உள்ளடக்கத்துக்குச் செல்

அனில் ரவிபுடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனில் ரவிபுடி
பிறப்பு23 நவம்பர் 1982 (1982-11-23) (அகவை 42)[1][2]
பிரகாசம் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா [3]
பணி
  • திரைப்பட இயக்குநர்
  • திரைக்கதையாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2006 – தற்போது வரை
உறவினர்கள்பி. ஏ. அருண் பிரசாத் (மாமா)

அனில் குமார் ரவிபுடி (Anil Ravipudi) (பிறப்பு: நவம்பர் 23,1982) ஒரு இந்தியத் திரைப்பட இயக்குநரும் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். அதிரடி நகைச்சுவைத் திரைப்படங்களை எழுதி இயக்குவதில் இவர் மிகவும் பிரபலமானவர். இவர் அதிரடி நகைச்சுவை திரைப்படமான படாஸ் (2015) மூலம் இயக்குநராக அறிமுகமானார். இத்திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் சிறந்த அறிமுக இயக்குனருக்கான சைமா விருதை வென்றார். பின்னர், இவர் இரண்டு அதிரடி நகைச்சுவைத் திரைப்படங்களை இயக்கியுள்ளார். அத்திரைப்படங்கள், சுப்ரீம் (2016) மற்றும் ராஜா தி கிரேட் (2017) ஆகியவை ஆகும். இதன் பின்னர் இவர் இயக்கிய நகைச்சுவைத் திரைப்படம் F2: ஃபன் அண்ட் ஃப்ரஸ்ட்ரேஷன் (2019) ஆகும். 50வது இந்திய சர்வதேச திரைப்பட விழா "இந்திய பனோரமா" முதன்மைப் பிரிவில் எஃப்2 இடம்பெற்றது.[4]

ரவிபுடி பின்னர் பெரிய பொருட்செலவிலான படங்களான சரிலேரு நீகெவ்வரு (2020) மற்றும் பகவந்த் கேசரி (2023) ஆகியவற்றை இயக்கும் அளவிற்கு உயர்ந்தார். இவரது 2025 அதிரடி நகைச்சுவை சங்கராந்திகி வாஸ்துனம் அவரது அதிக வசூல் செய்த திரைப்படமாகும்.

தொடக்க கால வாழ்க்கை மற்றும் தொழில்

[தொகு]

2005 ஆம் ஆண்டில் விக்னான் கல்லூரியில் பொறியியல் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பட்டத்தைப் பெற்ற பிறகு , ரவிபுடி தனது மாமா பி. ஏ. அருண் பிரசாத்திடம் உதவி இயக்குநராக இணைந்தார். பின்னர், இவர் சங்கம் (2009) கண்டிரீகா (2011) போன்ற படங்களுக்கு வசன எழுத்தாளராகப் பணியாற்றினார், மேலும் மசாலா (2013) மற்றும் ஆகடு (2014) படங்களுக்கு திரைக்கதையை இணைந்து எழுதினார். சந்தோஷ் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் அறிமுகமான கண்டிரீகா (2011) படத்தில் அனில் ரவிபுடி ஒரு எழுத்தாளராகப் பணியாற்றினார். அதன் பின்னர் படாஸின் திரைக்கதையை எழுதினார்.[5] பின்னர், இவர் ஒரு நண்பர் மூலம் நந்தமூரி கல்யாண் ராமை அணுகினார்.[6] திரைக்கதையை எழுதி முடித்த பிறகு, மீண்டும் கல்யாண் ராமை அணுகினார், இருவரும் படாஸ் திரைப்படத்தில் பணியாற்றத் தொடங்கினர்.[7] இத்திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றதுடன் வசூல்ரீதியாகவும் வெற்றி பெற்றது, மேலும், இத்திரைப்படத்தை கல்யாண் ராம் தயாரித்தார்.[8] சுப்ரீம் (2016) ராஜா தி கிரேட் (2017) எஃப்2 (2019) சரிலேரு நீகெவ்வரு (2020) எஃப்3 (2022) மற்றும் பகவந்த் கேசரி (2023) ஆகிய திரைப்படங்களில் ஒன்றன் பின் ஒன்றாக வெற்றிப் படங்களை இவர் தொடர்ந்து வழங்கினார், இதில் 4 படங்களை தில் ராஜு தயாரித்தார்.

2025 ஆம் ஆண்டில், சங்கராந்தியின் போது வெளியான சங்கராந்திகி வாஸ்துனத்தில், எஃப் 2 மற்றும் எஃப் 3 க்குப் பிறகு, தில் ராஜு மற்றும் வெங்கடேஷுடன் மீண்டும் இணைந்தார். இது கலவையான விமர்சனங்களுடன் தொடங்கப்பட்டாலும், பெரிய அளவில் பணம் ஈட்டும் திரைப்படமாக மாறியது. தெலுங்கு திரைப்படத்தில் அதிக வசூல் செய்த நகைச்சுவைத் திரைப்படமாகவும் வெங்கடேஷுக்கு அதிக வசூல்ரீதியான திரைப்படமாகவும் மாறியது.

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The sequel to F2, F3 will have an extra dose of entertainment, says director Anil Ravipudi". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2020-11-24.
  2. "Anil Ravipudi set for a double hat-trick". The New Indian Express. 9 January 2020. Retrieved 2020-11-24.
  3. "Anil Ravipudi Interview". idlebrain.com. Retrieved 21 January 2015.
  4. "IFFI 2019 Announces Official Films Selection for Indian Panorama 2019". 6 October 2019. Archived from the original on 1 November 2020. Retrieved 10 January 2020.
  5. "Kalyan Ram did a hyper role in 'Pataas' : Anil Ravipudi (Interview)". IndiaGlitz. 22 January 2015. Archived from the original on 31 January 2015. Retrieved 31 January 2015.
  6. "A techie's dream comes true". 16 January 2015 இம் மூலத்தில் இருந்து 31 January 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150131071706/http://www.deccanchronicle.com/150116/entertainment-tollywood/article/techie%E2%80%99s-dream-comes-true. 
  7. "Change in direction". 18 December 2014 இம் மூலத்தில் இருந்து 31 January 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150131071721/http://www.thehindu.com/features/metroplus/writer-anil-ravipudi-will-make-his-directorial-debut-with-kalyan-ram-starrer-pataas/article6704328.ece. 
  8. "Patas jeevi review". idlebrain.com. Retrieved 26 January 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனில்_ரவிபுடி&oldid=4377458" இலிருந்து மீள்விக்கப்பட்டது