உள்ளடக்கத்துக்குச் செல்

அனுமான் திப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனுமான் திப்பா (Hanuman Tibba) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் காங்க்ரா மாவட்டத்தில் உள்ள மிக உயரமான மலை சிகரமாகும். இச்சிகரம் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தௌலதார் மலைத்தொடரில் கடல் மட்டத்திலிருந்து 5,982 மீட்டர் (19,626 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. அனுமான் திப்பா சிகரம் மணாலியின் வடமேற்கிலும் சோலாங் பள்ளத்தாக்கின் கிழக்கிலும் அமைந்துள்ளது. இச்சிகரத்தின் வடக்கே, டைன்டுகா கணவாயும் தெற்கே மணாலி கணவாயும் அமைந்துள்ளன.[1] இந்தக் கணவாய்கள் காங்க்ரா மாவட்டத்திற்கும் குலு மாவட்டத்திற்கும் இடையிலான மாவட்ட எல்லையை உருவாக்குகின்றன. ஒரு பிரபலமான உள்ளூர் சிகரமான இச்சிகரம் செங்குத்தான பிரமிடை ஒத்திருக்கிறது. அடிப்படை முகாம் தளத்திலிருந்து செங்குத்தாக, செங்குத்து உயர்வாக இருப்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதன் மேற்கு முகம், "மேற்கு பக்கமலை வழியாக ஏற பல முயற்சிகளுக்கு சமீபத்தில் ஒரு தளமாக இருந்து வருகிறது. ஒரு செங்குத்தான, நீடித்த பாறை அம்சமான இது பெரும்பாலும் காற்று மற்றும் கரடுமுரடான பனிக்கட்டிகள் ஆகியவற்றால் வெளிப்படும். இந்த முகம் மற்றும் வடக்கு முகம் வழியாக செல்லும் நேரடி வழி இன்னும் ஏறப்படவில்லை. பெரிய இமயமலையின் ஆல்பைன் சங்கத்தின் சமீபத்திய குறிப்பிடத்தக்க முயற்சியில், 4 மலையேற்ற வீரர்கள் இந்த பாதை வழியாக ஏற முயன்றனர். ஆனால் 5,720 மீ (18,770 அடி) உயரத்தில் பனி நிலைமைகளால் தடையேற்பட்டு தோற்கடிக்கப்பட்டனர்.

ஆரம்பத்தில் வெர்னர் மெர்க்கல் ரோத்து மற்றும் சக உறுப்பினர்கள் கிட்டத்தட்ட 5,500 மீ (18,000 அடி) உயரத்தில் சுமார் 58 மீட்டர் பாறை பாதையில் ஏறியதாக வந்த செய்திகளைச் சுற்றி சில சர்ச்சைகள் எழுந்தன. பின்னர் ஓர் ஆத்திரிய ஏறும் குழுவினர் அதை அறிக்கை செய்து சரிபார்த்தபோது இந்தக் கூற்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.[2][3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://himachalpradeshtravel.com/wp-content/uploads/2016/08/Tourist-Map-Kangra.jpg வார்ப்புரு:Bare URL image
  2. "Himachal Pradesh: Climbing Hanuman Tibba". Outlook India. 29 January 2016. Retrieved 5 July 2018.
  3. Pawar, Jayanti. "Tamil classical conference flag hoisted at Hanuman Tibba". Chennai. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-educationplus/Tamil-classical-conference-flag-hoisted-at-Hanuman-Tibba/article16193357.ece/. பார்த்த நாள்: 5 July 2018.
  4. Sharma, Suresh. "Peaks around Manali including Rohtang pass, Seven Sisters, Deo Tibba, Hanuman Tibba, Hamta Pass, have been experiencing snowfall since morning. Waves of cold have gripped Manali.". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/Peaks-around-Manali-including-Rohtang-pass-Seven-Sisters-Deo-Tibba-Hanuman-Tibba-Hamta-Pass-have-been-experiencing-snowfall-since-morning-Waves-of-cold-have-gripped-Manali-/articleshow/10280372.cms.

32°20′10″N 77°03′04″E / 32.336°N 77.051°E / 32.336; 77.051

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுமான்_திப்பா&oldid=4363420" இலிருந்து மீள்விக்கப்பட்டது