அனுபம் பாசு
பேராசிரியர் அனுபம் பாசு | |
|---|---|
| குடியுரிமை | இந்தியர் |
| கல்வி | கணினி அறிவியல் மற்றும் பொறியியலில் முனைவர் பட்டம், கரக்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகம் |
| பணி | கல்வியாளர், பேராசிரியர் |
அனுபம் பாசு (Anupam Basu) கணினியியல் , பொறியியல் துறையில் நிபுணத்துவம் பெற்ற ஒரு இந்தியக் கல்வியாளரும், ஆராய்ச்சியாளரும் ஆவார்.
கல்வி மற்றும் ஆரம்பகாலப் பணி
[தொகு]பாசு 1980-இல் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல், தொலைத்தொடர்பு பொறியியலில் இளங்கலைப் பொறியியல் பட்டத்தையும், 1982-இல் கணினியியலில் முதுகலைப் பொறியியல் பட்டத்தையும் பெற்றார். இவர் 1988-இல் கரக்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் கணினியியலில் பொறியியலில் முனைவர் பட்டத்தை நிறைவு செய்தார்.[1]
கல்விசார் பதவிகள்
[தொகு]பாசு கரக்பூரில் கணினியியல் பொறியியல் துறையில் பேராசிரியராகவும், பின்னர் கல்வித் தொழில்நுட்ப மையத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.[2][3] இவர் துர்காபூர் தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநராகப் பணியாற்றினார்.[4][5]மேலும், ஜூன் 2021 முதல் சிவ நாடார் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பள்ளியில் கௌரவப் பேராசிரியராக இருந்து வருகிறார்.[6] இவர் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் 'ராஜா ராமண்ணா இருக்கை' பேராசிரியராகவும் உள்ளார்.[7] இவர் இர்வைன், கலிபோர்னியா பல்கலைக்கழகம், கனடாவின் ஒன்ராறியோவில் உள்ள குயெல்ஃபு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். மேலும், கணினியியல் மற்றும் பொறியியலுக்கான பாடத்திட்ட திருத்தக் குழுவின் தலைவராகவும் இந்திய அரசு, மேற்கு வங்காள அரசின் பல்வேறு குழுக்களில் உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார்.[8]
ஆராய்ச்சி
[தொகு]பாசுவின் ஆராய்ச்சி ஆர்வங்களில் அறிவாற்றல், நுண்ணறிவு அமைப்புகள், செயற்கை நுண்ணறிவு, உதவித் தொழில்நுட்பங்கள் , உட்பொதிக்கப்பட்ட அமைப்புகள், மொழி செயலாக்கம் ஆகியவை அடங்கும். தொழில்நுட்பம் சார்ந்த கல்வி, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் முயற்சிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் திட்டங்களுக்கு இவர் தலைமை தாங்கியுள்ளார்.[9] மாற்றுத் திறனாளிகளை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட உட்பொதிக்கப்பட்ட அமைப்பு சார்ந்த கருவிகளின் உருவாக்கத்தில் இவர் ஈடுபட்டுள்ளார். மேலும் இத்துறையில் பல தேசியத் திட்டங்களுக்கும் தலைமை தாங்கியுள்ளார்.[10][11][12]
விருதுகள் மற்றும் கௌரவங்கள்
[தொகு]தொழில்நுட்பம் , உதவிச் சாதனங்களுக்கான இவரது பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் பாசு பல விருதுகளைப் பெற்றுள்ளார்:
- பார்வையற்றோருக்கான தொழில்நுட்பங்களின் ஆராய்ச்சி மேம்பாட்டிற்கான பங்களிப்பிற்காக, இந்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத் துறையின் 'இளம் விஞ்ஞானி விருது' (1992).[13]
- மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிச் சாதனங்கள் குறித்த ஆராய்ச்சிக்காக, கொல்கத்தா வர்த்தக சபையின் 'சிறந்த நபர்களுக்கான ஜே.சி.விருது' (1996).
- உட்பொதிக்கப்பட்ட அமைப்புகள் துறையில் மேற்கொண்ட பணிக்காக, ஜெர்மனியின் அலெக்சாண்டர் வான் ஹம்போல்ட் ஸ்டிஃப்டுங்கின் 'ஹம்போல்ட் சகா' (1997).[14]
- இந்திய தேசியப் பொறியியல் அகாதமியின் உறுப்பினர்.[15]
- இந்திய தேசிய அறிவியல் அகாதமியின் உறுப்பினர்.[16]
- பேச்சுக் குறைபாடு உள்ளவர்கள் , பெருமூளை வாதம் உள்ளவர்களின் தகவல்தொடர்புக்கு உதவும் தொழில்நுட்பத்திற்காக, டெட்ராய்ட் பொறியியல் சங்கம் , மிச்சிகன் மல்டிபிள் ஸ்களீரோசிஸ் சங்கம் வழங்கிய டாவின்சி விருது (2004).
- இந்திய சமூக நீதி, இளைஞர் மேம்பாட்டு அமைச்சகம் வழங்கிய, மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான தேசிய விருது (2007).
- மாற்றுத்திறனாளிகளுக்கான வடிவமைப்பில் ஆற்றிய பங்களிப்புகளுக்காக, இந்திய மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கான தேசிய மன்றம் வழங்கிய எம்பசிஸ் யுனிவர்சல் டிசைன் விருது (2011).[17]
- மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்துவதற்கான சிறந்த பங்களிப்பிற்கான மாநில விருது (2014).
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Faculty at School of Engineering - Biography". SNU. Retrieved August 18, 2025.
- ↑ "Faculty Profile". IIT Kharagpur. Retrieved August 18, 2025.
- ↑ "Prof. Anupam Basu". India Science and Technology Government of India. Retrieved August 18, 2025.
- ↑ "Government appoints directors to 11 NITs". Indian Express Newspaper. Retrieved August 18, 2025.
- ↑ "Faculty Profile". National Institute of Technology Durgapur. Retrieved August 18, 2025.
- ↑ "Faculty at School of Engineering - Biography". SNU. Retrieved August 18, 2025.
- ↑ "INAE Webinar Series". INAE. Retrieved August 19, 2025.
- ↑ "Professor Anupam Basu" (PDF). NCERT. Retrieved August 18, 2025.
- ↑ "Author's Profile". IEEE. Retrieved August 18, 2025.
- ↑ "IIT-Kgp software to convert Indian languages into Braille". India Today. Retrieved August 18, 2025.
- ↑ "A technology designed to touch many lives". Rediff. Retrieved August 18, 2025.
- ↑ "Jadavpur University Installs 'Sparsh' for Visually Challenged Students". Apac News. Retrieved August 18, 2025.
- ↑ "National Institute of Technology Durgapur" (PDF). Nitdgp. Retrieved August 18, 2025.
- ↑ "Prof. Dr. Anupam Basuu Profile". .humboldt-foundation. Retrieved August 18, 2025.
- ↑ "The Indian National Academy of Engineering". INAE. Retrieved August 18, 2025.
- ↑ "- National Academy of Science of India". NASI. Retrieved August 18, 2025.
- ↑ "Professor Anupam Basu" (PDF). NCERT. Retrieved August 18, 2025.