அனுசபதி
அனுசபதி Anusapati Panji Anusapati | |
---|---|
1248-இல் அனுசபதி ஆட்சியில் கட்டப்பட்ட கிடால் இந்து ஆலயம் | |
சிங்காசாரி அரசர் | |
ஆட்சிக்காலம் | 1227 – 1248 |
முன்னையவர் | கென் அரோக் |
பின்னையவர் | பஞ்சி தோஜெயா (Panji Tohjaya) |
இறப்பு | 1248 |
அரசமரபு | இராஜசா அரசமரபு |
தந்தை | துங்குல் அமெதுங் |
தாய் | கென் தெடிஸ் |
அனுசபதி, அனுசநாதா அல்லது அனுசாபதி (ஆங்கிலம்: Anusapati; Anushanatha; Anushapati இந்தோனேசியம்: Panji Anusapati) என்பவர் இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் இந்தியமயமாக்கப்பட்ட ஓர் இடைக்கால இந்து-பௌத்த இராச்சியமான சிங்காசாரி இராச்சியத்தின் இரண்டாவது அரசர் ஆவார்.
இவர் 1222-ஆம் ஆண்டு முதல் 1248-ஆம் ஆண்டு வரை சிங்காசாரி இராச்சியத்தின் அரசராகப் பதவி வகித்தார். இவர் கென் தெடிஸ் அரசியின் முதல் கணவரான துங்குல் அமெதுங் (Tunggul Ametung) என்பவரின் மகனாவார்.
1227-ஆம் ஆண்டு, தன் தந்தை துங்குல் அமெதுங்கின் மரணத்திற்குப் பழிவாங்கும் நோக்கத்தில் கென் அரோக்கை அனுசபதி கொன்றார்.[1]:185–188
வாழ்க்கை
[தொகு]துமபெல் (Tumapel) எனும் ஜாவானிய இராச்சியத்தின் ஆட்சியாளர் துங்குல் அமெதுங் என்பவர் சிங்காசாரி அரசின் முதல் அரசரான கென் அரோக்கால் கொல்லப்பட்டார் என்று ஜாவானிய வரலாற்றுச் சுவடியான பாராரத்தோன் கூறுகிறது. கிரிஸ் எனும் ஒரு வகை ஜாவானிய கத்தி பயன்படுத்தப்பட்டு துங்குல் அமெதுங் கொல்லப்பட்டார் என்றும் கூறுகிறது.[2]
துங்குல் அமெதுங் கொலை செய்யப்பட்ட பின்னர், கென் அரோக், தன்னை துமபல் பிராந்தியத்தின் புதிய ஆட்சியாளராக அறிவித்துக் கொண்டார்;[3] மற்றும் துங்குல் அமெதுங்கின் மனைவி கென் தெடிஸ் என்பவரையும் திருமணம் செய்து கொண்டார்.
துமபல் பிராந்தியத்தின் தலைவரான பின்னர், 1222-ஆம் ஆண்டில், காண்டர் போரில் (Battle of Genter), கென் அரோக். கேடிரி மன்னர் கீர்த்தஜெயனை (Kertajaya) தோற்கடித்து, சிங்காசாரி என்ற புதிய இராச்சியத்தை நிறுவினார். கேடிரி அரசு, சிங்காசாரி இராச்சியத்தின் கீழ் ஓர் அடிமை மாநிலமாக மாறியது.[4][5]
இறப்பு
[தொகு]ஜாவானிய வரலாற்றுச் சுவடியான பாராரத்தோன் கூற்றுப்படி, கென் அரோக்கைக் கொல்ல அனுசபதி பயன்படுத்திய அதே கிரிஸ் கத்தியால், அனுசபதியின் ஒன்றுவிட்ட சகோதரர் பஞ்சி தோஜெயா என்பவரால் அனுசபதியும் கொல்லப்பட்டார் என அறியப்படுகிறது.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Cœdès, George (1968). The Indianized states of Southeast Asia. University of Hawaii Press.
- ↑ Johns, A. H. (1964). "The Role of Structural Organisation and Myth in Javanese Historiography". The Journal of Asian Studies. 24: 91. doi:10.2307/2050416. JSTOR 2050416.
- ↑ "The #1 AI Storytelling Platform". Story.com (in ஆங்கிலம்). Retrieved 25 February 2025.
- ↑ "Surviving Legend, Surviving 'Unity in Diversity' a Reading of Ken Arok and Ken Dedes Narratives'" (PDF). Novita Dewi: National University of Singapore. Retrieved 25 February 2025.
- ↑ "Ken Arok Ken Dedes Pdf Downloadl". sites.google.com. Retrieved 25 February 2025.
சான்றுகள்
[தொகு]- Poesponegoro & Notosusanto (ed.). 1990. Sejarah Nasional Indonesia Jilid II. Jakarta: Balai Pustaka
- R.M. Mangkudimedja. 1979. Serat Pararaton Jilid 2. Jakarta: Departemen Pendidikan dan Kebudayaan, Proyek Penerbitan Buku Sastra Indonesia dan Daerah
- Slamet Muljana. 1979. Nagarakretagama dan Tafsir Sejarahnya. Jakarta: Bhratara
நூல்கள்
[தொகு]- Coedès, George (1968). The Indianized States of South-East Asia. University of Hawaii Press.
- Irapta, Angelina Chavez (2005). Introduction to Asia: History, Culture, and Civilization. Rex Bookstore, Inc.
- Kinney, Ann R.; Klokke, Marijke J.; Kieven, Lydia (2003). Worshiping Siva and Buddha: The Temple Art of East Java. University of Hawaii Press.