உள்ளடக்கத்துக்குச் செல்

அனுபமா ஜெய்சுவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனுபமா ஜெய்சுவால்
கல்வி அமைச்சர்
உத்தரப் பிரதேச அரசு
பதவியில்
19 மார்ச்சு 2017 – 20 ஆகத்து 2019
பின்னவர்சதீசு சந்திர திவேதி
குழந்தைகள் மேம்பாடு, ஊட்டத்து துறை அமைச்சர்
உத்தரப் பிரதேச அரசு
பதவியில்
19 மார்ச்சு 2017 – 20 ஆகத்து 2019
பின்னவர்சுவாதி சிங்
உறுப்பினர்-உத்தரப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
11 மார்ச்சு 2017
முன்னையவர்வாகர் அகமது சா
தொகுதிபகராயிச்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 பெப்ரவரி 1967 (1967-02-03) (அகவை 58)
பகராயிச் மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்
அசோக் குமார் ஜெய்சுவால் (தி. 1989)
பிள்ளைகள்1 மகன், 2 மகள்கள்
பெற்றோர்இரவீந்திர காந்த்
முன்னாள் மாணவர்முதுகலை, இளங்கலைச் சட்டம்-டாக்டர் இராம் மனோகர் லோகியா அவத் பல்கலைக்கழகம்
தொழில்அரசியல்வாதி
மூலம்: [1]

அனுபமா ஜெய்சுவால் (Anupama Jaiswal) ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தின் 17ஆவது, 18ஆவது சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் உத்தரப் பிரதேசத்தின் பக்ரைச் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அனுபமா பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக உள்ளார்.[1][2]

இளமையும் கல்வியும்

[தொகு]

ஜெய்சுவால் 1967 மார்ச் 2 அன்று உத்தரப் பிரதேசத்தின் பகராயிச் மாவட்டத்தில் இரவீந்திர காந்த் ஜெய்சுவாலின் மகளாகப் பிறந்தார். இவர் கல்வார் (ஜெய்சுவால்) சமூகத்தைச் சேர்ந்தவர். 1989ஆம் ஆண்டில் இவர் வங்கி மேலாளர் அசோக் குமார் ஜெய்சுவாலை மணந்தார், இந்த இணையருக்கு ஒரு மகன் (சிவம் ஜெய்சுவால்) மற்றும் இரண்டு மகள்கள் (ஐஸ்வர்யா ஜெய்சுவால், சுவாதி ஸ்ரீ ஜெய்சுவால்) உள்ளனர். 1999-ஆம் ஆண்டில், இவர் முதுகலை கலை பட்டம் பெற்றார், 2010-ஆம் ஆண்டில் அயோத்தி மாவட்டம் பைசாபாத்திலுள்ள டாக்டர் இராம் மனோகர் லோகியா அவத் பல்கலைக்கழகத்தில் இளங்கலைச் சட்டப் பட்டம் பெற்றார்.

அரசியல்

[தொகு]

ஜெய்சுவால் உத்தரப் பிரதேசத்தின் பதினேழாவது சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பகராயிச் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தனது நெருங்கிய போட்டியாளரான சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் உரூபாப் சயீதாவினை 6,702 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[3] யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் அடிப்படை கல்வி, குழந்தைகள் மேம்பாடு மற்றும் ஊட்டச்சத்து, வருவாய், நிதி ஆகிய துறைகளுக்கான இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Member Profile". www.upvidhansabhaproceedings.gov.in. Archived from the original on 25 December 2024. Retrieved 31 August 2019.
  2. "Candidate affidavit". My neta.info. Retrieved 31 August 2019.
  3. "Assembly result 2017". Elections.in. Archived from the original on 13 March 2019. Retrieved 2019-08-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுபமா_ஜெய்சுவால்&oldid=4377515" இலிருந்து மீள்விக்கப்பட்டது