அனுராதபுரம் அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனுராதபுரம் தொல்லியல் அருங்காட்சியகம்
அனுராதபுரம் தூபாராமவில் உள்ள வட்டதாகேயின் மாதிரி.
Map
அமைவிடம்அனுராதபுரம், இலங்கை
வகைதொல்லியல்
வலைத்தளம்http://www.archaeology.gov.lk

அனுராதபுரம் அருங்காட்சியகம், அனுராதபுர நூதனசாலை அல்லது புரவிது பவன (Anuradhapura Museum) என்பது, இலங்கையில் உள்ள தொல்லியல் அருங்காட்சியகங்களுள் ஒன்று.[1] இது பிரேசன் மாளிகைக்கும், ருவான்வெலிசாயவுக்கும் இடையில் உள்ள அனுராதபுரம் பழைய கச்சேரிக் கட்டிடத்தில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம் 1947 ஆம் ஆண்டில் சேனரத் பரணவிதானவின் முயற்சியால் அமைக்கப்பட்டது.[2][3] இந்தத் தொல்லியல் அருங்காட்சியகம் கலாச்சார முக்கோணப் பகுதியில் உள்ள மிகப் பழைய அருங்காட்சியகங்களுள் ஒன்று.[4][5]

இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கண்டெடுக்கப்பட்ட அரும்பொருட்கள் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. புத்தர் சிலைகள், கல்வெட்டுக்கள், வரைபடங்கள், பொம்மைகள், நாணயங்கள், அணிகலன்கள், மணிகள் போன்ற பல பொருட்கள் இவற்றுள் அடங்குகின்றன.[2][3] தூபாராமவில் உள்ள வட்டதாகே எனப்படும் வட்ட வடிவமான கட்டிடத்தின் மாதிரி ஒன்றும் இங்குள்ளது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Anuradhapura Museum (National)". archaeology.gov.lk. Archived from the original on 27 செப்டம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 3 July 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 "Archaeological Museum". tour.lk. Archived from the original on 18 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 3 July 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. 3.0 3.1 "Anuradhapura Archaeological Museum :Reflecting the rich heritage of the Rajarata". sundayobserver.lk. Archived from the original on 24 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 3 July 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "MUSEUMS IN THE CULTURAL TRIANGLE". mysrilanka.com. பார்க்கப்பட்ட நாள் 3 July 2015.
  5. "Anuradhapura Archaeological Museum". ceylonbestholiday4u.lk. Archived from the original on 29 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 3 July 2015.
  6. "The Sacred City of Anuradhapura, Sri Lanka". mysrilankaholidays.com. பார்க்கப்பட்ட நாள் 3 July 2015.