தனது 9வது வயதில் தூர்தர்ஷனுக்காக தனது முதல் நிகழ்ச்சியை வழங்கினார்.[11] இவர் பதினேழு வயதில் மகாராட்டிரா டைம்ஸ் என்ற பத்திரிக்கையால் லேடி சாகிர் உசேன் என்று வர்ணிக்கப்பட்டார்.[12]

பெண் வலுவூட்டலுக்கு பங்களிப்பு[தொகு]

அனுராதா 25 ஆண்டுகளுக்கும் மேலாக தனது இசைக்குழுவான ஸ்திரீ சக்தி மூலம், ஆண் ஆதிக்கம் செலுத்தும் துறைகளில் போராடும் மற்ற பெண் இசைக்கலைஞர்களை ஊக்குவித்து வருகிறார்.[13]

சிறீஅக்ரசன் கன்யா பிஜி கல்லூரி (வாரணாசி),[14] ரெபெல் கேர்ள்ஸ் இன்டராக்டிவ் (டெல்லி),[15] ருயா கல்லூரி (மும்பை) ஆகிய இடங்களில் இளம் பெண்களுக்கு சுய-அதிகாரம் மற்றும் சுயமரியாதையை வளர்க்க ஊக்குவிப்பதற்காக இவர் இசை நிகழ்ச்சியினை நிகழ்த்தியுள்ளார்.

கௌரவங்கள்[தொகு]

பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விளம்பரத் தூதரான, அனுராதா 'பாரத் கி லக்ஷ்மி',[16] 'ரிதம் குயின்',[17] 'பெர்குஷனிஸ்ட் பார் எக்ஸலன்ஸ்', 'தப்லா நிகழ்வு' (இந்தியா டுடே 2000), இந்திய இசையில் மிகவும் செல்வாக்கு மிக்க பெண் (ஏவி மேக்ஸ் பத்திரிகை 2001), 'தேசிய பெருமை மற்றும் உத்வேகம்' (டிரிப்யூன் 2012), இந்திய பாரம்பரிய இசையின் முக்கிய ஜோதி,[18] மற்றும் 'தூய அதிசய பெண்' மற்ற பெண்களை மேம்படுத்துதல் மற்றும் சமூகத்தின் பார்வையை மாற்றுவது, (சஹாரா டைம்ஸ் 2004) உள்ளிட்ட பல கௌரவங்களை பெற்றுள்ளார்.

லிம்கா சாதனைகள் புத்தகம் 1991 -ல் 'உலகின் முதல் தொழில்முறை பெண் கைம்முரசு நிபுணர்' என்று அங்கீகரித்தது.

மேற்கோள்கள்[தொகு]

 1. "Showreel - Anuradha Pal". Youtube.
 2. "Woman of many rhythms". The Tribune. https://www.tribuneindia.com/2012/20120708/spectrum/book7.htm. 
 3. "Anuradha Pal's Stree Shakti in 1996". YouTube.
 4. "Beti Bachao, Beti Padhao".
 5. "All India Radio". Facebook.
 6. "6 Gharanas | Anuradha Pal". YouTube.
 7. "Collaborations". YouTube.
 8. "Tabla Accompaniment". YouTube.
 9. "Archived copy". Archived from the original on 30 March 2018. பார்க்கப்பட்ட நாள் 29 September 2019.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
 10. "Interview with Anuradha Pal–a female Tabla Player". 3 June 2010. Archived from the original on 28 ஆகஸ்ட் 2018. பார்க்கப்பட்ட நாள் 21 செப்டம்பர் 2021. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
 11. "Pandita Anuradha Pal's Showreel". Vimeo.
 12. "Lady Zakir Hussain - Maha Times". Anuradha Pal. Archived from the original on 2021-07-22. பார்க்கப்பட்ட நாள் 2021-09-21.
 13. "Meet Stree Shakti, India’s first all-women classical band". https://www.hindustantimes.com/art-and-culture/meet-stree-shakti-india-s-first-all-women-classical-band/story-8cstvXJdcxW7zsjnPOQS5M.html. 
 14. "Agrasen Kanya College". Anuradha Pal. Archived from the original on 2021-08-01. பார்க்கப்பட்ட நாள் 2021-09-21.
 15. "Rebel Girls". Instagram.
 16. "Bharat ki Laxmi". Twitter.
 17. "Anuradha Pal Press Clippings". Anuradha Pal. Archived from the original on 2021-08-01. பார்க்கப்பட்ட நாள் 2021-09-21.
 18. "Torchbearers". Twitter.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுராதா_பால்&oldid=3927086" இலிருந்து மீள்விக்கப்பட்டது