உள்ளடக்கத்துக்குச் செல்

அனில் பனச்சூரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனில் பனச்சூரன்
Anil Panachooran
பிறப்புபி.யு. அனில்குமார்
(1969-11-20)20 நவம்பர் 1969
காயம்குளம், இந்தியா
இறப்பு3 சனவரி 2021(2021-01-03) (அகவை 51)
திருவனந்தபுரம் மாவட்டம், கேரளம், இந்தியா
பணி
  • Poet
  • Lyricist
  • Actor
செயற்பாட்டுக்
காலம்
2005 – 2021
விருதுகள்சிறந்த பாடலாசிரியருக்கான பிலிம்பேர் விருது, ஆசியாநெட் திரைப்பட விருதுகள்

அனில் பனச்சூரன் (Anil Panachooran) (20 நவம்பர் 1969 - 3 ஜனவரி 2021) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார். 1969 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதியன்று அனில் பிறந்தார். வழக்கறிஞர், கவிஞர் மற்றும் பாடலாசிரியர் என பன்முகங்களுடன் இயங்கினார். மலையாளத் திரையுலகில் பணியாற்றினார்.[1][2][3] அனிலின் கடைசி பாடல் வரிகள் "வித்தின் செகண்ட்சு (2021) என்ற திரைப்படத்திற்காக எழுதப்பட்டது. இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு தனது பாடலின் கடைசி வரிகளை எழுதி முடித்தார்.

இறப்பு[தொகு]

இந்தியாவில் கோவிட்-19 தொற்றுநோய்களின் போது கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சையில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு 2021 ஆம் ஆண்டு சனவரி மாதம் 3 ஆம் தேதியன்று இறந்தார்.[4] இறந்தவுடன், உறவினர்கள் பிரேத பரிசோதனைக்கு கோரிக்கை விடுத்தனர். பின்னர் காவல்துறையினர் இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்கு பதிவு செய்தனர்.[5]

விருதுகள்[தொகு]

  • சிறந்த பாடலாசிரியருக்கான ஆசியாநெட் திரைப்பட விருது -2008
  • சிறந்த பாடலாசிரியருக்கான பிலிம்பேர் திரைப்பட விருது -2008

மேற்கோள்கள்[தொகு]

  1. "Anil Panachooran". IMDb. பார்க்கப்பட்ட நாள் 2021-01-04.
  2. "അനിൽ പനച്ചൂരാൻ's biography and latest film release news". FilmiBeat (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-04.
  3. "Lawyer pursuing poetry". தி இந்து. 1 October 2006 இம் மூலத்தில் இருந்து 15 அக்டோபர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071015041629/http://www.hindu.com/2006/10/01/stories/2006100100540200.htm. 
  4. "അനില്‍ പനച്ചൂരാന്‍ അന്തരിച്ചു". Mathrubhumi. https://www.mathrubhumi.com/news/kerala/anil-panachoorna-passed-away-1.5328797. 
  5. Senanayake, S.M.H.M.K. (2016-01-04). "Ethical issues in discussing post mortem findings with relatives". Ceylon Medical Journal 60 (4): 165. doi:10.4038/cmj.v60i4.8228. பன்னாட்டுத் தர தொடர் எண்:2386-1274. பப்மெட்:26778401. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனில்_பனச்சூரன்&oldid=3741773" இலிருந்து மீள்விக்கப்பட்டது