அனுச்சா இயங்கு
தோற்றம்

தனிநபர் தகவல் | |
---|---|
தேசியம் | இந்தியர் |
பிறப்பு | 6 ஆகத்து 1971 தானே, இந்தியா |
தொழில் | குறிபார்த்து சுடுபவர் |
உயரம் | 167 cm (5 அடி 6 அங்) |
துணைவர்(கள்) | சமரேசு இயங்கு |
அனுச்சா இயங்கு (Anuja Jung) இந்தியாவைச் சேர்ந்த குறிபார்த்து துப்பாக்கி சுடும் விளையாட்டு வீராங்கனையாவார். புது தில்லியைச் சேர்ந்த இவர் 1971 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 6 ஆம் தேதியன்று பிறந்தார்.
தொழில்
[தொகு]2006 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில்,[1] மகளிர் 50 மீட்டர் சுழல் துப்பாக்கி 3 நிலையில் 670.7 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தையும், மகளிர் 50 மீட்டர் சுழல் துப்பாக்கி 3 (சோடி) நிலையில் அஞ்சலி பகவத்துடன் இணைந்து 1142 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்.[2]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]இந்தியாவைச் சேர்ந்த துப்பாக்கி சுடும் விளையாட்டு வீரரான சமரேசு இயங்கை இவர் திருமணம் செய்து கொண்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "JUNG Anuja". Melbourne 2006 Commonwealth Games Corporation. Archived from the original on 30 October 2009. Retrieved 22 January 2010.
- ↑ "Anuja Jung". Commonwealth Games Federation (in ஆங்கிலம்). Archived from the original on 29 April 2021. Retrieved 2019-11-22.