அனில் தேஷ்முக்
அனில் தேஷ்முக் | |
---|---|
உள்துறை அமைச்சர் மகாராஷ்டிர அரசு, கோந்தியா மாவட்டப் புரவலர் | |
பதவியில் 30 டிசம்பர் 2019 – 05 ஏப்ரல் 2021 | |
முதலமைச்சர் | உத்தவ் தாக்கரே |
முன்னவர் | தேவேந்திர பட்னாவிஸ் |
சட்டமன்ற உறுப்பினர் கட்டோல் சட்டமன்றத் தொகுதி, மகாராட்டிரா | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 24 அக்டோபர் 2019 | |
முன்னவர் | ஆசீஷ் தேஷ்முக் |
பதவியில் மார்ச் 1995 – அக்டோபர் 2014 (4 முறை) | |
முன்னவர் | சுனில் சிண்டே |
பின்வந்தவர் | ஆசீஷ் தேஷ்முக் |
உணவு, குடிமைப் பொருட்கள் & நுகர்வோர் அமைச்சர், மகாராஷ்டிர அரசு | |
பதவியில் அக்டோபர் 2009 – அக்டோபர் 2014 | |
முதலமைச்சர் | அசோக் சவான் பிரிதிவிராஜ் சவான் |
பின்வந்தவர் | சம்பாஜி பாட்டீல் நிலங்கேகர் |
பொதுப்பணித் துறை அமைச்சர் | |
பதவியில் அக்டோபர் 2004 – அக்டோபர் 2009 | |
முதலமைச்சர் | விலாஸ்ராவ் தேஷ்முக் |
பள்ளிக்கல்வி, தகவல் மற்றும் பொதுத்தொடர்புகள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் | |
பதவியில் அக்டோபர் 1999 – அக்டோபர் 2004 | |
முதலமைச்சர் | விலாஸ்ராவ் தேஷ்முக் |
கல்வி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் | |
பதவியில் மார்ச் 1995 – அக்டோபர் 1999 | |
முதலமைச்சர் | மனோகர் ஜோஷி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 9 மே 1950 கட்டோல், நாக்பூர் மாவட்டம், மகாராட்டிரா, இந்தியா |
இருப்பிடம் | நாக்பூர் |
அனில் வசந்தராவ் தேஷ்முக் (Anil Vasantrao Deshmukh) மகாராட்டிரா மாநில தேசியவாத காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இவர், நவம்பர், 2019 முதல் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக உள்ளார்.[1][2] இவர் 1995-ஆம் ஆண்டு முதல் 2014 வரை கட்டோல் சட்டமன்றத் தொகுதியிலிருந்து நான்கு முறை தொடர்ச்சியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மகாராட்டிரா சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[3][4]
இவர் 1995-ஆம் ஆண்டு முதல் மகாரஷ்டிரா அரசில் கல்வி மற்றும் பண்பாட்டுத் துறை, பள்ளிக்கல்வி, தகவல் மற்றும் பொதுத்தொடர்புகள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை, பொதுப்பணித் துறை, உணவு, குடிமைப் பொருட்கள் & நுகர்வோர் துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். தற்போது உள்துறை அமைச்சராக உள்ளார்.
சர்ச்சைகள் 2021[தொகு]
சர்சைக்களுக்கு பெயர் போன உள்துறை அமைச்சரான அனில் தேஷ்முக்[5], மும்பை மாநகர காவல்துறையிடம், விடுதிக்காரர்கள் மற்றும் கடைக்காரர்களிடமிருந்து மாதம் ரூபாய் 100 கோடி லஞ்சப்பணம் வசூலித்து தருமாறு கூறியதாக, காவல்துறை ஆணையர் பரம் வீர் சிங் குற்றம் சாட்டியுள்ளார். அதனையடுத்து அனில் தேஷ்முக் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நீதி விசாரனை செய்ய முதலமைச்சரை வலியுறுத்தியுள்ளார்.[6]இது தொடர்பாக நடுவன் புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதால், அனில் தேஷ்முக் 5 ஏப்ரல் 2021 அன்று தமது உள்துறை அமைச்சர் பதவிலிருந்து விலகினார்.[7]
நடுவன் புலனாய்வுச் செயலக விசாரணை[தொகு]
மாதந்தோறும் ரூபாய் 100 கோடி லஞ்சப்பணம் வசூலிக்க போலீசாரை கட்டாயப்படுத்திய புகாரில் அனில் தேஷ்முக்கிடம் நடுவண் புலனாய்வுச் செயலகம் 14 ஏப்ரல் 2021 அன்று முதல் விசாரணை துவங்கியது.[8]பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.[9] [10]
அமலாக்கத் துறை வசம் அணில் தேஷ்முக்[தொகு]
பண மோசடி வழக்கில் கைதான அணில் தேஷ்முக்கு எதிராக அமலாக்க இயக்குனரகம் தொடர்ந்த வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், அணில் தேஷ்முக்கை 12 நவம்பர் 2021 வரை அமலாக்கத் துறையினரின் விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டார். [11]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2004/StatisticalReports_MH_2004.pdf
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2012-04-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-03-30 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "2014 Candidate-Wise Vote Share". 2014-11-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-03-30 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ http://www.maharashtra.gov.in/english/government/MinisterEng.pdf
- ↑ Anil Deshmukh: Most controversial Home Minister of Maharashtra
- ↑ Anil Deshmukh 'extortion' case: Maharashtra home minister meets Uddhav Thackeray at CM's home
- ↑ Maharashtra home minister Anil Deshmukh resign
- ↑ ரூ.100 கோடி மாமூல் புகார்; முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக்கிடம் சி.பி.ஐ. விசாரணை
- ↑ Explained: Anil Deshmukh arrested
- ↑ Money laundering case | A timeline of events leading up to Anil Deshmukh’s arrest
- ↑ Bombay High Court remands Anil Deshmukh in ED custody till November 12