அனுக்கி பிரேமச்சந்திரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனுக்கி பிரேமசந்திரா
Anuki Premachandra
AnukiPR.png
பிறப்புஇலங்கை
படித்த கல்வி நிறுவனங்கள்இலைசியம் பன்னாட்டு பள்ளி, வத்தளை
பணிசமூக ஆர்வலர், பெண்கள் உரிமை ஆர்வலர், எழுத்தாளர், ஊக்கமளிக்கும் பேச்சாளர்

அனுக்கி பிரேமச்சந்திரா (Anuki Premachandra) இலங்கையைச் சேர்ந்த ஒரு சமூக ஆர்வலர் ஆவார். பெண்கள் உரிமை ஆர்வலர், ஊக்கமளிக்கும் பேச்சாளர், தகவல் தொடர்பு நிபுணர், எழுத்தாளர் மற்றும் இணையவழி ஆளுமை என பன்முகங்கங்களுடன் செயல்பட்டு வருகிறார். தற்போது அட்வகேட்டா நிறுவனத்தில் மூலோபாய தகவல் தொடர்பு மேலாளராக பணிபுரிகிறார். [1] [2]

செயல்பாடுகள்[தொகு]

இலங்கையில் சுகாதார உள்ளாடைகள் மீதான வரிகளை குறைக்க வலியுறுத்தி பெண்களின் உரிமைகளுக்காக பிரச்சாரம் செய்ததில் இவர் நன்கு அறியப்பட்டார். [3] [4] இலங்கையில் குறு நிறுவனங்களின் எழுச்சிக்கான சட்ட மற்றும் ஒழுங்குமுறை தடைகளை குறைப்பதற்கும் இவர் பிரச்சாரம் செய்து வருகிறார். [2]

2020 ஆம் ஆண்டில், காசுமோபாலிட்டன் பத்திரிகையின் "35 வயதிற்குட்பட்ட 35" என்ற உயரடுக்கு பெயர்ப் பட்டியலில் இவர் சேர்க்கப்பட்டார். [5] [6] 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தெற்காசியாவில் சாலைப் பாதுகாப்பு- கோவிட்டு-19 தொற்றுநோய்க்கு மத்தியில் நகர்ப்புற நகர்வுகளை மறுபரிசீலனை செய்தல். [7] [8] பற்றிய உலக வங்கியின் மெய்நிகர் நிகழ்வில் பங்கேற்ற பேச்சாளர்களில் ஒருவராக இவரும் பங்கேற்றார்

இலங்கையில் கோவிட்டு -19 தொற்றுநோய்க்கு மத்தியில் 2021 சனவரி முதல் பள்ளி மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்குவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்ததால், பெண்களுக்கான சுகாதாரப் பொருட்களுக்கான வரிகளை நீக்குவதில் அவர் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியடைந்தன. [9] [10]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Anuki Premachandra on sanitary napkin taxes and its effect on cost of living in Sri Lanka". Advocata Institute | Sri Lanka | Independent Policy Think Tank (ஆங்கிலம்). 2021-01-13 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 "Anuki Premachandra". World Bank Live (ஆங்கிலம்). 2020-11-05. 2021-01-13 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Taxing feminine physiology". Sunday Observer (ஆங்கிலம்). 2019-03-09. 2021-01-13 அன்று பார்க்கப்பட்டது.
  4. "It's bloody unfair!". www.dailymirror.lk (English). 2021-01-13 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
  5. "Anuki Premachandra - 35 Under 35 Cosmopolitan Sri Lanka". Cosmopolitan Sri Lanka 35 Under 35 (ஆங்கிலம்). 2020-05-21. 2020-09-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-01-13 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Cosmopolitan Sri Lanka celebrates young movers & shakers in 35 Under 35 list". EconomyNext. 2020-06-04. 2021-01-13 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  7. "Road Safety in South Asia – Rethinking Urban Mobility amid COVID-19". World Bank Live (ஆங்கிலம்). 2020-11-05. 2021-01-13 அன்று பார்க்கப்பட்டது.
  8. "Road Safety in South Asia – Rethinking Urban Mobility amid COVID-19 - YouTube". www.youtube.com. 2021-01-13 அன்று பார்க்கப்பட்டது.
  9. "There's more to it than handing out some free pads". Nation Online. 2021-01-13 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  10. "Plaudits to boost women's healthcare, education". Sunday Observer (ஆங்கிலம்). 2021-01-09. 2021-01-13 அன்று பார்க்கப்பட்டது.