அனுராக் ஆச்சார்யா
Appearance
அனுராக் ஆச்சார்யா Anurag Acharya | |
---|---|
தேசியம் | இந்தியா |
துறை | மென்பொருட் பொறியியல் |
பணியிடங்கள் | கூகுள் |
கல்வி | |
ஆய்வேடு | உற்பத்தி அமைப்பு திட்டங்களில் அளவிடுதல் (1994) |
அறியப்படுவது | கூகுள் இசுகாலர் |
அனுராக் ஆச்சார்யா (Anurag Acharya) கூகுள் இசுகாலர் என்ற இலவசமாக அணுகக்கூடிய வலைத் தேடுபொறியின் இணை-நிறுவனராக அறியப்படுகிறார்.[1] 2014 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஆச்சார்யா கூகுளில் புகழ்பெற்ற பொறியாளர் என்ற பட்டத்தை வைத்திருந்தார். [2] இவரும் இவரது கூகுள் சகா அலெக்சு வெர்சுடாக்கும் இணைந்து 2004 ஆம் ஆண்டு கூகுள் இசுகாலரை நிறுவினர். இந்த திட்டத்திற்கான யோசனை பல ஆண்டுகளுக்கு முன்பு ஆச்சாரியா காரக்பூர் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் பட்டப்படிப்பு படித்தபோது உருவானது. அறிஞர் இலக்கியத்தை விரைவாக அணுகுவதற்கு அனுராக் அப்போது சிரமப்பட்டார். [3] [4] 2016 ஆம் ஆண்டில் அனுராக் ஆச்சார்யா காரக்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் சிறந்த முன்னாள் மாணவர் விருதைப் பெற்றார். [5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Van Noorden, Richard (2014-11-07). "Google Scholar pioneer on search engine’s future" (in en). Nature News. doi:10.1038/nature.2014.16269. http://www.nature.com/news/google-scholar-pioneer-on-search-engine-s-future-1.16269.
- ↑ Levy, Steven (2014-10-17). "The Gentleman Who Made Scholar" (in en-us). Wired. https://www.wired.com/2014/10/the-gentleman-who-made-scholar/.
- ↑ Matham, Adarsh (2014-11-15). "Tech Guru Anurag Acharya". New Indian Express. https://www.newindianexpress.com/lifestyle/tech/2014/nov/15/Tech-Guru-Anurag-Acharya-682867.html.
- ↑ Markoff, John (2004-11-18). "Google Plans New Service for Scientists and Scholars" (in en-US). The New York Times. https://www.nytimes.com/2004/11/18/technology/google-plans-new-service-for-scientists-and-scholars.html.
- ↑ "Ajit Jain, Anurag Acharya given Distinguished Alumnus Awards" (in en). India Today. 2016-07-31. https://www.indiatoday.in/pti-feed/story/ajit-jain-anurag-acharya-given-distinguished-alumnus-awards-676242-2016-07-31.
புற இணைப்புகள்
[தொகு]- Anurag Acharya publications indexed by Google Scholar