அனுசுயா சாராபாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அனுசுயா சாராபாய் (Anasuya Sarabhai; (1885 - 1972) இந்தியாவின் பெண்கள் தொழிலாளர் இயக்கத்தின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், இந்தியாவின் மிகப் பழமையான, துகில் தொழிலாளர்கள் சங்கமாகக் கருதப்படும், "அகமதாபாத் சவுளி தொழிலார்கள் சங்கம்" (மஜதூர் மகாஜன் சங்கம்) (Ahmedabad Textile Labour Association (Majadoor Mahajan Sangh) எனும் கூட்டமைப்பை, 1920 இல் உருவாக்கப்பட்டவர்.[1]

பிறப்பு[தொகு]

அனுசுயா சாராபாய், 1885 ஆம் ஆண்டு, நவம்பர் 11 இல், குசராத்து மாநிலத்திலுள்ள அகமதாபாத்த்தில் மருந்து உற்பத்தியாளர்கள், மற்றும் வணிகர்கள் பிரிவைச்சார்ந்த சாராபாய் குடும்பத்தில் பிறந்தார்.[2]

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்[தொகு]

அவளது ஒன்பது வயதில் அவளுடைய பெற்றோர் இறந்துவிட்டார்கள், அதனால் அவளது சகோதரன் அம்பலால் சாராபாயும், மற்றும் ஒரு இளைய சகோதரியும் மாமாவுடன் வாழ அனுப்பப்பட்டனர். மேலும் தனது 13 வது அகவையில் குழந்தைத் திருமணம் செய்யப்பட்ட அனுசுயாவுக்கு, பின்னர் சட்டப்படி திருமண முறிவு செய்யப்பட்டது.[3]

1912 ஆம் ஆண்டு, அவரது சகோதரரின் உதவியுடன் மருத்துவ பட்டப்படிப்பைப் பெறுவதற்காக இங்கிலாந்துக்குச் சென்ற அனுசுயா, மருத்துவ பட்டம் பெறுவதில் ஈடுபட்டது அவரது சைன நம்பிக்கைகளை மீறுவதாக இருந்தது. ஆகையால் இலண்டன் பொருளியல் பள்ளியில் பயின்ற அனுசுயா சாராபாய், பேபியன் சம உடைமை (Fabian socialism) மற்றும் வாக்குரிமை இயக்கம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டார்.[3]

அரசியல் வாழ்க்கை[தொகு]

1913 இல் இந்தியா திரும்பிய சாராபாய், பெண்கள் மற்றும் ஏழைகளின் மேம்பாட்டிற்கும் பணியாற்றியதோடு, அவர் ஒரு பள்ளியையும் தொடங்கினார். பின்னர், 36 மணி நேர வேலை முடிந்து, முற்றும் சோர்வடைந்த நிலையில் வீடு திரும்புகிற பெண் ஆலை தொழிலாளர்களின் மாற்றத்திற்கு தொழிலாளர் இயக்கம் உருவாக்கி ஈடுபட முடிவு செய்தார்.[4]

மரபு மற்றும் இறப்பு[தொகு]

குசராத்தி மொழியில் "மொதபெண்" (Motaben ( தமிழ்:"மூத்த சகோதரி" ) என்றழைக்கப்படும் சாராபாய்,[4] இந்திய சுய பணி புரியும் பெண்கள் சங்கத்தின் (Self Employed Women's Association (SEWA) நிறுவனரும், இந்தியாவின் சமூக சேவகருமான இலா பட் என்பவரிடம் உதவியாளராக பணியாற்றினார்.[5] இந்தியாவின் பெண்கள் தொழிலாளர் இயக்கத்தின் முன்னோடியாகவும், மகாத்மா காந்தியின் நன்மதிப்பைப் பெற்றவருமான அனுசுயா சாராபாய், 1972 இல் இயற்கை எய்தினார். [6]

கொண்டாட்டம்[தொகு]

அனுசுயா சாராபாயின் 132 வது பிறந்தநாளான நவம்பர் 11, 2017 அன்று, கூகிள் நிறுவனம் இந்திய பயனர்கள் மட்டும் காணும் வகையில் தனது முகப்பு பக்கத்தில் அவரது உருவ படிமத்தை காட்சிப்படுத்தி கொண்டாடியது.[7]

சான்றுகள்[தொகு]

  1. "Role and Activities". Ahmedabad Textile Mills' Association. பார்த்த நாள் செப்டம்பர் 11, 2017.
  2. [ http://www.streeshakti.com/bookA.aspx?author=27 ANASUYA SARABHAI (1885–1972) ]
  3. 3.0 3.1 "ART & SOUL Celebrating a life". www.tribuneindia.com. பார்த்த நாள் செப்டம்பர் 11, 2017.
  4. 4.0 4.1 "ART & SOUL Celebrating a lifeWhat Made Anasuya Sarabhai, a Woman Born to Privilege, Become India’s First Woman Trade Union Leader?". www.thebetterindia.com. பார்த்த நாள் செப்டம்பர் 11, 2017.
  5. Sewa founder Ela Bhatt pays tribute to Anasuya Sarabhai
  6. Who is Anasuya Sarabhai?
  7. November 11, 2017 - Anasuya Sarabhai’s 132nd Birthday

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுசுயா_சாராபாய்&oldid=2441924" இருந்து மீள்விக்கப்பட்டது